Sanscrit பாடம் - 11
अभ्यास:
(அப்4யாஸ:) பயிற்சி
அனைவருக்கும் வணக்கம்!
இன்றைய பாடத்தில் நாம் ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்திருக்கும் முப்பால்களைப்
பற்றியும், மூவகை வசனங்களைப் பற்றியும் அறியப் போகிறோம்.
1. முப்பால்கள்
सम्स्कृते
पुल्लिङग:
स्त्रीलिङग:
नपुम्सकङग:
इति,
लिङगत्रयम्
अस्ति
|
(ஸம்ஸ்க்ருதே
புல்லிங்க: ஸ்த்ரீலிங்க: நபும்ஸகலிங்க: இதி லிங்கத்ரையம் அஸ்தி)
ஸம்ஸ்க்ருதத்தில் மூன்று பால்கள் இருக்கின்றன.
1. पुल्लिङग: (புல்லிங்க:) ஆண்பால்
2. स्त्रीलिङग: (ஸ்த்ரீலிங்க:) பெண்பால்
3. नपुम्सकङग: (நபும்ஸகலிங்க:) ஒன்றன்பால்
2. மூவகை வசனங்கள்
सम्स्कृते
एकवचनं,
द्विवचनं,
बहुवचनम्
इति वचनत्रयम्
अस्ति
|
(ஸம்ஸ்க்ருதே
ஏகவசநம், த்விவசநம், பஹுவசநம் இதி வசநத்ரையம் அஸ்தி)
ஸம்ஸ்க்ருதத்தில் एकवचनम् (ஏகவசநம்) ஒருமை, द्विवचनम् (த்விவசநம்) இருமை, बहुवचनम् (பஹுவசநம்) பன்மை என்று மூவகை வசநங்கள் உள்ளன.
தமிழில் ஒருமை, பன்மை மட்டுமே உள்ளன.
एकवचनम् द्विवचनम् बहुवचनम्
ஏகவசநம் த்விவசநம் பஹுவசநம்
पुल्लिङग: बालक: बालकौ बालका:
(புல்லிங்க:) (பா3லக:) (பா3லகௌ) (பா3லகா:)
சிறுவன் இரு சிறுவர்கள் சிறுவர்கள்
स्त्रीलिङग:
पेटिका पेटिके पेटिका:
(ஸ்த்ரீலிங்க:) (பேடிகா) (பேடிகே) (பேடிகா:)
பெட்டி இரு பெட்டிகள் பெட்டிகள்
नपुम्सकङग:
फलम् फले फलानि
(நபும்ஸகலிங்க:) (பலம்) (பலே) (பலாநி)
பழம் இரு பழங்கள் பழங்கள்
(முக்கியமான பின் குறிப்பு: மேற்குறிப்பிட்டுள்ள லிங்கத்ரையம் மற்றும் வசநத்ரையம் அடிப்படையில்
இனிவரும் பாடங்களில் நாம ஶப்த பாராயணம் செய்யப் போகிறோம். இந்த நாம ஶப்த பாராயணத்தை காணொளி வடிவில்
தருகிறேன். இந்த நாம ஶப்த பாராயணம்தான் நமக்கு வாக்யங்கள்
எழுதுவதிலும், ஸம்ஸ்க்ருதத்தில் பேசுவதிலும் பேருதவி புரியப் போகின்றது. எனவே முகநூல் வழியாகப் பயிலும் எனது நண்பர்களே! இந்த நாம ஶப்த பாராயணத்தைத் தவறாமல், கசடற, சிரத்தையுடன்
பயிலுங்கள்!)
3.
सम्स्कृते
प्रथमपुरुष:,
मध्यमपुरुष:,
उत्तमपुरुष:
इति पुरुषत्रयम्
अस्ति
|
(ஸம்ஸ்க்ருதே ப்ரத2மபுருஷ: மத்4யமபுருஷ: உத்தமபுருஷ: இதி புருஷத்ரையம் அஸ்தி)
ஸம்ஸ்க்ருதத்தில்
प्रथमपुरुष:
(ப்ரத2மபுருஷ:) படர்க்கை, मध्यमपुरुष:
(மத்4யமபுருஷ:) முன்னிலை, उत्तमपुरुष:
(உத்தமபுருஷ:) தன்மை என மூன்று இடங்கள் (தமிழிலுள்ளது போல) இருக்கின்றன.
प्रथमपुरुष: (ப்ரத2மபுருஷ:) படர்க்கை
बालक: ग्च्छति
| (பா3லக: க3ச்சதி)
சிறுவன் போகிறான்.
बालकौ गच्छत:
| (பா3லகௌ க3ச்சத:) இரு
சிறுவர்கள் போகிறார்கள்.
बालका: ग्च्छन्ति
| (பா3லகா: க3ச்சந்தி)
சிறுவர்கள் போகிறார்கள்.
बालिका गच्छति
| (பா3லிகா க3ச்சதி) சிறுமி
போகிறாள்.
बालिके गच्छत:
| (பா3லிகே க3ச்சத:) இரு
சிறுமிகள் போகிறார்கள்.
बालिका: गच्छन्ति
| (பா3லிகா: க3ச்சந்தி)
சிறுமிகள் போகிறார்கள்.
वाहनं गच्छति
| (வாஹநம் க3ச்சதி) வண்டி
போகிறது.
वाहने गच्छत:
| (வாஹநே க3ச்சத:) இரு
வண்டிகள் போகின்றன.
वाहनानि गच्छन्ति
| (வாஹநாநி க3ச்சந்தி) வண்டிகள் போகின்றன.
मध्यम पुरुष:
(மத்4யம புருஷ:) முன்னிலை
त्वं गच्छसि
| युवां गच्छथ:
| यूयं गच्छथ
|
(த்வம் க3ச்சஸி) (யுவாம் க3ச்சத2:) (யூயம்
க3ச்சத2)
நீ
போகிறாய் நீங்களிருவர் போகிறீர்கள் நீங்கள் போகிறீர்கள்
उत्तमपुरुष: (உத்தமபுருஷ:) தன்மை
अहं गच्छामि
| आवां गच्छाव:
| वयं गच्छाम:
|
(அஹம் க3ச்சாமி) (ஆவாம் க3ச்சாம:) (வயம்
க3ச்சாம:)
நான்
போகிறேன் நாமிருவர்
போகிறோம் நாங்கள் போகிறோம்.
இன்றைய
பாடத்தை நன்றாக, சிரத்தையோடு படித்தும் எழுதியும் பயிற்சி செய்யவும். அடுத்து நாம் காண இருப்பது,
நாம ஶப்த பாராயணம்!
धन्यवाद: नमस्कार:
!
पि.जयराम:
अभ्यास:
(அப்4யாஸ:) பயிற்சி
அனைவருக்கும் வணக்கம்!
இனி வரும் பாடங்களில் நாம் ஸம்ஸ்க்ருதத்திலுள்ள நாம ஶப்த பாராயணம் பற்றி விரிவாகப் பயிலப் போகிறோம்.
அதில் முதலாவதாக, அகாராந்த: புல்லிங்க: “ராம” ஶப்த3: என்னும் பகுதியை இன்று பார்க்கலாம்:
विभक्ति एकवचनम् द्वीवचनम् बहुवचनम्
(விப4க்தி) (ஏகவசநம்) (த்3வீவசநம்) (ப3ஹுவசநம்)
வேற்றுமை ஒருமை இருமை பன்மை
प्रथमा
பெயர் राम: रामौ रामा:
(முதல்) ராம: ராமௌ ராமா:
द्वितीया
(ஐ) रामम् रामौ रामान्
(இரண்டாம்) ராமம் ராமௌ ராமாந்
तृतीया
(ஆல், ஓடு, உடன்) रामेण रामाभ्याम् रामै:
(மூன்றாம்) ராமேண ராமாப்4யாம் ராமை:
चतुर्थी
(க்கு) रामाय रामाभ्याम् रामेभ्य:
(நான்காம்) ராமாய ராமாப்4யாம் ராமேப்4ய:
पञ्चमी (இலிருந்து) रामात् रामाभ्याम् रामेभ्य:
(ஐந்தாம்) ராமாத் ராமாப்4யாம் ராமேப்4ய:
षष्ठि
(உடைய) रामस्य रामयो: रामाणाम्
(ஆறாம்) ராமஸ்ய ராமயோ: ராமாணாம்
सप्तमी
(இல்) रामे रामयो: रामेषु
(ஏழாம்) ராமே ராமயோ: ராமேஷு
सम्बोधन
प्रथमा
(விளி) हे राम हे रामौ हे रामा:
(விளி
வேற்றுமை) ஹே ராம! ஹே
ராமௌ! ஹே ராமா: !
மேற்குறிப்பிட்டுள்ள 24 பெயர்களைக் கொண்டு வாக்யங்களும் அமைக்கலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? மேலே 24 பெயர்ச் சொற்களுள்ளன. இதற்கு முந்தைய பாடங்களில் ஏறக்குறைய 100 வினைச் சொற்களை தினம் ஐந்தாகத்
தந்துள்ளேன். அவ்வினைச் சொற்களின் முக்காலம் மற்றும் ஏவல் சொற்களையும் தந்துள்ளேன். அவற்றின் பொருளுணர்ந்து மேற்கண்ட 24 பெயர்ச் சொற்களோடு அவற்றை
இணைத்து 9600 வாக்யங்களை அமைக்க முடியும்! என்ன? மலைப்பாக உள்ளதா? ஊக்கத்தோடு முயன்றால் உங்களுக்கு இது நிச்சயம் சாத்தியம்!
धन्यवाद: नमस्कार: !
पि.जयराम:
வணக்கம் ஜி. உத்தம புருஷவில் ஆவாம் கச்சாவ என்று சமஸ்க்ருததிலும் தமிழில் கச்சாம என்றும் வந்திருக்கிறது
ReplyDeleteவிஜயா சந்திரசேகரன்.