#mahishasuramardini_stotram
महिषासुरमर्दिनि स्तोत्रम्
மஹிஷாஸுரமர்திநி ஸ்தோத்ரம்
(தமிழில் அர்த்தத்துடன்)
#பாகம்_12
सहितमहाहव मल्लमतल्लिक मल्लितरल्लक मल्लरते
विरचितवल्लिक पल्लिकमल्लिक झिल्लिकभिल्लिक वर्गवृते |
शितकृतफुल्ल समुल्लसितारुण तल्लजपल्लव सल्ललिते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते || १२ ||
ஸஹிதமஹாஹவ மல்லமதல்லிக மல்லிதரல்லக மல்லரதே
விரசிதவல்லிக பல்லிகமல்லிக ஜி4ல்லிகபி4ல்லிக வர்க3வ்ருதே |
ஶிதக்ருதஃபுல்ல ஸமுல்லஸிதாருண தல்லஜபல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3நி ரம்யகபர்தி3நி ஶைலஸுதே || 12 ||
मल्लितरल्लक - மல்லிதரல்லக - மல்லிகை மலரனைய மென்மையான
झिल्लिकभिल्लिक - ஜி4ல்லிகபி4ல்லிக - தேனீக்கள் மொய்ப்பது போல கூட்டமாக
पल्लिकमल्लिक - பல்லிகமல்லிக - மல்லிகை வனம் போன்ற
विरचितवल्लिक - விரசிதவல்லிக - இளம்பெண்களால்
वर्गवृते - வர்க3வ்ருதே - சூழப்பட்ட படையுடன்
मल्लमतल्लिक - மல்லமதல்லிக - மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களுடன்
सहितमहाहव - ஸஹிதமஹாஹவ - பெரும் போரில் ஈடுபடுகின்றவளே!
समुल्लसितारुण - ஸமுல்லஸிதாருண - விடியற்காலை நேரத்தில் செம்பழுப்பு நிறத்திலான
तल्लजपल्लव - தல்லஜபல்லவ - இதழ் விரியும் மொட்டுகள் போல
शितकृतफुल्ल - ஶிதக்ருதஃபுல்ல - மகிழ்ச்சியால் புன்னகை பூத்த முகத்துடன்
सल्ललिते - ஸல்லலிதே - திருவிளையாடல் புரிபவளே!
हे महिषासुरमर्दिनि - ஹே மஹிஷாஸுரமர்தி3நி - ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
रम्यकपर्दिनि - ரம்யகபர்தி3நி - அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே!
शैलसुते - ஶைலஸுதே - மலைமகளே!
जय जय - ஜய ஜய - உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
மல்லிகை மலரனைய மென்மையான, மல்லிகை வனம் போன்ற இளம்பெண்களால் தேனீக்கள் மொய்ப்பது போல கூட்டமாக சூழப்பட்ட படையுடன் வந்து மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களுடன் பெரும் போரில் ஈடுபடுகின்றவளே!
விடியற்காலை நேரத்தில் செம்பழுப்பு நிறத்திலான இதழ் விரியும் மொட்டுகள் போல மகிழ்ச்சியால் புன்னகை பூத்த முகத்துடன் திருவிளையாடல் புரிபவளே!
ஹே! மஹிஷாஸுரனை வதைத்தவளே!
அழகான பின்னல்கள் கொண்ட கூந்தலையுடையவளே! மலைமகளே!
உனக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றி!
#மஹிஷாஸுரமர்திநி_ஸ்தோத்ரம்_தொடரும்!
No comments:
Post a Comment