Monday, January 2, 2023

2. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram

#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்


பாகம்-2

२ )

सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते

त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते

दनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ॥ २ ॥


2)

ஸுரவரவர்ஷிணி து3ர்த4ரத4ர்ஷிணி து3ர்முக2மர்ஷிணி ஹர்ஷரதே

த்ரிபு4வநமோஷிணி ஶங்கரதோஷிணி கில்பி3ஷமோஷிணி கோ4ஷரதே|

த3நுஜநிரோஷிணி தி4திஸுதரோஷிணி து3ர்மத3ஶோஷிணி ஸிந்து4ஸுதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்திநி ஶைலஸுதே || 2 ||


सुरवरवर्षिणि -  ஸுரவரவர்ஷிணி - தேவர்களுக்கு வரங்களை மழையாகப் பொழிபவளே!

दुर्धरधर्षिणि  - து3ர்த4ரத4ர்ஷிணி - தீய ஶக்திகள வெல்பவளே!

दुर्मुखमर्षिणि - து3ர்முக2மர்ஷிணி - கோர முகம் கொண்டவனை அழித்தவளே!

हर्षरते - ஹர்ஷரதே - தனதுள்ளே மகிழ்ச்சியானவளே!

त्रिभुवनपोषिणि - த்ரிபு4வநமோஷிணி - மூவுலகிற்கும் ஆதரவானவளே!

शङ्करतोषिणि  - ஶங்கரதோஷிணி - ஶங்கரனாகிய ஶிவனுக்கு த்ருப்தியளிப்பவளே!

किल्बिषमोषिणि  - கில்பி3ஷமோஷிணி - தவறுகளை நீக்குபவளே!

घोषरते - கோ4ஷரதே தீயஶக்திகளை அழித்து வெற்றி முழக்கமிடுபவளே!

दनुजनिरोषिणि  - த3நுஜநிரோஷிணி - வில்லிலிருந்து தோன்றிய தானவர்களின் குலத்தில் பிறந்த தக்ஷன் மகளாகிய 

दितिसुतरोषिणि  - தி4திஸுதரோஷிணி - திதியின் மகனைச்  சினந்து, (நம்மை) கோபதாபங்களிலிருந்து விடுவிப்பவளே!

दुर्मदशोषिणि  - து3ர்மத3ஶோஷிணி - மூடத்தனமான தற்பெருமையென்னும் தீயஶக்தியை அழித்தவளே!

सिन्धुसुते - ஸிந்து4ஸுதே - அலைமகளென்னும் ஸ்ரீலக்க்ஷ்மி வடிவானவளே!

हे महिषासुरमर्दिनि - ஹே!! - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே! மஹிஷாஸுரமர்தி3நி

रम्यकपर्दिनि - ரம்யகபர்திநி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே 

शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


தேவர்களுக்கு வரங்களை மழையாகப் பொழிபவளே! தீயஶக்திகளை வெல்பவளே! கோரமுகம் கொண்டவனை அழித்தவளே! தனதுள்ளே மகிழ்ச்சியானவளே! மூவுலகிற்கும் ஆதரவானவளே! ஶங்கரனாகிய ஶிவனுக்கு த்ருப்தியளிப்பவளே! தவறுகளை நீக்குபவளே! தீய ஶக்திகள அழித்து, வெற்றி முழக்கமிடுபவளே! வில்லிலிருந்து தோன்றிய தானவர்களின் குலத்தில் பிறந்த தக்ஷன் மகளாகிய திதியின் மகனைச் சினந்து நம்மை கோபதாபங்களிலிருந்து விடுவிப்பவளே! மூடத்தனமான தற்பெருமையென்னும் தீயஶக்தியை அழித்தவளே! அலைமகளென்னும் ஸ்ரீலக்க்ஷ்மி வடிவானவளே! ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே! அழகிய பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!

உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!!!


#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!

No comments:

Post a Comment