#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तोत्रम् மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_8
धनुरनुषङ्ग रणक्षणसङ्ग परिस्फुरदङ्ग नटत्कटके
कनकपिशङ्ग पृषत्कनिषङ्ग रसद्भटशृङ्ग हताबटुके |
कृतचतुरङ्ग बलक्षितिरङ्ग घटद्बहुरङ्ग रटद्बटुके
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || ८ ||
த4நுரநுஷங்க3 ரணக்ஷணஸங்க3 பரிஸ்ஃபுரத3ங்க3 நடத்கடகே
கநகபிஶங்க3 ப்ருஷத்கநிஷங்க3 ரஸத்3ப4டஶ்ருங்க3 ஹதாப3டுகே |
க்ருதசதுரங்க3 பலக்ஷிதிரங்க3 க4டத்3ப4ஹுரங்க3 ரடத்3ப3டுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 8 ||
रणक्षणसङ्ग - ரணக்ஷணஸங்க3 - ஒவ்வொரு முறையும் நிகழும் போரில்
कृतचतुरङ्ग - க்ருதசதுரங்க3 - எதிரிகளின் நால்வகைப் படைகளும்
बलक्षितिरङ्ग - பலக்ஷிதிரங்க3 - பலம் குன்றும்படி
रसद्भटशृङ्ग - ரஸத்3ப4டஶ்ருங்க3 - போரிடுபவர்களின் குரலுக்கு மேலான குரலில்
रटद्बटुके - ரடத்3ப3டுகே - சப்தமிடும் எதிரியின் வீரர்களின்
घटद्बहुरङ्ग - க4டத்3ப4ஹுரங்க3 - பல்வேறு விதமான எதிரிகளின் தலைகளைக் கொய்வதற்காக
हताबटुके - ஹதாப3டுகே - எதிரிகள் வீழும்படி
पृषत्कनिषङ्ग - ப்ருஷத்கநிஷங்க3 - அம்பு இணைந்த
धनुरनुषङ्ग - த4நுரநுஷங்க3 - வில்லின் அசைவிற்கேற்ப
परिस्फुरदङ्ग - பரிஸ்ஃபுரத3ங்க3 - ஒளிரும் புஜங்களும்
कनकपिशङ्ग - கநகபிஶங்க3 - பொன்னிறம், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ள
नटत्कटके - நடத்கடகே - கை வளையல்களும் நடனமிடும்
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
ஒவ்வொரு முறையும் நிகழும் போரில் எதிரிகள் வீழும்படி, சப்தமிடும் வீரர்களின் நால்வகைப் படைகளும் பலம் குன்றும்படி, போரிடுபவர்களின் குரலுக்கு மேலான உரத்த குரலில் சப்தமிட்டு, பல்வேறு விதமான எதிரிகளின் தலைகளைக் கொய்வதற்காக அம்பு இணைந்த வில்லின் அசைவிற்கேற்ப ஒளிரும் புஜங்களும், கையிலணிந்துள்ள பொன்னிற, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ள வளையல்கள் நடனமிடும்!
ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே! அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே! உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment