Monday, January 2, 2023

9. Mahishasura Marthini (with meaning in Tamil)

 #mahishasuramardini_stotram


महिषासुरमर्दिनि स्तोत्रम्

மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்

(தமிழில் அர்த்தத்துடன்)


#பாகம்_9


सुरललना ततथेयि तथेयि कृताभिनयोदर नृत्यरते

कृतकुकुथः कुकुथो गडदादिकताल कुतूहल गानरते |

धुधुकुट धुक्कुट धिन्धिमित ध्वनि धीर मृदङ्ग निनादरते

जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || ९ ||


ஸுரலலநா தததே2யி ததே2யி க்ருதாபி4நயோத3ர ந்ருத்யரதே

க்ருதகுகுத2: குகுதோ2 க3ட3தா3தி3கதால குதூஹல கா3நரதே |

து4து4குட து4க்குட தி4ந்தி4மித த்4வநி தீ4ர ம்ருத3ங்க3 நிநாத3ரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 9 ||


मृदङ्ग - ம்ருதங்கம் என்ற வாத்யத்தில்

 ततथेयि - தததே2யி - தததேயி

तथेयि - ததேயி कुकुथः कुकुथो - குகுத: குகுதோ2

धुधुकुट - து4து4குட धुक्कुट - து4க்குட

धिन्धिमित - திந்திமித என்று

धीर - தீர - சீராக 

ध्वनि - ஒலிக்கும்

कृताभिनयोदर - க்ருதாபி4நயோத3ர - தாளக் கட்டுக்குள்

सुरललना - ஸுரலலநா - அழகாக ஆடும் தேவமங்கையர்களை

कुतूहल - குதூஹல - மிகவும் ஆர்வத்துடன்

निनादरते - நிநாத3ரதே - அந்த இசையில் ஈடுபடுத்தி

गानरते - கா3நரதே - இசையில் திளைக்கச் செய்து

कृत - க்ருத - அவர்களை ஆட வைப்பவளே!

हे महिषासुरमर्दिनि - ஹே! மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!

शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!

जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


ம்ருதங்கம் என்ற வாத்யத்தில் "தததேயி ததேயி" "குகுத: குகுதோ2" "துதுகுட துக்குட" "திந்திமித" என்று சீராக ஒலிக்கும் ஜதிக்கேற்ப அந்தத் தாளக் கட்டுக்குள் அழகாக ஆடும் தேவமங்கையர்களை அந்த இசையில் திளைக்கச் செய்து மிகவும் ஆர்வத்துடன் அவர்களை ஆட வைப்பவளே! 

ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!

அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைகளே!

உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!


#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!

No comments:

Post a Comment