Sanscrit பாடம் - 8
மேற்கண்ட ஆண்பால் (10) மற்றும் பெண்பால் (4) சொற்களோடு ப்ருச்சதி
முதலான 13 சொற்களை இணைத்து வாக்யங்களாக அமைக்கவும். இதனைப் பயிற்சி செய்கையில், முதலில் ஒரு வாக்யத்தை எழுதிவிட்டு
அதற்கு அடுத்த வரியில் ஒரு வரியில் எவ்வளவு முறை இயலுமோ (should be legible to read) அவ்வளவு
முறை எழுதவும். இவ்வாறு ஒரு வாக்யத்தை ஐந்து வரிகள் (ஸம்ஸ்க்ருத எழுத்தில் மட்டும்) எழுதிப் பயிற்சி செய்யவும். அவ்வாறு பயிற்சி செய்யும்போது, அவ்வாக்யத்தின் அர்த்தத்தையும் மனனம் செய்ய வேண்டும்.
अभ्यास: (அப்4யாஸ:) பயிற்சி
1) கீழுள்ள சொற்களோடு வினைச் சொல்லைச்
சேர்த்து எழுதுக:
உதாரணம்: पौत्र:
(பௌத்ர:) பேரன்
पौत्र: पृच्छति | (பௌத்ர: ப்ருச்சதி) பேரன் வினவுகிறான்
ஆண்பால்
சொற்கள்:
1. पितामह: (பிதாமஹ:) தாத்தா (தந்தையின் தந்தை)
2. मातामह: (மாதாமஹ:)
தாத்தா (தாயின் தந்தை)
3. प्रपितामह: (ப்ரபிதாமஹ:) கொள்ளுத் தாத்தா (தகப்பன் வழி)
4. प्रपौत्र: (ப்ரபௌத்ர:)
கொள்ளுப் பேரன் (மகன் வழி)
5. दौहित्र: (தௌ3ஹித்ர:) மகளின்
மகன்
6. अनुज: (அநுஜ:)
தம்பி
7. मातुल: (மாதுல:)
மாமன்
8. श्वशुर: (ஶ்வஶுர:) மாமனார்
9. श्याल: (ஶ்யால:) மைத்துனன் (மனைவியின் ஸஹோதரன்)
10. देवर: (தே3வர:) கணவனின்
ஸஹோதரன்
பெண்பால்
சொற்கள்:
1. पिपृव्या (பித்ருவ்யா) அத்தை (தந்தையின்
ஸஹோதரி)
2. स्नुषा (ஸ்நுஷா) மருமகள்
3. भ्रातृव्या (ப்4ராத்ருவ்யா) ஸஹோதரனின் மனைவி
4. भार्या (பா4ர்யா) மனைவி
மேற்கண்ட
சொற்களோடு “पृच्छति | ப்ருச்சதி” மற்றும் கீழ்க்கண்ட வினைச் சொற்களையும் பயிற்சி செய்யவும்.
1. इच्छति | (இச்சதி)
விரும்புகிறா(ன்)ர்/விரும்புகிறாள்
2. नयति | (நயதி)
எடுத்துச் செல்கிறா(ன்)ர்/செல்கிறாள்
3. यच्छति | (யச்சதி)
கொடுக்கிறா(ன்)ர்/கொடுக்கிறாள்
4. लिखति | (லிக2தி) எழுதுகிறா(ன்)ர்/எழுதுகிறாள்
5. गायति | (கா3யதி) பாடுகிறா(ன்)ர்/பாடுகிறாள்
6. हसति | (ஹஸதி)
சிரிக்கிறா(ன்)ர்/சிரிக்கிறாள்
7. खादति | (கா2த3தி) சாப்பிடுகிறா(ன்)ர்/சாப்பிடுகிறாள்
8. पिबति | (பிப3தி) குடிக்கிறா(ன்)ர்/குடிக்கிறாள்
9. वदति | (வத3தி) பேசுகிறா(ன்)ர்/பேசுகிறாள்
10. पश्यति | (பஶ்யதி) பார்க்கிறா(ன்)ர்/பார்க்கிறாள்
11. गच्छति | (க3ச்ச2தி) போகிறா(ன்)ர்/போகிறாள்
12. तिष्टति | (திஷ்டதி) நிற்கிறா(ன்)ர்/நிற்கிறாள்
अभ्यास: (அப்4யாஸ:) பயிற்சி
கேள்வியை
எழுப்பும்போது, ஆண்பாலானால் क:? (க:)
எவன்?, பெண்பாலானால்
का? (கா) எவள்? மற்றும், ஒன்றன் பாலானால் किं? (கிம்)
எது? என்று
வரும். உதாரணமாக,
क: गच्छति
? (க: க3ச்ச2தி?) எவன்
போகிறான்?
राम: गच्छति
| (ராம: க3ச்ச2தி) ராமன்
போகிறான்.
का गच्छति
? (கா க3ச்ச2தி?) எவள்
போகிறாள்?
सीता गच्छति
| (ஸீதா க3ச்ச2தி) ஸீதை
போகிறாள்.
किं गच्छति
? (கிம் க3ச்ச2தி?) எது
போகிறது?
वाहनं गच्छति
| (வாஹநம் க3ச்ச2தி) வண்டி
போகிறது.
பயிற்சிக்காக
சில வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றுக்கு, ஸம்ஸ்க்ருதத்தில் விடையளிக்கவும்.
சென்ற பாடத்தில் தெரிவித்தபடி,
வினாக்களுக்கான விடைகள் #TRCSanskritபாடம்15 மற்றும் #TRCSanskritபாடம்16 – இவற்றிலுள்ளன. எனவே, இவ்விரு
பாடங்களையும் பதிவுகளிலுள்ளவாறு உங்களுடைய பயிற்சி புத்தகத்தில் எழுதி வைத்திருக்க
வேண்டியது மிகவும் அவசியம். நீங்களனைவரும் அவ்வாறே வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி, வினாக்களுக்குச்
செல்வோம்!
1) ஆண்பால் தொடர்பான வினாக்கள்:
क: नमति
?
क: पठति
?
क: वदति
?
क: पश्यति
?
क: पृच्छति ?
क: गच्छति ?
क: धावति ?
क: फलति ?
क: तिष्टति ?
क: अटति ?
क: निन्दति ?
क: हसति ?
क: यच्छति?
2) பெண்பால் தொடர்பான வினாக்கள்:
का गायति
?
का पचति
?
का क्रीडति
?
का खादति
?
का लिखति
?
का वहति
?
का पिबति
?
का चरति
?
का नयति
?
का इच्छति
?
3) ஒன்றன்பால் தொடர்பான வினாக்கள்:
किं विकसति
?
किं पतति
?
किं स्फुरति
?
किं स्रवति
?
किं गच्छति?
अस्माकम् अग्रिम
वर्गे वयं लिन्गत्रयं
पठाम:
नमस्कार: !
पि.जयराम:
No comments:
Post a Comment