Sanscrit பாடம் - 3
स्वकीयाम् नमस्कार:
இன்றைய பாடத்தில் நாம்
இரண்டு விஷயங்களைப் பயிலப் போகிறோம்.
அவையாவன:
1) अनुस्वार: (அநுஸ்வார: ) அநுஸ்வாரம்
2) विसर्ग: (விஸர்க: ) விஸர்கம்
முதலில் அநுஸ்வார:
இது, ஒரு
எழுத்தின் மேல் வைக்கும் புள்ளி. அப்புள்ளியை “ம்”
என
உச்சரிக்க வேண்டும். அநுஸ்வாரம் எல்லா உயிரெழுத்துகளுடன் வரும். தனித்து வராது.
கீழ்க்கண்டவற்றை, தமிழில் கொடுத்துள்ளவாறு
உச்சரித்தபடி எழுதி, பயிற்சி செய்யவும்:
अं = (அம்)
आं = (ஆம்)
इं = (இம்)
ईं = (ஈம்)
उं = (உம்) ऊं = (ஊம்) ऋं = (ரும்) ॠं = (ரூம்) एं = (ஏம்) ऐं = (ஐம்) ओं = (ஓம்) औं = (ஔம்)
उं = (உம்) ऊं = (ஊம்) ऋं = (ரும்) ॠं = (ரூம்) एं = (ஏம்) ऐं = (ஐம்) ओं = (ஓம்) औं = (ஔம்)
विसर्ग: (விஸர்க:)
விஸர்கம்
இது
ஒரு எழுத்தின் பக்கத்தில் மேலும் கீழுமாக வைக்கப்படும் இரு புள்ளிகள்.
(உதாரணம்: अ: = அ:) விஸர்கம் எல்லா உயிரெழுத்துகளுடன் வரும். தனித்து வராது. இதன் உச்சரிப்பு “ஹ்” ஆனால், முன்னுள்ள உயிரெழுத்தின் ஒலியோடு ஒத்து வரும். நெடில் எழுத்தோடு வரும்பொழுது, அதன் உச்சரிப்பில் பாதிதான் வரும். கீழ்க்கண்டவற்றை, தமிழில் கொடுத்துள்ளவாறு உச்சரித்தபடி எழுதி, பயிற்சி செய்யவும்:

अ: = (அ:)
அஹ आ: = (ஆ:) ஆஹ इ: (இ:)
இஹி ई: = (ஈ:) ஈஹி
उ: = (உ:) உஹு ऊ: = (ஊ:) ஊஹு
ऋ: (ரு:)
ருஹு ॠ: = (ரூ:) ரூஹு
ए: = (ஏ:) ஏஹே ऐ: = (ஐ:)
ஐஹி ओ: = (ஓ:) ஓஹோ औ: = (ஔ:)
ஔஹு
No comments:
Post a Comment