Monday, January 2, 2023

19. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்

(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_19


कनकलसत्कलसिन्धुजलैरनुषिञ्चति तेगुणरङ्गभुवम्

भजति से किं न शचीकुचकुम्भतटीपरिरम्भसुखानुभवम् |

तव चरणं शरणं करवाणि नतामरवाणि निवासि शिवम्

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १९ ||


கநகலஸத்கலஸிந்து4ஜலைரநுஷிஞ்சதி தேகு3ணரங்க3பு4வம்

ப4ஜதி ஸ கிம் ந ஶசீகுசகும்ப4தடீபரிரம்ப4ஸுகா2நுபவம் |

தவ சரணம் ஶரணம் கரவாணி நதாமரவாணி நிவாஸி ஶிவம்

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 19 ||


कनकलसत्कल - கநகலஸத்கல - மெலிதான, சலசலவென்ற ஓசையோடு பொன்னைப் போல மின்னுகிற

सिन्धुजल - ஸிந்து4ஜல - நதியின் நீர்

अनुसिञ्चति - அநுஸிஞ்சதி - அருகே தெளித்து சிதறுவதைப் போல

तेगुणरङ्गभुवम् - தேகு3ணரங்க3பு4வம் - உனது இருப்பிடத்தில் அழகாகக் காட்சியளிக்கும் உனது குணங்களை

कुचकुम्भ - குசகும்ப4 - குடம் போன்ற மார்புகளிலிருந்து 

तट - தட - வழிகின்ற शची - ஶசீ - அன்பு, தயை, கருணை 

परिरम्भ - பரிரம்ப4 - காணும்

स भजति किं न सुखानुभवम् - உன்னை வழிபடும் அவன் ஏன் ஸுகமான அநுபவத்தைப் பெற மாட்டான்?

 करवाणि - கரவாணி - பேச்சுக்கு அதிபதியான தேவி மஹாஸரஸ்வதீ!

नतामरवाणि - நதாமரவாணி - உனது திருவடிகளே

शरणम् - ஶரணம் - அடைக்கலம் என்று

शिवम् - ஶிவம் - புனிதமான

तव चरणम् - தவ சரணம் - உன்னுடைய பாதங்களில்

निवासि - நிவாஸி - சரணடைகிறேன்

हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


குடம் போன்ற மார்புகள் உடைய உனது இருப்பிடத்திலிருந்து வழிகின்ற அன்பு, தயை, கருணை ஆகிய உன்னுடைய குணங்கள் அழகாகக் காட்சியளிப்பதைக் காணும் உன்னை வழிபடுகின்ற எவன்தான் மெலிதான சலசலவென்ற ஓசையோடு பொன்னைப் போல மின்னுகிற நதியின் நீர் தெளித்து சிதறுவதைப் போல ஸுகமான அநுபவத்தைப் பெற மாட்டான்?


பேச்சுக்கு அதிபதியான தேவி மஹாஸரஸ்வதீ! உனது திருவடிகளே அடைக்கலம் என்று புனிதமான உனது பாதங்களில் சரணடைகிறேன்!


ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!

உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!

No comments:

Post a Comment