#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_18
पदकमलं करुणानिलये वरिवस्यति योऽनुदिनं सुशिवे
अयि कमले कमलानिलये कमलानिलयः स कथं न भवेत् |
तव पदमेव परम्फदमित्यनुशीलयतो मम किं न शिवे
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १८ ||
பத3கமலம் கருணாநிலயே வரிவஸ்யதி யோऽநுதி3நம் ஸுஶிவே
அயி கமலே கமலாநிலயே கமலாநிலய: ஸ கத2ம் ந ப4வேத் |
தவ பத3மேவ பரம்பத3மித்யநுஶீலயதோ மம கிம் ந ஶிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 18 ||
सुशिवे - ஸுஶிவே - மிகவும் புனிதமான (உனது)
पदकमलम् - பத3கமலம் - பாதத் தாமரை (க்கு)
वरिवस्यति - வரிவஸ்யதி - பக்தியுடன் பணி புரிபவர்களுக்கு
करुणानिलये - கருணாநிலயே - கருணையின் உறைவிடமாகத் திகழும்
अयि - அயி - (எங்கள்) புனிதமான அன்னையே!
सुशिवे - ஸுஶிவே - மிகவும் புனிதமான
कमलानिलयः - கமலாநிலய: - தாமரையில் வஸிக்கும்
कमले - கமலே - (உன்) தாமரைப் பாதமே (கதியென)
योऽनुदिनम् - யோऽநுதி3நம் - எவனொருவன் ஒவ்வொரு தினமும் (பூஜிக்கின்ற)
स - அவன் कथम् - கத2ம் - எவ்வாறு
तव - தவ - உன்னை न भवेत् - ந ப4வேத் - வந்தடைய மாட்டான்?
(அது போலவே நானும்) तव - தவ - உன்னுடைய
परम्फदमित्यनुशीलयतो - பரம்பத3மித்யநுஶீலயதோ - உயர்ந்த திருவடிகளை அடைவதற்காக பயிற்சி செய்ய
मम - மம - எனக்கு किं न - கிம் ந - எவ்வாறு மாட்டேன்?
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
மிகவும் புனிதமான உனது பாதத் தாமரைக்கு பக்தியுடன் பணி புரிபவர்களுக்கு கருணையின் உறைவிடமாகத் திகழும் எங்கள் புனிதமான அன்னையே!
மிகவும் புனிதமான தாமரையில் வஸிக்கும் உன் தாமரைப் பாதமே கதியென எவனொருவன் ஒவ்வொரு தினமும் தாமரையில் வஸிப்பவளே என்று பூஜிக்கின்றவன் எவ்வாறு உன்னை வந்தடைய மாட்டான்?
அது போலவே நானும் உன்னுடைய உயர்ந்த திருவடிகளையே அடைவதற்காக உனது திருவடிகளை நினைக்க எவ்வாறு பயிற்சி செய்யாதிருப்பேன்?
ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!
உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment