Wednesday, September 27, 2017

Sanscrit பாடம் - 9

अभ्यास: (அப்4யாஸ:) பயிற்சி

இன்றைய பாடத்தில் நாம் லிங்க3த்ரையம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்லப்படுகின்ற மூவகைப் பால்கள் பற்றிப் பயிலவிருக்கிறோம்.

संस्कृते पुल्लिङग: स्त्रीलिङग: नपुंसकलिङग: इति लिलिङगत्रयम् अस्ति|
(ஸம்ஸ்க்ருதே புல்லிங்க3: ஸ்த்ரீலிங்க3: நபும்ஸகலிங்க3: இதி லிங்க3த்ரயம் அஸ்தி)

(கணினியின் மூலம் தட்டச்சு செய்வதால் சில எழுத்துகளுக்கு கணினியின் எழுத்துருக்களின் ஆதரவு சரிவர கிட்டுவதில்லை. “ஸ்க்ருஎன்பதில்ஸ்என்பதின் முன்பாதியோடுக்ருஎன்னும் எழுத்துகளை இணைக்க வேண்டும். இதற்காக, “ருஇல்லாமல் தருகிறேன்: “स्कஇதில்என்னும் எழுத்தின் கீழே ஆங்கில எழுத்தான “c” போன்ற வடிவத்தை எழுத வேண்டும் (स्कृ). அது போலவேங்கஎன்பதில்ங்என்னும் எழுத்துக்குக் கீழேஎன்னும் எழுத்தை அவ்வெழுத்தின் மேலுள்ள படுக்கைக் கோட்டை இடாமல் எழுத வேண்டும். இவற்றை எழுத, கணினியின் எழுத்துரு (fonts)-க்களின் ஆதரவு (support) கிடைக்கவில்லை. எனவே, பயிற்சி செய்யும் அன்பர்கள் கவனமாக எழுதவும். ஐயமிருந்தால் உடனே கேட்கவும். பதிவைப் பார்த்துவிட்டு, தயவுசெய்து  மௌனமாகக் கடந்து சென்றுவிடாதீர்கள். இது என்னுடைய மிகமிகத் தாழ்மையான கோரிக்கை.)

இனி, மூவகைப் பால்கள்:

1) पुल्लिङग: புல்லிங்க3ஆண்பால்
2) स्त्रीलिङग: ஸ்த்ரீலிங்க3: பெண்பால்
3) नपुंसकलिङग: நபும்ஸகலிங்க3: ஒன்றன்பால்

2) संस्कृते एकवचनं, द्विवचनं, बहुवचनम् इति वचनत्रयम् अस्ति |
(ஸம்ஸ்க்ருதே ஏகவசநம், த்விவசநம், 3ஹுவசநம் இதி வசநத்ரயம் அஸ்தி)

ஸம்ஸ்க்ருதத்தில் एकवचनम् (ஏகவசநம்) – ஒருமை, द्विवचनम् (த்விவசநம்) – இருமை மற்றும் बहुवचनम् (3ஹுவசநம்) – பன்மை என மூன்று வசனங்கள் உள்ளன. தமிழில் ஒருமை, பன்மை மட்டுமே உள்ளன.


एकवचनम्
ஏகவசநம்
द्विवचनम्
த்விவசநம்
बहुवचनम्
3ஹுவசநம்
पुल्लिङग:
புல்லிங்க3:
बालकः
(பா3லக:)
சிறுவன்
बालकौ
(பா3லகௌ)
இரு சிறுவர்கள்
बालकाः
(பா3லகா:)
சிறுவர்கள்
स्त्रीलिङग:
ஸ்த்ரீலிங்க3:
पेटिका
(பேடிகா)
பெட்டி
पेटिके
(பேடிகே)
இரு பெட்டிகள்
पेटिकाः
(பேடிகா:)
பெட்டிகள்
नपुंसकलिङग:
நபும்ஸகலிங்க3:
फलम्
(2லம்)
பழம்
फले
(2லே)
இரு பழங்கள்
फलानि
(2லாநி)
பழங்கள்

3) संस्कृते प्रथमपुरुषः मध्यमपुरुष: उत्तमपुरुष: इति पुरुषत्रयम् अस्ति |
(ஸம்ஸ்க்ருதே ப்ரத2மபுருஷ: மத்4யமபுருஷ: உத்தமபுருஷ: இதி புருஷத்ரயம் அஸ்தி)

ஸம்ஸ்க்ருதத்தில் प्रथमपुरुषः (ப்ரத2மபுருஷ:) – படர்க்கை, मध्यमपुरुष: (மத்4யமபுருஷ:) – முன்னிலை மற்றும் उत्तमपुरुष: (உத்தமபுருஷ:) – தன்மை என்று மூன்று இடங்கள் (தமிழில் உள்ளது போல்) இருக்கின்றன.

இப்போது, லிங்கத்ரயம், வசநத்ரயம் மற்றும் புருஷத்ரயம் இவற்றை ஒன்றாக இணைத்து வாக்யங்கள் அமைப்பது எப்படி என்று பார்ப்போம்:

पुल्लिङग: प्रथमपुरुषः (புல்லிங்க3 ப்ரத2மபுருஷ:) - படர்க்கை

बालकः गच्छति | (பா3லக: 3ச்சதி) – சிறுவன் போகிறான்.
बालकौ गच्छत: |  (பா3லகௌ 3ச்சத:) – இரு சிறுவர்கள் போகிறார்கள்.
बालका: गच्छन्ति | (பா3லகா: 3ச்சந்தி) – சிறுவர்கள் போகிறார்கள்.

स्त्रीलिङग: प्रथमपुरुषः (ஸ்த்ரீலிங்க3: ப்ரத2மபுருஷ:) - படர்க்கை

बालिका गच्छति | (பா3லிகா 3ச்சதி) – சிறுமி போகிறாள்.
बालिके गच्छत: | (பா3லிகே 3ச்சத:) – இரு சிறுமிகள் போகிறார்கள்.
बालिका: गच्छन्ति | (பா3லிகா: 3ச்சந்தி) – சிறுமிகள் போகிறார்கள்.

नपुंसकलिङग: प्रथमपुरुषः (நபும்ஸகலிங்க3: ப்ரத2மபுருஷ:) - படர்க்கை
वाहनं गच्छति | (வாஹநம் க3ச்சதி) – வண்டி போகிறது.
वाहने गच्छत: | (வாஹநே க3ச்சத:) – இரு வண்டிகள் போகின்றன.
वाहनानि गच्छन्ति | (வாஹநாநி க3ச்சந்தி) – வண்டிகள் போகின்றன.

मध्यमपुरुष: (மத்4யமபுருஷ:) – முன்னிலைஇதில் ஆண்பால் மற்றும் பெண்பால் இரண்டுமே ஒன்றுபோல பாவிக்கப்படும்.

त्वं गच्छसि | (த்வம் 3ச்சஸி) – நீ போகிறாய்
युवां गच्छथ: | (யுவாம் 3ச்சத2:) – நீங்களிருவர் போகிறீர்கள்.
यूयं गच्छथ | (யூயம் 3ச்சத2) – நீங்கள் போகிறீர்கள்.

उत्तमपुरुष: (உத்தமபுருஷ:) – தன்மைஇதிலும் ஆண்பால் மற்றும் பெண்பால் இரண்டுமே ஒன்றுபோல பாவிக்கப்படும்.

अहं गच्छामि |  (அஹம் 3ச்சாமி) – நான் போகிறேன்.
आवां गच्छाव: | (ஆவாம் 3ச்சாவ:) – நாங்களிருவர் போகிறோம்.
वयं गच्छाम: | (வயம் 3ச்சாம:) – நாங்கள் போகிறோம்.

இப்பகுதியில் கொடுத்துள்ள பாடத்தை மேலே கொடுத்துள்ளபடி பயிற்சி செய்யவும். படர்க்கையைப் பொறுத்தமட்டில் இன்னும் நன்றாகப் பயிற்சி செய்வதற்காக, இன்னும் நிறைய சொற்களை வாக்யத்தில் அமைப்பதற்காக அடுத்த பாடத்தில் தருகிறேன். தயவுசெய்து, மேற்கண்ட பாடத்தைப் பயிற்சி செய்து முடித்தபின்முடித்து விட்டேன்என்று (குறைந்தபட்சம் ஒருவராவது) பின்னூட்டமிடவும் (தயவுசெய்து நேரமின்மையைக் காரணமாகக் கூறுவதையும், மௌனமாக இருப்பதையும் தவிர்க்கவும்.). அவ்வாறு பின்னூட்டம் வந்தபின் இன்னும் நிறைய சொற்களை வாக்யத்தில் அமைப்பதற்காக அடுத்த பாடத்தில் தருகிறேன்.

धन्यवाद: नमस्कार: !
पि.जयराम:

No comments:

Post a Comment