Wednesday, September 27, 2017

Sanscrit பாடம் - 6

संयुक्त अक्षराणि (ஸம்யுக்த அக்ஷராணி) கூட்டு எழுத்துக்கள்

இரண்டு அல்லது அதற்கு அதிகமாயுள்ள மெய்யெழுத்துக்களைச் சேர்த்து எழுதுவது கூட்டெழுத்தாகும். இதைவிளக்கமாக இங்கு பார்ப்போம்.

 முதலான எழுத்துக்களுக்கு மேல் தமிழில் புள்ளி வைப்பது போல் ஸம்ஸ்க்ருதத்தில்  () முதலான எழுத்துக்களை எழுதி அதன் கீழ் சாய்ந்த கோட்டினைப் போடுவர் (क् = க்)  () முதலான எழுத்துக்களைப் பாதியாக எழுதினாலும் க் போன்ற மெய்யெழுத்தின் உச்சரிப்பு கிடைக்கும். ஆனால் சில எழுத்துக்களைப் பாதியாக எழுத முடியாது. அவை ङ् (ங்) झ् (ஜ்2) ट् (ட்)  ठ् (ட்2)  ड् (ட்3)  ढ्(ட்4)  द् (த்3) फ् (ப்2)  र् (ர்) ह् (ஹ்)

இவற்றை உணர்த்தும் விதமாக, இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படத்தில் மேற்காணும், எழுத முடியாத எழுத்துக்களுக்குண்டான கட்டத்தில் “___ என்று காண்பிக்கப் பட்டிருக்கும். எழுத முடியாது என்று சொல்லிவிட்டோம், சரி! அவ்வாறெனில் அவற்றை எப்படி எழுதுவது? அவற்றை அடுத்து காண்போம். அதற்கு முன்பாக, கூட்டெழுத்துக்களை எழுதும் முறையை எட்டு பிரிவுகளாகக் காண்போம்.

1) பாதியாக எழுதக் கூடியவற்றுடன் மற்ற எழுத்துக்களைச் சேர்க்கலாம்

क् + = क्य (க்ய)       वाक्यम् (வாக்யம்)
ज् + = ज्य (ஜ்ய)       पूज्यम् (பூஜ்யம்)
व् + यू = व्यू (வ்யூ)       व्यूह: (வ்யூஹ:)
न् + या = न्या (ந்யா)      न्याय: (ந்யாய:)
न् + : = न्त: (ந்த:)           दन्त: (3ந்த:)

மீதமுள்ள பகுதியை இனிவரும் நாட்களில் காணலாம்.



2) பாதியாக எழுதவியலாத எழுத்துக்களை மற்ற எழுத்துக்களோடு மேலும் கீழுமாகச் சேர்த்து எழுதலாம். அப்பொழுது, மேலே உள்ள எழுத்தை மெய்யெழுத்தாக உச்சரிக்க வேண்டும். இணைத்துள்ள படத்தில் உள்ளவாறு (+ = )
எழுத வேண்டும்.

+ = ङगा (ங்கா3) – இதற்கான ஸம்ஸ்க்ருத எழுத்தைப் படத்திலுள்ளது போல எழுத வேண்டும்.
ट् + : = ट्ट: (ட்ட:)
+ = ङक (ங்க:) – இதற்கான ஸம்ஸ்க்ருத எழுத்தைப் படத்திலுள்ளது போல எழுத வேண்டும்.
ड् + = ड्ग (ட்33) இதற்கான ஸம்ஸ்க்ருத எழுத்தைப் படத்திலுள்ளது போல எழுத வேண்டும்.
द् + : = द्ध: (த்34)
द् + वा = द्वा (த்3வா)இதற்கான ஸம்ஸ்க்ருத எழுத்தைப் படத்திலுள்ளது போல எழுத வேண்டும்.

3) சில எழுத்துக்கள் புதிய வடிவத்தைக் கொண்டிருக்கும்.

क् + = क्ष  (க்ஷ)         वृक्ष: (வ்ருக்ஷ:)
क् + = क्त (க்த)          भक्त: (4க்த:)
त् + ति = त्ति (த்தி)        भित्ति: (பி4த்தி:)
ञ् + ञाज्ञ (ஜ்ஞா)  (விஞ்ஞாநம்) – இதற்கான ஸம்ஸ்க்ருத எழுத்து வடிவத்தைப் படத்திலுள்ளது போல எழுத வேண்டும்.
त् + = त्र (த்ர)            पुत्र: (புத்ர:)

4) द् உடன் வரும் சில எழுத்துக்களை இணைத்து எழுத வேண்டும்.

द् + मा = द्मा (த்3மா)    पद्मा (பத்3மா)
द् + या = द्या (த்3யா)    विद्या (வித்3யா)

5) ர் என்ற மெய்யெழுத்தோடு வேறு எழுத்தைச் சேர்த்தால், ர் (र्) என்பது, கோட்டின் மேல்பாகத்தில் ஒரு கொக்கி போல (ஆங்கிலத்திலுள்ள c எழுத்து போல) எழுதப்படும். இந்தக் கொக்கி, அந்த எழுத்தின் நேர் கோட்டிற்கு மேலே எழுதப்படும்.

र् + : = र्प: (ர்ப:)          सर्प: (ஸர்ப:)
र् + = र्म (ர்ம)            कर्म (கர்ம)

உயிர் எழுத்துக் குறியீட்டின் சேர்க்கையினால் இந்த எழுத்திற்குப் பின் மற்றொரு நேர்கோடு வருமானால், அந்நேர்கோட்டின் மேலே இக்கொக்கி எழுதப்படும்.

र् + वी = र्वी (ர்வீ)        गर्वी (கர்வீ)
र् + वो = र्वो (ர்வோ)    गुर्वो: (கு3ர்வோ:)

6) ஒரு மெய்யெழுத்துக்குப் பின் () என்ற எழுத்து வந்தால், செங்குத்துக் கோட்டின் மத்திய பாகத்திலிருந்து சரியாக ஒரு சின்ன சாய்வுக் கோடு எழுதப்படும்.

क् + = क्र (க்ர)            वक्र: (வக்ர:)
ज् + = ज्र (ஜ்ர)           वज्र: (வஜ்ர:)
ग् + = ग्र (க்3)           ग्राम: (க்3ராம:)
व् + = व्र (வ்ர)           व्रत: (வ்ரத:)
म् + = म्र (ம்ர)            आम्र: (ஆம்ர:)

ஆனால், द् (த்3) ह् (ஹ்) என்பதில் சற்று மாறுபாடு உள்ளது.

द् + = द्र (த்3)                       द्रव: (த்3ரவ:)
ह् + = ह्र (ஹ்ர)          ह्रस्व: (ஹ்ரஸ்வ:)

சில எழுத்துக்களின் கீழ் /\ - இக்குறியைப் போட வேண்டும்.

छ् + = छ्र (ச்2 + = ச்2)
ड् + = ड्र (ட்3 + = ட்3)
ट् + = ट्र (ட் + = ட்ர)

7) श् என்ற எழுத்து இரண்டு விதமாக எழுதப்படும்.

श् + = श्व (ஶ்வ)      अश्व: (அஸ்வ:) குதிரை
श् + = श्र (ஸ்ர)          आश्रम: (ஆஸ்ரம:) ஆஸ்ரமம்/மடம்

8) என்பதன் கூட்டெழுத்துகள்

ह् + मा = ह्मा (ஹ்மா)               ब्रह्मा (ப்ரஹ்மா)
ह् + वा = ह्वा (ஹ்வா)             आह्वानम् (ஆஹ்வாநம்)
ह् + = ह्य (ஹ்ய)                    ह्य: (ஹ்ய:) நேற்று
ह् + णा = ह्णा (ஹ்ணா) (க்3ருஹ்ணாது)

உச்சரித்து எழுதிப் பழகுங்கள்:

शिष्य: (ஶிஷ்ய:) சீடன்/மாணவன்
हसन्ति (ஹஸந்தி) சிரித்தான்/சிரித்தாள்
अम्बा (அம்பா) வயதான பெண்மணி
चन्द्र: (சந்த்3:) சந்திரன்
गच्छति (3ச்சதி) சென்றான்/சென்றாள்/சென்றது
अग्रज: (அக்3ரஜ:) அண்ணன்
स्रवन्ति (ஸ்ரவந்தி) கேட்கின்றார்கள்
सूर्य: (ஸூர்ய:) ஸுரியன்/கதிரவன்/பகலவன்/பரிதி
दौहित्र: (தௌ3ஹித்ர:) மகளின் மகன்
मित्रम् (மித்ரம்) நண்பன்

सुभाषितम् பொன்மொழி
आरब्धम् उत्तमजना: परित्यजन्ति ||
தொடங்கிய செயலை மேன்மக்கள் (பாதியில்) கைவிட மாட்டார்கள்.
(அதாவது, ஸம்ஸ்க்ருத பயிற்சியைத் தொடங்கிய நீங்கள்!)

மேலும் பல பயிற்சி சொற்களை அடுத்த வகுப்பில் காணலாம். அதன்பின், இதுகாறும் கற்ற சொற்களைக் கொண்டு வாக்யங்கள் அமைக்கப் போகிறோம்!

No comments:

Post a Comment