#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_15
करमुरलीरव वीजितकूजित लज्जितकोकिल मञ्जुमते
मिलितपुलिन्द मनोहरगुञ्जित रञ्जितशैल निकुञ्जगते |
निजगणभूत महाशबरीगण सद्गुणसम्भृत केलितले
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १५ ||
கரமுரலீரவ வீஜிதகூஜித லஜ்ஜிதகோகில மஞ்ஜுமதே
மிலிதபுலிந்த3 மநோஹரகுஞ்ஜித ரஞ்ஜிதஶைல நிகுஞ்ஜக3தே |
நிஜக3ணபூ4த மஹாஶப3ரீக3ண ஸத்3கு3ணஸம்ப்4ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 15 ||
करमुरलीरव - கரமுரலீரவ - கையிலுள்ள புல்லாங்குழலின் ஒலி
वीजितकूजित - வீஜிதகூஜித - (உனது குரலுக்கு) சற்றும் மாறுதலில்லாமல்
लज्जितकोकिल - லஜ்ஜிதகோகில - குயிலையும் வெட்கப் படுமளவுக்கு
मञ्जुमते - மஞ்ஜுமதே - மிகவும் அழகாக உள்ளது.
मिलितपुलिन्द - மிலிதபுலிந்த3 - புலிந்த இனப் பழங்குடியினப் பெண்களுடன் இணைந்து
मनोहरगुञ्जित - மநோஹரகுஞ்ஜித - மனதை மயக்கும் பாடல்களைப் பாடியவாறு
रञ्जितशैल - ரஞ்ஜிதஶைல - வண்ண மலர்களால் நிறமேறிய மலையின்
निकुञ्जगते - நிகுஞ்ஜக3தே - பள்ளங்களில் நடை பயில்பவளே
निजगणभूत - நிஜக3ணபூ4த - தன்னுடைய கணங்களில் ஒன்றான
महाशबरीगण - மஹாஶப3ரீக3ண - மலைவாழ் பெண்கள் கூட்டத்தின்
सद्गुणसम्भृत - ஸத்3கு3ணஸம்ப்4ருத - நற்குணங்கள் நிரம்பிய
केलितले - கேலிதலே - விளையாடுகின்றவளே
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
கையிலுள்ள புல்லாங்குழலின் ஒலி உனது குரலுக்கு சற்றும் மாறுதலில்லாமல் ஒலிக்கிறது. உனது குரல் குயிலையும் வெட்கப் படுமளவுக்கு மிகவும் அழகாக உள்ளது.
புலிந்தர்கள் என்னும் பழங்குடியினப் பெண்களுடன் இணைந்து, மனதை மயக்கும் பாடல்களைப் பாடியவாறு வண்ண மலர்களால் நிறமேறிய மலையின் பள்ளத்தாக்குகளில் நடைபயில்கிறாய்!
உன்னுடைய கணங்களில் ஒன்றான, நற்குணங்கள் நிரம்பிய மலைவாழ் பெண்கள் கூட்டத்துடன் இணைந்து விளையாடுகிறாய்!
ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!
உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment