#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_7
अयि निजहुङ्कृति मात्रनिराकृत धूम्रविलोचन धूम्रशते
समरविशोषित शोणितबीज समुद्भवशोणित बीजलते ।
शिवशिवशुम्भ निशुम्भमहाहव तर्पितभूत पिशाचरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते।। ७ ।।
அயி நிஜஹுங்க்ருதி மாத்ரநிராக்ருத தூ4ம்ரவிலோசந தூ4ம்ரஶதே
ஸமரவிஶோஷித ஶோணிதபீ3ஜ ஸமுத்3ப4வ ஶோணித பீ3ஜலதே |
ஶிவஶிவஶும்ப4 நிஶும்ப4மஹாஹவ தர்பிதபூ4த பிஶாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 7 ||
धूम्रविलोचन - தூ4ம்ரவிலோசந - புகையைக் கக்குகின்ற விழிகளையுடைய தூம்ரவிலோசனன் என்ற அஸுரனை
धूम्रशते - தூ4ம்ரஶதே - துகளாகிப் போகுமாறு
मात्रनिराकृत - மாத்ரநிராக்ருத - வெறும் ஹூங்கார ஒலியின் மூலமாக மட்டுமே
निजहुङ्कृति - நிஜஹுங்க்ருதி - தன்னுடைய ஹூங்கார ஒலியின் மூலம் (புகையாக்கி அழித்தவளே!)
शुम्भनिशुम्भम - ஶும்ப4நிஶும்ப4 - ஶும்பநிஶும்பர்களுடனான
शिवशिव - ஶிவஶிவ - பெரும் போரில்
शोणितबीज - ஶோணிதபீ3ஜ - (சிந்துகின்ற அவர்களுடைய) இரத்தத் துளிகளிலிருந்து
बीजलते - பீ3ஜலதே - விதைக் கொடியிலிருந்து (உற்பத்தியாவதைப் போன்று)
समुद्भवशोणित - ஸமுத்3ப4வஶோணித - அவர்களைப் போன்றே உற்பத்தியான அஸுரர்களின் இரத்தத் துளிகளை
तर्पितभूत पिशाचरते - தர்பிதபூ4த பிஶாசரதே - ஶிவனுக்குப் பணிவிடை செய்யும் பேய்கள், கணங்கள் மற்றும் பிசாசுகள் (த்ருப்தியடையும் விதமாக)
(பூமியில் விழாவண்ணம் குடிக்க வைத்து) அழித்து
समरविशोषित - ஸமரவிஶோஷித - (ஶும்பநிஶும்பர்களுடைய இரத்தத்தை) முற்றிலுமாக உலர வைத்து அவர்களை அழித்தவளே!
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
अयि - அயி - புனிதமான அன்னையே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
புகையைக் கக்குகின்ற விழிகளையுடைய தூம்ரவிலோசனன் என்ற அஸுரனை வெறும் தன்னுடைய ஹூங்கார ஒலியின் மூலமே துகளாகிப் போகுமாறு அழித்தவளே!
ஶும்பநிஶும்பர்களுடனான பெரும் போரில் அவர்களிடமிருந்து பூமியில் சிந்தும் இரத்தத் துளிகளிலிருந்து உருவான அவர்களைப் போன்ற எண்ணற்ற அஸுரர்கள் மேலும் உருவாகாமல் அந்த இரத்தத் துளிகளை ஶிவனுக்குப் பணிவிடை செய்யும் பேய்கள், கணங்கள் மற்றும் பிசாசுகள் த்ருப்தியடையும் விதமாக பூமியில் விழாவண்ணம் குடிக்க வைத்து அழித்து,
ஶும்பநிஶும்பர்களுடைய இரத்தத்தை முற்றிலுமாக உலர வைத்து அவர்களை அழித்தவளே! ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே! அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே! எங்கள் புனிதமான அன்னையே! உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment