#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_14
कमलदलामल कोमलकान्ति कलाकलितामल भाललते
सकलविलास कलानिलयक्रम केलिचलत्कल हंसकुले |
अलिकुलसङ्कुल कुवलयमण्डल मौलिमिलद्बकुलालिकुले
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १४ ||
கமலத3லாமல கோமலகாந்தி கலாகலிதாமல பா4லலதே
ஸகலவிலாஸ கலாநிலயக்ரம கேலிசலத்கல ஹம்ஸகுலே |
அலிகுலஸங்குல குவலயமண்ட4ல மௌலிமிலத்3ப3குலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 14 ||
कमलदलामल - கமலத3லாமல - மாசு மருவற்ற தாமரையிதழ்
कोमलकान्ति - கோமலகாந்தி - மிகவும் மென்மையான, அழகான
कलाकलितामल - கலாகலிதாமல - மாசு மருவற்ற, கலைநயத்துடன் கூடிய (நெற்றியை உடையவளே!)
भाललते - பா4லலதே - இளங்கொடியே
सकलविलास - ஸகலவிலாஸ - அனைத்து கலைகளும் ஒளிர்கின்ற
कलानिलयक्रम - கலாநிலயக்ரம - அனைத்து கலைகளின் பள்ளியாக
केलिचलत्कल - கேலிசலத்கல - மெல்லிய அசைவுகளுடன் விளையாடும் (அன்னங்களுக்கு)
हंसकुले - ஹம்ஸகுலே - அன்னங்களின் கூட்டத்திற்கு
अलिकुलसङ्कुल - அலிகுலஸங்குல - தேனீக்கள் கூட்டம் கூட்டமாக
कुवलयमण्डल - குளத்திலே காணும் நீலநிற அல்லிப்பூக்கள் கூட்டம் போல
मौलिमिलद्बकुलालिकुले - மௌலிமிலத்3ப3குலாலிகுலே - தேனீக்கள் திரளாக மொய்க்கின்ற நீலநிற அல்லிமலர்ச் செண்டுகளால் அலங்கரிக்கப்பட்ட சடைமுடியை உடையவளே!
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
மாசு மருவற்ற, மிகவும் மென்மையான, அழகான தாமரையிதழ் போன்ற, மாசு மருவற்ற, கலைநயத்துடன் கூடிய நெற்றியையும், அதற்கு மேல் தேனீக்கள் திரளாக மொய்க்கின்ற நீலநிற அல்லிமலர்ச் செண்டுகளால் அலங்கரிக்கப்பட்ட சடைமுடியை உடையவளே!
தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் குளத்திலே காணும் நீலநிற அல்லிப்பூக்களின் மொத்த அழகும் ஒருங்கே அமையப்பெற்றவளே!
அனைத்து கலைகளும் ஒளிர்கின்ற, அனைத்து கலைகளின் பள்ளியாக விளங்கும் இளங்கொடியே!
குளத்திலே மெல்லிய அசைவுகளுடன் விளையாடும் அன்னங்களின் கூட்டத்திற்கு இணையான மெல்லிய அசைவுகளுடன் நடைபயில்கின்றவளே!
ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!
உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
No comments:
Post a Comment