Monday, January 2, 2023

1. Mahishasura Marthini+with meaning in Tamil)

 #Mahishasuramardini_Stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்

(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_1

१)

अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दिनुते

गिरिवरविन्ध्यशिरोऽधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते |

भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १ ||


அயி கி3ரிநந்தி3நி நந்தி3தமேதி3நி விஶ்வவிநோதி3நி நந்தி3நுதே

கி3ரிவரவிந்த்3யஶிரோऽதி4நிவாஸிநி விஷ்ணுவிலாஸிநி ஜிஷ்ணுநுதே|

ப4க3வதி ஹே ஶிதிகண்ட2குடும்பி3நி பூ4ரிகுடும்பி4நி பூ4ரிக்ருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்திநி ஶைலஸுதே || 1 ||


अयि  - அயி - புனிதமான அன்னையே!

गिरिनन्दिनि - கிரிநந்திநி - மலைமகளே!

नन्दितमेदिनि - நந்திதமேதிநி - இப்புவியை மகிழ்ச்சியால் நிரப்புகின்றவளே! विश्वविनोदिनि - விஶ்வவிநோதிநி - உலகனைத்திலும் திருவிளையாடல்கள் புரிபவளே!

नन्दिनुते - நந்திநுதே - நந்திகேஶ்வரரால் புகழப்படுபவளே!

गिरिवरविन्ध्यशिरोऽधिनिवासिनि கி3ரிவரவிந்த்3யஶிரோऽதி4நிவாஸிநி - மலைகளிலெல்லாம் மிகச்சிறந்த மலையான விந்த்யமலைச் சிகரங்களில் வஸிப்பவளே!

विष्णुविलासिनि - விஷ்ணுவிலாஸிநி - (ஒரு ஸஹோதரியாக) விஷ்ணுவிற்கு மகிழ்ச்சியளிப்பவளே!

जिष्णुनुते - ஜிஷ்ணுநுதே - இந்த்ரனால் புகழப்படுபவளே!

हे! भगवति - ஹே! பகவதீ!

शितिकण्ठ - ஶிதிகண்ட - நீலநிறக் கழுத்தினையுடைய 

कुटुम्बिनि - குடும்பிநி - (ஶிவனுடைய) உறவானவளே!

भूरिकुटुम्बिनि - பூரிகுடும்பிநி - இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அளவற்ற உயிர்களின் அன்னையே!

भूरिकृते - பூரிக்ருதே - அளவற்ற படைப்புகளைச் செய்பவளே!

हे महिषासुरमर्दिनि - ஹே! மஹிஷாஸுரமர்திநி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

रम्यकपर्दिनि - ரம்யகபர்திநி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே! - மலைமகளே!

(உன்னை வணங்குகிறேன்!)

जय जय - ஜய ஜய - உனக்கு வெற்றி மேல் வெற்றி!


புனிதமான அன்னையே! மலைமகளே! இப்புவியை மகிழ்ச்சியால் நிரப்புகின்றவளே! உலகனைத்திலும் திருவிளையாடல்கள் புரிபவளே! நந்திகேஶ்வரரால் புகழப்படுபவளே!

மலைகளிலெல்லாம் மிகச்சிறந்த மலையான விந்த்யமலைச் சிகரங்களில் வஸிப்பவளே! (ஒரு ஸஹோதரியாக) விஷ்ணுவிற்கு மகிழ்ச்சியளிப்பவளே! இந்த்ரனால் புகழப்படுபவளே! நீலநிறக் கழுத்தினையுடைய ஶிவனுடைய உறவானவளே! இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அளவற்ற உயிர்களின் அன்னையே! அளவற்ற படைப்புகளைச் செய்பவளே! ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே! அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே! 

(உன்னை வணங்குகிறேன்!) உனக்கு வெற்றி மேல் வெற்றி!


#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!

No comments:

Post a Comment