#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_10
जय जय जप्य जयोजयशब्द परस्तुति तत्परविश्वनुते
झणझणझिञ्झिमि झिङ्कृत नूपुरशिञ्जितमोहित भूतपते |
नटित नटार्ध नटीनटनायक नाटितनाट्य सुगानरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १० ||
ஜய ஜய ஜப்ய ஜயோஜயஶப்3த3 பரஸ்துதி தத்பரவிஶ்வநுதே
ஜ4ணஜ4ணஜி4ஞ்ஜி4மி ஜி4ங்க்ருத நூபுரஶிஞ்ஜிதமோஹித பூ4தபதே|
நடிதநடார்த4 நடீநடநாயக நாடிதநாட்ய ஸுகா3நரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 10 ||
सुगानरते - ஸுகா3நரதே - ஒரு இனிமையான பாடல் ஒலிக்கும்போது
नटनायक - நடநாயக - ஆடலின் நாயகனான
भूतपते - பூ4தபதே - பேய்கள் மற்றும் கணங்களின் தலைவனான ஈஶனின்
नाटितनाट्य - நாடிதநாட்ய - நாட்டியம் நிகழும்போது
झणझणझिञ्झिमि - ஜ4ணஜ4ணஜி4ஞ்ஜி4மி - ஜணஜணஜிஞ்ஜிமி என்று
झिङ्कृत - ஜிங்க்ருத - ஒலிக்கின்ற
नूपुरशिञ्जित - நூபுரஶிஞ்ஜித - கொலுசுகளின் ஒலியின் மூலம் ஶிவனை ஈர்த்து
नटार्ध - நடார்த - நடனமாடும் ஶிவனின் பாதியாக
नटित - நடித - நடிக்கின்ற
नटी - நடீ - ஆடலரசியே!
जयोजयशब्द - ஜயோஜயஶப்த - வெற்றி வெற்றி என்று முழக்கமிடுகின்ற
जप्य - ஜப்ய - உன்னையே ஜபிக்கின்ற
परस्तुति - பரஸ்துதி - பிறரால் புகழப்படுகின்ற
जय जय - ஜய ஜய - உனக்கு வெற்றி மேல் வெற்றி என்று
तत्परविश्वनुते - தத்பரவிஶ்வநுதே - உலகத்தாரால் போற்றப்படுகின்ற அன்னையே!
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்திநி
- ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்திநி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
ஒரு இனிமையான பாடல் ஒலிக்கும்போது, ஆடலின் நாயகனான, பேய்கள் மற்றும் கணங்களின் தலைவனான ஈஶனின் நாட்டியம் நிகழும்போது, "ஜணஜணஜிஞ்ஜிமி" என்று ஒலிக்கின்ற கொலுசுகளின் ஒலியின் மூலம் ஶிவனை ஈர்த்து, நடனமாடும் ஶிவனின் பாதியாக நடிக்கின்ற (அல்லது) நடனமாடுகின்ற ஆடலரசியே! வெற்றி வெற்றி என்று முழக்கமிடுகின்ற, உன்னேயே ஜபிக்கின்ற, உனக்கு வெற்றி மேல் வெற்றி என்று பிறரால் புகழப்படுகின்ற உலகத்தாரின் அன்னையே!
ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே! அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே! உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment