#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तेत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_5
५)
अयि रणदुर्मद शत्रुवधोऽदित दुर्धरनिर्जर शक्तिभृते
चतुरविचार धुरीणमहाशिव दूतकृत प्रमथाधिपते ।
दुरितदुरीह दुराशयदुर्मति दानवदूत कृतान्तमते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ।। ५ ।।
5)
அயி ரணது3ர்மத3 ஶத்ருவதோ4ऽதி3த து3ர்த4ரநிர்ஜர ஶக்திப்4ருதே
சதுரவிசார து4ரீணமஹாஶிவ தூ4தக்ருத ப்ரமதா2தி4பதே |
து3ரிதது3ரீஹ து3ராஶயது3ர்மதி தா3நவதூ3த க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 5 ||
अयि - அயி - புனிதமான அன்னையே
दुरितदुरीह - துரிததுரீஹ - வஞ்சகம் மற்றும் தவறான சிந்தனையையுடைய
दुराशयदुर्मति - துராஶயதுர்மதி - பேராசை மற்றும் மோசமான புத்தியுள்ள
रणदुर्मद - ரணதுர்மத - மோசமான எதிரிகளுடன் போரிட்டு
शत्रुवधोऽदित - ஶத்ருவதோऽதித - எதிரிகளை வதைப்பதற்காகத் தோன்றிய
प्रमथाधिपते - ப்ரமதாதிபதே - பேய்கள் மற்றும் கணங்களால் சூழப்பட்ட இறைவன் ஶிவனுக்கு
दूतकृते - தூதக்ருதே - தூதராகி
दानवदूत - தாநவதூத - ஶும்ப நிஶும்பர்களின் தூதினை நிராகரித்து
कृतान्तमते - க்ருதாந்தமதே - அவர்களுக்கு முடிவு கட்டிய
धुरीणमहाशिव - துரீணமஹாஶிவ - மஹாஶிவ - மஹாஶிவனால் குறிப்பிடத்தக்க
दुर्धरनिर्जर - துர்தரநிர்ஜர - என்றும் புதுமையான, யாராலும் தடுக்க இயலாத
शक्तिभृते - ஶக்திப்ருதே - ஶக்தியையுடைய
चतुरविचार - சதுரவிசார - ஆழ்ந்து சிந்திப்பதில் மிகவும் அறிவார்ந்தவளே!
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்திநி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே! - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
புனிதமான அன்னையே! வஞ்சகம், தவறான சிந்தனை, பேராசை மற்றும் மோசமான புத்தியுள்ள மோசமான எதிரிகளுடன் போரிட்டு வதைப்பதற்காகத் தோன்றியவளே!
பேய்கள் மற்றும் கணங்களால் சூழப்பட்ட இறைவன் ஶிவனுக்குத் தூதராகி, ஶும்ப நிஶும்பர்களின் தூதினை நிராகரித்து, அவர்களுக்கு முடிவு கட்டியவளே!
மஹாஶிவனால் குறிப்பிடத்தக்க, என்றும் புதுமையான, யாராலும் தடுக்க இயலாத ஶக்தியையுடையவளே! ஆழ்ந்து சிந்திப்பதில் மிகவும் அறிவார்ந்தவளே! ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!
உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment