Monday, January 2, 2023

20. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்

(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_20


तव विमलेन्दुकुलं वदनेन्दुमलं सकलं ननु कूलयते

किमु पुरुहूतपुरीन्दु मुखी सुमुखीभिरसौ विमुखिक्रियते |

मम तु मतं शिवनामधने भवती कृपया किमुत क्रियते

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || २० ||


தவ விமலேந்து3குலம் வத3நேந்து3மலம் ஸகலம் நநு கூலயதே

கிமு புருஹூதபுரீந்து3 முகீ2 ஸுமுகீ2பி4ரஸௌ விமுகீ2க்ரியதே |

மம து மதம் ஶிவநாமத4நே ப4வதீ க்ருபயா கிமுத க்ரியதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 20 ||


तव - தவ - உன்னுடைய

विमलेन्दुकुलम् - விமலேந்து3குலம் - களங்கமற்ற, சந்த்ரனையொத்த

वदनम् - வதநம் - முகம்

इन्दु - இந்து - சந்த்ரன் 

मल - மல - தூய்மையற்ற

 सकलम् - ஸகலம் - அனைத்து

ननु - நநு - உண்மையாகவே

कूल - கூல - காக்கின்றது

यत - யத - நீக்கி

किमु - கிமு - ஏன்

पुरुहूतपुरी - புருஹூதபுரீ - இந்திர சபையில்

इन्दु - இந்து - சந்த்ரனைப் (போன்ற)

मुखी - முகீ2 - முகத்தை (உடைய)

सुमुख - ஸுமுக2 - அழகான முகத்தையுடைய

अदस् - அத3ஸ் - இதனால்

विमुख - விமுக2 - புறக்கணிக்க

क्रिया - க்ரியா - செய்வதிலிருந்து

मम तु मतम् - மம து மதம் - என்னுடைய கருத்துப்படி

शिवनामधन - ஶிவநாமம் என்னும் பெருஞ்செல்வத்தை

भवती - ப4வதீ - உனது கருணை

कृपया - க்ருபயா - அருள்

किमुत - கிமுத - மாறாக எவ்வாறு

क्रिया - க்ரியா - இயலும்

हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


களங்கமற்ற சந்த்ரனையொத்த உனது அழகிய திருமுகம் உண்மையாகவே எனது அனைத்து விதமான அசுத்தங்களையும் நீக்கி என்னைக் காக்கின்றது. அவ்வாறில்லை எனில் எனது மனம் எவ்வாறு சந்திரனைப் போன்ற அழகான முகத்தையுடைய இந்திரலோகத்தில் உள்ள அழகான பெண்கள் வசம் எனது மனம் செல்லும்? (நிச்சயமாக செல்லாது!)


எனது கருத்துப்படி, உனது கருணையில்லாமல் நான் எவ்வாறு என்னுள் ஶிவநாமமெனும் பெருஞ்செல்வம் இருப்பதை உணர முடியும்?


ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!

உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!

No comments:

Post a Comment