Monday, January 2, 2023

21. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்

(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_21 மற்றும் நிறைவுப் பகுதி.


अयि मयि दीन दयालुतया कृपयैव त्वया भवितव्यमुमे

अयि जगतो जननी कृपयासि यथासि तथानुमितासिरते |

यदुचितमत्र भवत्युररीकुरुतादुरुतापमपाकुरुते

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || २१ ||


அயி மயி தீ3ந த3யாலுதயா க்ருபயைவ த்வயா ப4விதவ்யமுமே

அயி ஜக3தோ ஜநநீ க்ருபயாஸி யதா2ஸி ததா2நுமிதாஸிரதே |

யது3சிதமத்ர ப4வத்யுரரீகுருதாது3ருதாபமபாகுருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 21 ||


अयि - அயி - புனிதமான அன்னையே!

मयि - மயி - என் மீது दीन - தீ3ந

दयालुतया - த3யாலுதயா - உனது கருணையை

कृपयैव - க்ருபயைவ - பொழிவாய் (துன்பப் படுகின்றவர்களுக்கு அருள்வதைப் போல)

त्वया - த்வயா भवितव्यमुमे - ப4விதவ்யமுமே - ஹே! உமா! நான் பெற வேண்டும்

अयि - அயி - புனிதமான அன்னையே!

जगतो जननी - ஜக3தோ ஜநநீ - உலகத்தின் அன்னையே!

कृपयासि - க்ருபயாஸி - கருணையோடு இருக்கிறாய்

यथासि - யதா2ஸி - அதேபோல

तथानुमितासिरते - ததா2நுமிதாஸிரதே - எவ்வாறு உனது அம்புகள் பொழிகின்றனவோ,

यदुचितमत्र - யது3சிதமத்ர - இங்கே இப்போது எவையெல்லாம் எனக்கு உகந்தவையோ, அவற்றையளித்து

भवत्युररीकुरुतादुरुतापमपाकुरुते - ப4வத்யுரரீகுருதாது3ருதாபமபாகுருதே

- உன்னை வழிபடுகின்ற என்னால் தாங்கிக் கொள்ள இயலாத துன்பங்களையும் இடர்களையும் களைவாயாக!

हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


புனிதமான அன்னையே! துன்பப் படுகின்றவர்களுக்கு அருள்வதைப் போல, வருந்துகின்ற என் மீது உனது கருணையைப் பொழிவாய்!


ஹே! உமா! எங்கள் புனிதமான அன்னையே! கருணையோடு இருக்கும் உலகத்தின் அன்னையே! எவ்வாறு உனது கரங்களிலிருந்து அம்புகள் பொழிகின்றனவோ, அதேபோல என் மீது உனது கருணையைப் பொழிவாய்!


இங்கே இப்போது எவையெல்லாம் எனக்கு உகந்தவையோ அவற்றையளித்து, உன்னை வழிபடுகின்ற என்னால் தாங்கிக் கொள்ள இயலாத துன்பங்களையும் இடர்களையும் களைவாயாக!


ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!

உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


इति श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् संपूर्णम्

இவ்வாறு ஸ்ரீமஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம் நிறைவடைகிறது!


🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

1 comment: