Monday, January 2, 2023

11. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_11


अयि सुमन: सुमन: सुमन: समन: सुमनोहरकान्तियुते

श्रितरजनी रजनीरजनी रजनीरजनी करवक्त्रवृते |

सुनयनविभ्रमर भ्रमरभ्रमर भ्रमरभ्रमराधिपते

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || ११ ||


அயி ஸுமந: ஸுமந: ஸுமந: ஸுமந: ஸுமநோஹரகாந்தியுதே

ஶ்ரிதரஜநீ ரஜநீரஜநீ ரஜநீரஜநீ கரவக்த்ரவ்ருதே |

ஸுநயநவிப்4ரமர ப்4ரமரப்4ரமர ப்4ரமரப்4ரமராதி4பதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 11 ||


अयि - அயி - புனிதமான அன்னையே!

सुमन: सुमन: सुमन: सुमन - ஸுமந: ஸுமந: ஸுமந: ஸுமந - ஒரு அழகான மற்றும் நல்ல மனதை விட அழகான மற்றும் நல்ல மனதை விடவும் மிக அழகான மற்றும் நல்ல மனதை விடவும் மிக மிக அழகான மற்றும் நல்ல மனதை உடையவளே!

 सुमनोहरकान्तियुते - ஸுமநோஹரகாந்தியுதே - அழகான தோற்றத்தால் அனைவரையும் வஸீகரிப்பவளே!

श्रितरजनी रजनीरजनी रजनीरजनी करवक्त्रवृते - ஶ்ரிதரஜநீ ரஜநீரஜநீ ரஜநீரஜநீ கரவக்த்ரவ்ருதே - இரவுகள் தோறும் ஒளிவீசுகின்ற நிலவின் ஒளிக்கற்றையையும் மறைக்கின்ற அளவுக்கு ஒளிபொருந்திய அழகான முகத்தையுடையவளே! (பௌர்ணமிக்குப் பிறகு வரும் நாட்களில் நிலவு தேய்ந்து பாதியான நிலையில் இரவில் ஒளிரும், அப்போது சூரியன் வந்தபிறகு நிலவின் ஒளி குறைந்து, நீலத்துணியில் வரையப்பட்ட ஓவியம் போல நிலவு தோன்றுவதை இந்த இடத்தில் நினைவிற் கொண்டால் மேற்கண்ட வரியின் பொருள் விளங்கும்!)

सुनयनविभ्रमर भ्रमरभ्रमर भ्रमरभ्रमराधिपते - ஸுநயநவிப்4ரமர ப்4ரமரப்4ரமர ப்4ரமரப்4ரமராதி4பதே - மலர்கள் தோறும் மொய்க்கின்ற தேனீக் கூட்டத்திலுள்ள ஒவ்வொரு தேனீயையும் உனதிரு விழிகளின் அழகால் வென்றவளே!

हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே மஹிஷாஸுரனை வதைத்தவளே!

रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


எங்கள் புனிதமான அன்னையே!

ஒரு அழகான மற்றும் நல்ல மனதை விட அழகான மற்றும் நல்ல மனதை விடவும் மிக அழகான மற்றும் நல்ல மனதை விடவும் மிக மிக அழகான மற்றும் நல்ல மனதை உடையவளே!

அழகான தோற்றத்தால் அனைவரையும் வஸீகரிப்பவளே!

இரவுகள் தோறும் ஒளிவீசுகின்ற நிலவின் ஒளிக்கற்றையையும் மறைக்கின்ற அளவுக்கு ஒளிபொருந்திய அழகான முகத்தையுடையவளே!

மலர்கள் தோறும் மொய்க்கின்ற தேனீக் கூட்டத்திலுள்ள ஒவ்வொரு தேனீயையும் உனதிரு விழிகளின் அழகால் வென்றவளே!

ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!

உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!

No comments:

Post a Comment