#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_13
अविरलगण्ड गलन्मदमेदुर मत्तमतङ्ग जराजपते
त्रिभुवनभूषण भूतकलानिधि रूपपयोनिधि राजसुते |
अयि सुदतीजन लालसमानस मोहनमन्मथराजसुते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १३ ||
அவிரலக3ண்ட3 க3லந்மத3மேது3ர மத்தமதங்க3 ஜராஜபதே
த்ரிபு4வநபூ4ஷண பூ4தகலாநிதி4 ரூபபயோநிதி4 ராஜஸுதே |
அயி ஸுத3தீஜந லாலஸமாநஸ மோஹந மந்மத2ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 13 ||
अविरलगण्ड - அவிரலக3ண்ட3 - கன்னங்களிலிருந்து இடைவிடாது ஒழுகும்
गलन्मदमेदुर - க3லந்மத3மேது3ர - மதநீரையுடைய
मत्तमतङ्ग - மத்தமதங்க3 - மதம் பிடித்த யானை
जराजपते - ஜராஜபதே - யானைகளின் அரசனாக விளங்கும்
त्रिभुवनभूषण - த்ரிபு4வநபூ4ஷண - மூவுலகங்களின் ஆபரணமாக
भूतकलानिधि - பூ4தகலாநிதி4 - அரிய பழங்கலைகளின் அதிபதியாக
रूपपयोनिधि - ரூபபயோநிதி4 - அனைத்து விதமான ஶக்திகளின் உறைவிடமாக
राजसुते - ராஜஸுதே - (விளங்கும்) (ஹிமவான் என்னும்) அரசனின் மகளே!
अयि - அயி - புனிதமான அன்னையே!
सुदतीजन - ஸுத3தீஜந - அழகான பல்வரிசை தெரியும்படி புன்னகை புரிபவளே!
लालसमानस - லாலஸமாநஸ - மனதின் விருப்பத்தை
मोहन - மோஹந
मन्मथराजसुते - மந்மத2ராஜஸுதே - அன்புக்கு அதிபதியான கடவுளின் மகளே!
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
கன்னங்களிலிருந்து இடைவிடாது ஒழுகும் மதநீரையுடைய மதம் பிடித்த யானைக் கூட்டத்தின் அரசனாக விளங்கும் யானை மீதமர்ந்து, மூவுலகங்களின் ஆபரணமாகவும், அரிய பழங்கலைகளின் அதிபதியாகவும், அனைத்து விதமான ஶக்திகளின் உறைவிடமாகவும், ஹிமவான் என்ற அரசனுடைய மகளாகவும் விளங்கும் எங்கள் புனிதமான அன்னையே!
அழகான பல்வரிசை தெரியும்படி மனமயக்கும் புன்னகை புரிபவளே!
அன்புக்கு அதிபதியான கடவுளின் மகளே!
ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே! உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment