Monday, January 2, 2023

16. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்

(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_16


कटितटपीत दुकूलविचित्र मयुखतिरस्कृत चन्द्ररुचे

प्रणतसुरासुर मौलिमणिस्फुर दंशुलसन्नख चन्द्ररुचे |

जितकनकाचल मौलिमदोर्जित निर्भरकुञ्जर कुम्भकुचे

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ||१६ ||


கடிதடபீத து3கூலவிசித்ர மயுக2திரஸ்க்ருத சந்த்3ரருசே 

ப்ரணதஸுராஸுர மௌலிமணிஸ்ஃபுர த3ம்ஶுலஸந்நக2 சந்த்3ரருசே |

ஜிதகநகாசல மௌலிமதோ3ர்ஜித நிர்ப4ரகுஞ்ஜர கும்ப4குசே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 16 ||


चन्द्ररुचे - சந்த்3ரருசே - நிலவின் ஒளியை

मयुखतिरस्कृत - மயுக2திரஸ்க்ருத - மறைக்குமளவுக்கு

कटितटपीत - கடிதடபீத - (உனது) இடையில் அணிந்துள்ள

दुकूलविचित्र - து3கூலவிசித்ர - பல வண்ணங்களிலாலான பட்டுத்துணிகளின் ஒளியும்

चन्द्ररुचे - சந்த்3ரருசே - நிலவின் ஒளியை

मौलिमणिस्फुर - மௌலிமணிஸ்ஃபுர - தலையில் சூடியுள்ள ப்ரகாசத்துடன் ஒளிரும் அணிகலன்களும்

दंशुलसन्नख - த3ம்ஶுலஸந்நக2 - ஒளிரும் உனது கால் விரல் நகங்களும் (வெல்கின்ற உனது அழகைக் கண்டு)

प्रणतसुरासुर - ப்ரணதஸுராஸுர - தேவர்களும் அசுரர்களும் பயபக்தியுடன் உன்னை வணங்குகின்றனர்.

जितकनकाचल - ஜிதகநகாசல - பெருமிதத்தால் பருத்த தலைகளைப் போன்ற குன்றுகளையுடைய பொன்மலையை வெல்லும்

मौलिमदोर्जित - மௌலிமதோ3ர்ஜித - ஶக்தியால் பூரித்த

निर्भरकुञ्जर - நிர்ப4ரகுஞ்ஜர - அபரிமிதமான அன்பால் நிரம்பிய

कुम्भकुचे - கும்ப4குசே - குடம் போன்ற மார்புகளுடைய 

हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே

रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


நிலவின் ஒளியை மறைக்குமளவுக்கு உனது இடையில் அணிந்துள்ள பட்டுத்துணிகளின் ஒளியும், தலையில் சூடியுள்ள ப்ரகாசத்துடன் ஒளிரும் அணிகலன்களும், ஒளிரும் உனது கால் விரல் நகங்களும், பெருமிதத்தால் பருத்த தலைகளைப் போன்ற குன்றுகளையுடைய பொன்மலையை வெல்லும் அபரிமிதமான ஶக்தியாலும், அன்பாலும் நிரம்பிய குடம் போன்ற மார்புகளுடைய உனது அழகைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் பயபக்தியுடன் உன்னை வணங்குகின்றனர்.

ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!

உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!

No comments:

Post a Comment