#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनी स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_3
अयि जगदंब मदंब कदंबवनप्रियवासिनि हासरते
शिखरिशिरोमणि तुङ्गहिमालय शृङ्गनिजालय मध्यगते|
मधुमधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || ३ ||
அயி ஜக3த3ம்ப3 மத3ம்ப3 கத3ம்ப3வநப்ரியவாஸிநி ஹாஸரதே
ஶிக2ரிஶிரோமணி துங்க3ஹிமாலய ஶ்ருங்க3நிஜாலய மத்4யக3தே|
மது4மது4ரே மது4கைடப4க3ஞ்ஜிநி கைடப4ப4ஞ்ஜிநி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்திநி ஶைலஸுதே || 3 ||
अयि - அயி - புனிதமான அன்னையே!
जगदंब - ஜக3த3ம்ப3 - உலகத்தின் அன்னையே!
मदंब - மத3ம்ப3 - எனது அன்னையே!
कदंबवनप्रियवासिनि - கத3ம்ப3வநப்ரியவாஸிநி - கதம்பமர வனத்தில் விரும்பி வஸிப்பவளே!
हासरते - ஹாஸரதே - மகிழ்ந்து சிரிப்பவளே!
शिखरिशिरोमणि - ஶிக2ரிஶிரோமணி - சிகரத்தின் உச்சியிலுள்ள உயர்ந்த ரத்னமே!
तुङ्गहिमालय - துங்க3ஹிமாலய - உயரமான இமயமலையைத்
शृङ्गनिजालय - ஶ்ருங்க3நிஜாலய - தனது வீடாகக் கொண்டு
मध्यगते - மத்4யக3தே - அதன் மத்தியில் வஸிப்பவளே!
मधुमधुरे - மது4மது4ரே - தேனினும் இனிமையானவளே!
मधुकैटभगञ्जिनि - மது4கைடப4க3ஞ்ஜிநி - மதுகைடபர்களை அழிக்கத் தனது மாயாஶக்தியால் அவர்களை வலுவிழக்கச் செய்து
कैटभभञ्जिनि - கைடப4ப4ஞ்ஜிநி - கைடபர்களை (விஷ்ணுவின் மூலம்) அழித்து
रासरते - ராஸரதே - வெற்றி முழக்கமிட்டவளே!
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்திநி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
புனிதமான அன்னையே! உலகத்தின் அன்னையே! எனது அன்னையே! கதம்பமர வனத்தில் விரும்பி வஸிப்பவளே! மகிழ்ந்து சிரிப்பவளே! சிகரத்தின் உச்சியிலுள்ள உயர்ந்த ரத்னமே! உயரமான இமயமலையைத் தனது வீடாகக் கொண்டு அதன் மத்தியில் வஸிப்பவளே! தேனினும் இனிமையானவளே! மதுகைடபர்களை அழிக்கத் தனது மாயாஶக்தியால் அவர்களை வலுவிழக்கச் செய்து, அவர்களை (விஷ்ணுவின் மூலம்) அழித்து வெற்றி முழக்கமிட்டவளே!
ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!
உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment