Monday, January 2, 2023

17. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்

(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_17


विजितसहस्रकरैक सहस्रकरैक सहस्रकरैकनुते

कृतसुरतारक सङ्गरतारक सङ्गरतारक सूनुसुते |

सुरथसमाधि समानसमाधि समाधिसमाधि सुजातरते

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १७ ||


விஜிதஸஹஸ்ரகரைக ஸஹஸ்ரகரைக ஸஹஸ்ரகரைகநுதே

க்ருதஸுரதாரக ஸங்க3ரதாரக ஸங்க3ரதாரக ஸூநுஸுதே |

ஸுரத2ஸமாதி 4 ஸமாநஸமாதி4 ஸமாதி4ஸமாதி4 ஸுஜாதரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 17 ||


विजितसहस्रकरैक - விஜிதஸஹஸ்ரகரைக - ஆயிரக்கணக்கான எதிரிகளை உன் ஆயிரம் கரங்களால் வென்றதன் மூலம் सहस्रकरैक - ஸஹஸ்ரகரைக - ஆயிரக்கணக்கான பக்தர்கள் உருவாகி

सहस्रकरैकनुते - ஸஹஸ்ரகரைகநுதே - உனது புகழ் பாட வைத்தாய்

कृतसुरतारक - க்ருதஸுரதாரக - தேவர்களைக் காக்க

सङ्गरतारक - ஸங்க3ரதாரக - தாரகாஸுரனுக்கு எதிராகப் போரிட

सङ्गरतारक - ஸங்க3ரதாரக - தாரகாஸுரனுக்கு எதிராகப் போரிட்டு அவனையழிக்க

सूनुसुते - ஸூநுஸுதே - உனது மகனைத் தூண்டினாய்

सुरथसमाधि - ஸுரத2ஸமாதி - மன்னன் ஸுரதாவின் பக்தி சிந்தனை

समानसमाधि - ஸமாநஸமாதி4 - உலக நன்மைக்காக மன்னன் ஸுரதாவின் பக்தி சிந்தனைக்கு இணையாக

समाधिसमाधि - ஸமாதி4ஸமாதி4 - ஆன்மீக அறிவுக்கான பக்தி சிந்தனை

सुजातरते - ஸுஜாதரதே - இரண்டிலும் மகிழ்ச்சி அடைகிறாய்

हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


ஆயிரக்கணக்கான எதிரிகளை உன் ஆயிரம் கரங்களால் வென்றதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உருவாகி உனது புகழைப் பாட வைத்தாய்.


தேவர்களைக் காக்க, தாரகாஸுரனுக்கு எதிராகப் போரிட, போரிட்டு அவனையழிக்க உனது மகனைத் தூண்டினாய்!


மன்னன் ஸுரதாவின் பக்தி சிந்தனை, மற்றும் அவரது பக்தி சிந்தனைக்கு இணையாக உலக நன்மைக்கான ஆன்மீக அறிவுக்கான பக்தி சிந்தனை இரண்டிலும் மகிழ்ச்சி அடைகிறாய்!


ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!

உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!

No comments:

Post a Comment