#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनी स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_4
४)
अयि शतखण्ड विखण्डितरुण्ड वितुण्डितशुण्ड गजाधिपते
रिपुगजगण्ड विदारणचण्ड पराक्रमशुण्ड मृगाधिपते ।
निजभुजदण्ड निपातितखण्ड विपातितमुण्ड भटाधिपते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ।। ४ ।।
4)
அயி ஶதக2ண்ட3 விக2ண்டி3தருண்ட3 விதுண்டி3தஶுண்ட3 க3ஜாதி4பதே
ரிபுக3ஜக3ண்ட3 விதா3ரணசண்ட3 பராக்ரமஶுண்ட3 ம்ருகா3தி4பதே |
நிஜபு4ஜத3ண்ட3 நிபாதிதக2ண்ட3 விபாதிதமுண்ட3 ப4டாதி4பதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 4 ||
अयि - அயி - புனிதமான அன்னையே!
मृगाधिपति - ம்ருகாதிபதி - விலங்குகளின் அரசனான ஸிம்ஹம்
रिपु - ரிபு - எதிரிகளுடைய
पराक्रमशुण्ड - பராக்ரமஶுண்ட - வலிமையான துதிக்கையை உடைய
गजाधिपते - கஜாதிபதே - யானைகளை வென்று
गजगण्ड - கஜகண்ட - யானைகளின் முகத்தை
विदारणचण्ड - விதாரணசண்ட - கொடூரமாகக் கிழித்து
वितुण्डितशुण्ड - விதுண்டிதஶுண்ட - துதிக்கைகளை வெட்டி,
विखण्डित - விகண்டித - தலையற்ற உடல்களை
शतखण्ड - ஶதகண்ட - நூறு துண்டுகளாக்கிட, (அந்த ஸிம்ஹத்தின் மேலமர்ந்து)
निजभुजदण्ड - நிஜபுஜதண்ட - ஆயுதத்தைக் கையிலேந்தி
मुण्ड - முண்ட - தீயவர்களின் தலையை
निपातितखण्ड - நிபாதிதகண்ட - பல துண்டுகளாக வீழும்படி
निपातित - நிபாதித - கீழே வீழ்த்தி
भटाधिपते - படாதிபதே - போர் வீரர்கள் (சண்டாஸுரன் மற்றும் முண்டாஸுரர்களை) வென்றவளே!
हे महिषासुरमर्दिनि - ஹே! மஹிஷாஸுரமர்திநி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்திநி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
புனிதமான அன்னையே! வலிமையான ஸிம்ஹம் எதிரிகளுடைய வலிமையான துதிக்கையை உடைய யானைகளை வென்று, அவற்றின் முகத்தைக் கொடூரமாகக் கிழித்து, துதிக்கைகளை வெட்டி, அவற்றின் தலையற்ற உடல்களை நூறு துண்டுகளாக்கிட, அந்த ஸிம்ஹத்தின் மேலமர்ந்து, ஆயுதத்தைக் கையிலேந்தி, தீயவர்களின் தலையைப் பல துண்டுகளாக வீழும்படி கீழே வீழ்த்தி, அவர்களுடைய போர் வீரர்களையும், சண்டாஸுரன் மற்றும் முண்டாஸுரர்களை வென்றவளே! ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே! அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே! உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment