Monday, January 2, 2023

6. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்

(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_6


६)

अयि शरणागत वैरिवधुवर वीरवराभय दायकरे

त्रिभुवनमस्तक शूलविरोधि शिरोऽधिकृतामय शूलकरे ।

दुमिदुमितामर धुन्दुभिनादमहोमुखरीकृत दिङ्गकरे

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ।। ६ ।।


6)

அயி ஶரணாக3த வைரிவது4வர வீரவராப4ய தா3யகரே

த்ரிபு4வநமஸ்தக ஶூலவிரோதி4 ஶிரோऽதி4க்ருதாமய ஶூலகரே |

து3மிது3மிதாமர து4ந்து3பிநாத3மஹோமுக2ரீக்ருத தி3ங்க3கரே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 6 ||


त्रिभुवनमस्तक - த்ரிபு4வநமஸ்தக - மூவுலகங்களுக்கும் தலைவனான ஶிவனுடைய

शूलविरोधि - ஶூலவிரோதி4 - சூலத்தை எதிர்க்கின்றவர்களுடைய 

शिरोऽधिकृतामय - ஶிரோऽதி4க்ருதாமய - தலையை ஶிவன் தனது சூலத்தால் கொய்கின்றபோது

 दुमिदुमितामर - து3மிது3மிதாமர - நீரானது சலசலவென்ற ஓசையோடு எல்லா திசைகளிலும் பரவுவதைப் போன்று

धुन्दुभिनादमहोमुखरीकृत - து4ந்து3பிநாத3மஹோமுக2ரீக்ருத - துந்துபி பெரிதாக எழுப்பும் ஒலி எல்லா திசைகளிலும்

 दिङ्गकरे - தி3ங்க3கரே - பரவும்.

(அதனால் மிகுந்த அச்சத்துடன்)

वीरवैरिवधुवर - வீர வைரிவது4வர - (வேறு புகலிடம் ஏதுமின்றி நீயே அடைக்கலம் என்று உன்னைச் சரணடைந்த) வீரர்கள் மற்றும் அவர்தம் மனைவியருக்கு

वराभय - வராப4ய - அபயமென்ற வரத்தை

दायकरे - தா3யகரே - தயையுடன் (கருணையோடு) அருள்பவளே!

अयि - (எங்கள்) புனிதமான அன்னையே!

हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


மூவுலகங்களுக்கும் தலைவனான ஶிவனுடைய சூலத்தை எதிர்க்கின்றவர்களுடைய தலையை ஶிவன் தனது சூலத்தால் கொய்கின்றபோது நீரானது சலசலவென்ற ஓசையோடு எல்லா திசைகளிலும் பரவுவதைப் போன்று துந்துபி பெரிதாக எழுப்பும் ஒலி எல்லா திசைகளிலும் பரவும்.

(அதனால் மிகுந்த அச்சத்துடன் வேறு புகலிடம் ஏதுமின்றி நீயே அடைக்கலம் என்று உன்னைச் சரணடைந்த) வீரர்கள் மற்றும் அவர்தம் மனைவியருக்கு அபயமென்ற வரத்தை தயையுடன் (கருணையோடு) அருள்பவளே! எங்கள் புனிதமான அன்னையே! ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே! அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே! உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!

No comments:

Post a Comment