Sanscrit பாடம் - 7
वाक्यानि (வாக்யாநி) வாக்கியங்கள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைக்
கொண்டு முழுமையான பொருளைத் தருவது ஒரு வாக்யமாகும்.
(உ-ம்)
बालक: पठति | (பா3லக: பட2தி) – சிறுவன் படிக்கிறான்
सीता गायति | (ஸீதா கா3யதி) – ஸீதை பாடுகிறாள்
மேற்கண்ட எடுத்துக் காட்டுகள்படி, ஒரு 30 வாக்யங்களை அமைக்கப்
போகிறோம். அவை, நிகழ்காலப் படர்க்கை ஒருமையில் இருக்கும். இவற்றை இப்பதிவுடன்
இணைத்துள்ள மூன்று படங்களில் உள்ளபடி எழுதிப் பயிற்சி செய்யவும். அவ்வாறு பயிற்சி
செய்யும்போது உச்சரிப்பானது, இரண்டாம்
பாடத்தின்போது இணைத்த வீடியோ பதிவுபடி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அதற்கு உதவியாக எழுத்துக்களையடுத்து
எண்கள் தரப்பட்டுள்ளன.
वर्तमानकाल: प्रथमपुरुष: एकवचनम्
(வர்தமாநகால: ப்ரத2மபுருஷ: ஏகவசநம்)
நிகழ்காலப் படர்க்கை ஒருமை
1. छात्र: लिखति | (சாத்ர: லிக2தி) மாணவன் எழுதுகிறான்.
2. शिष्य: नमति | (ஶிஷ்ய: நமதி) சீடன் வணங்குகிறான்.
3. अग्रज: वदति | (அக்3ரஜ: வத3தி) அண்ணன் பேசுகிறான்.
4. जनक: पश्यति | (ஜநக: பஶ்யதி) தந்தை பார்க்கிறார்.
5. पितृव्य: पृच्छति | (பித்ருவ்ய: ப்ருச்ச2தி) சித்தப்பா/பெரியப்பா வினவுகிறார்.
6. पुत्र: गच्छति | (புத்ர: க3ச்சதி) மகன் போகிறான்.
7. अ श्व: धावति | (அஶ்வ: தா4வதி) குதிரை ஓடுகிறது.
8. वृक्ष: फलति | (வ்ருக்ஷ: ப2லதி) மரம் பழம் தருகிறது.
9. सेवक: तिष्टति | (ஸேவக: திஷ்டதி) வேலைக்காரன் நிற்கிறான்.
10. भिक्षुक: अटति | (பி4க்ஷுக: அடதி) பிச்சைக்காரன் அலைகிறான்.
11. स: निन्दति | (ஸ: நிந்ததி) அவன் நிந்திக்கிறான்.
12. अयं हसति | (அயம் ஹஸதி) இவன் சிரிக்கிறான்.
13. अम्बा पचति | (அம்பா3 பசதி) அம்மா சமைக்கிறாள்.
14. अनुजा क्रीटति | (அநுஜா க்ரீடதி) தங்கை விளையாடுகிறாள்.
15. अग्रजा खातति | (அக்3ரஜா கா2ததி) அக்கா சாப்பிடுகிறாள்.
16. सुत: हसति | (ஸுத: ஹஸதி) மகன் சிரிக்கிறான்.
17. रमा गायति | (ரமா கா3யதி) ரமா பாடுகிறாள்.
18. बालिका लिखति | (பா3லிகா லிக2தி) சிறுமி எழுதுகிறாள்.
19. कावेरी वहति | (காவேரீ வஹதி) காவிரி பாய்கிறது.
20. सीता पिबति | (ஸீதா பிப3தி) ஸீதை குடிக்கிறாள்.
21. अजा चरति | (அஜா சரதி) பெண் ஆடு மேய்கிறது.
22. सन्ध्या भवति | (ஸந்த்யா ப4வதி) அந்திப் பொழுது ஆகிறது.
23. सा नयति | (ஸா நயதி) அவள் எடுத்துச் செல்கிறாள்.
24. इयम् इच्छति | (இயம் இச்சதி) இவள் விரும்புகிறாள்.
25. पुष्पं विकसति | (புஷ்பம் விகஸதி) மலர் மலர்கிறது.
26. फलं पतति | (ப2லம் பததி) பழம் விழுகிறது.
27. नयनं स्फुरति | (நயநம் ஸ்பு2ரதி) கண் துடிக்கிறது.
28. मित्रं यच्छति | (மித்ரம் யச்சதி) நண்பன் கொடுக்கிறான்.
29. जलं स्रवति | (ஜலம் ஸ்ரவதி) நீர் கசிகிறது.
30. तत् पतति | (தத் பததி) அது விழுகிறது.
12, 25, 26, 27, 28 & 29 இந்த எண்ணுள்ள முதல் சொல்லின் இறுதி எழுத்துக்கு மேல் ஒரு புள்ளி இருக்கும். அந்தப் புள்ளி “ம்” என்னும் மெய்யெழுத்தைக் குறிக்கும். ஒரு சொல் இறுதியில் “ம்” என்னும் மெய்யெழுத்தோடு முடிந்து, தொடரும் சொல் மெய்யெழுத்தில் தொடங்கினால், அந்த “ம்” என்னும் மெய்யெழுத்தை இவ்வாறு புள்ளியாகக் குறிப்பிடுவது ஸம்ஸ்க்ருத எழுத்து மரபு. அதுவே தொடரும் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால், “ம்” என்னும் மெய்யெழுத்தை “म्” என்று எழுத வேண்டும்.
மேற்கண்ட 30 நிகழ்காலப் படர்க்கை ஒருமை வாக்யங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை வைத்தே
நாம் முன்னிலை மற்றும் தன்மை வாக்யங்களாக மாற்றப் போகிறோம்.
No comments:
Post a Comment