Sanscrit பாடம் - 5
உச்சரித்து, எழுதிப் பழகுங்கள்:
இன்றைய பாடத்தில் சில சொற்களைக் கற்றுக் கொள்ளப்
போகிறோம். அதற்கு முன்பாக, சில எழுத்துகள் ஒன்றைப் போல்
இருந்து, சற்றே வேறுபட்டிருக்கும். இவற்றை கவனித்து, கற்றுக் கொள்ளுங்கள்:
ङ (ங) ड (ட3) ढ (ட4) द (த3)
घ (க4) ध (த4) इ (இ) झ (ஜ2)
प (ப) ष (ஷ) य (ய) थ (த2)
व (வ) ब (ப3) म (ம) भ (ப4)
உச்சரித்து, எழுதிப் பழகுங்கள்:
जनक: (ஜநக:)
ஜநகர் चषक: (சஷக:)
கோப்பை
काक: (காக:)
காகம் बालक: (பாலக:) சிறுவன்
बाण: (பாண:)
அம்பு पिक: (பிக:)
குயில்
सुत: (ஸுத:)
மகன் शुक: (ஶுக:)
கிளி
मूढ: (மூட4)
மூடன் मयूर:
(மயூர:)
மயில்
नृप: (ந்ருப:)
அரசன்
वृक: (வ்ருக:)
ஓநாய்
वृषभ: (வ்ருஷப:) எருது/காளை
मृग: (ம்ருக3:) மிருகம்
देव: (தேவ:) கடவுள்
गणेश: (கணேஶ:) கணேசன்
मेषपाल: (மேஷபால:) ஆடுமேய்ப்பவன்
गोपाल: (கோ3பால:) கோபாலன்
पितामह: (பிதாமஹ:) தாத்தா (தந்தையின் தந்தை)
मातामह: (மாதாமஹ:) தாத்தா (தாயின் தந்தை)
गुरु: (கு3ரு:)
குருஹு
ஆசிரியர்
दयालु: (த3யாலு:)
தயாலுஹு
தயாளன்
भानु: (பா4நு:)
பா4நுஹு
சூரியன்
मुनि: (முநி:)
முநிஹி
முனிவர்
ऋषि: (ருஷி:)
ருஷிஹி
ரிஷி/முனிவர்
कपि:
(கபி:)
கபிஹி
குரங்கு
माता (மாதா)
அன்னை/அம்மா/தாய்
पिता (பிதா)
தந்தை/அப்பா
गीता (கீ3தா)
கீதா
लता (லதா)
லதா
மேற்கண்ட
சொற்களில் குரு: முதல் கபி: வரையுள்ளவை
ஆண்பாற் சொற்கள். அவை எப்போதும் “அஹ”, “இஹி” மற்றும் “உஹு” என்று சொற்களின்
முடிவில் விஸர்கத்துடன் (அதாவது “:” புள்ளிகளுடன்) முடியும். அதற்குப்
பின் வருகின்ற நான்கு சொற்களும் பெண்பாற் சொற்கள். அவை “ஆ” என்னும்
நெடிலோசையோடு முடியும். அவற்றுக்கு
விஸர்கம் வராது.
सुता (ஸுதா)
ஸுதா
–
மகள்
बाला (பா3லா)
பாலா
- சிறுமி
माला (மாலா)
மாலா/மாலை/தொடர்/வளையம்
डोला (டோ3லா)
டோலா-
ஊஞ்சல்
यमुना (யமுநா)
பெண்ணின்
பெயர்/யமுனை
நதி
बालिका (பா3லிகா)
சிறுமி/இளம்பெண்
कृपा (க்ருபா)
உதவி/கருணை/மென்மை दया (த3யா)
கருணை/இரக்கம்
वाटिका (வாடிகா)
சிப்பாய்/குடிசை/வீட்டின்
ஒரு தளம்
पेटिका (பேடிகா) பெட்டி/தாவர இனங்கள்
शाटिका ஶாடிகா (புடவை)
नदी நதீ3 (ஆறு)
जननी ஜநநீ
(அம்மா)
पितामही பிதாமஹீ (தந்தையின்
அம்மா)
मातामही மாதாமஹீ (அம்மாவின்
அம்மா)
कावेरी காவேரீ
(ஆறு/மஞ்சள்)
रामायणम् ராமாயணம்
महाभारतम् மஹாபா4ரதம்
भवनम् ப4வநம்
(வீட்டை)
वाहनम् வாஹநம்
(வண்டி)
மேற்கண்ட சொற்களில் முதல் ஆறு சொற்கள் பெண்பாற் சொற்கள். மீதியுள்ளவை அஃறிணைச் சொற்கள். மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறேன்: ஒரு சொல் “அஹ” என்று விஸர்கத்துடன் சொல் முடிந்தால் அது ஆண்பால்; “ஆ” மற்றும் “ஈ” என்று நெடிலோசையோடு முடிந்தால் அது பெண்பால்; “ம்” என்ற எழுத்தில் முடிந்தால் அது அஃறிணைச் சொல். இவை குறித்து, இனிவரும் நாட்களில் பயிலவுள்ளோம். இப்போதைக்கு, மேலே தந்துள்ள சொற்களை ஏற்கெனவே அறிவுறுத்தியபடி உச்சரித்தவாறே எழுதிப் பழகவும்.
कमलम्
கமலம்
(தாமரை)
विमानम्
விமாநம்
(வானூர்தி)
हृदयम् ஹ்ருத3யம் (இதயம்)
तृणम् த்ருணம் (புல்லை {த்ருண என்றால் புல்} “ம்” என்ற எழுத்து இறுதியில் வருவதால் புல்லை என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழில் இந்த “ஐ” விகுதி வேற்றுமை உருபு எனக் கூறுவர். இந்த வேற்றுமை உருபு – ஸம்ஸ்க்ருதத்தில் “விபக்தி” என்று கூறுவர். இதை நாமஸப்த என்னும் பாடத்தின் கீழ்ப்பயிலவுள்ளோம். ரொம்பவே சுவையாக இருக்கும்.
मधुरम् மது4ரம் (இனிமை/இனிமையாக)
साधनम् ஸாத4நம் (கருவி)
मुखम् முக2ம் (முகம்/வாய்)
उदरम् உத3ரம் (வயிறு)
जीवनम् ஜீவனம் (ஜீவன என்றால் வாழ்க்கை. “ம்” என்ற எழுத்து இறுதியில் வருவதால் “வாழ்க்கையை” என்று பொருள் கொள்ள வேண்டும்.)
भोजनम्
போஜனம் (போஜன என்றால் சாப்பாடு. “ம்” என்ற எழுத்து இறுதியில் வருவதால் “உணவை/சாப்பாட்டை” என்று பொருள் கொள்ள வேண்டும்.)
ஒரு சொல்லை
ஒரு வரிக்கு எவ்வளவு இயலுமோ (should be legible), அவ்வளவு
முறை, மொத்தம் பத்து வரிகள் எழுதிப்
பழகவும்.
ji, pl check sanskrit word and spelling for face/ mouth. kshamyatham.
ReplyDeleteVijaya
दोषपरिहारम् अकरोत्!
Deleteधन्यवाद: