बला अतिबला मन्त्रा
ப3லா அதிப3லா மந்த்ரம்
- அர்த்தத்துடன்
இம்மந்திரத்தைப் பயிற்சி
செய்வதற்கு முன்பு
கர ந்யாஸம்
அங்க ந்யாஸம்
ஆகியவற்றைச் செய்ய
வேண்டும்.
बलाऽतिबलायोः विराट्पुरुषर्षिः गायत्री देवता गायत्री
चन्दः अकार
उकार मकार
बीजाद्यः
क्षुधादि निरासने
विनियोगः
ப3லாऽதிப3லாயோ: விராட்புருஷர்ஷி: கா3யத்ரீ தே3வதா
கா3யத்ரீ
சந்த3: அகார உகார
மகார பீ3ஜாத்3ய: க்ஷுதா4தி3
நிராஸநே விநியோக3:
பலம்
மற்றும் அதிபலம்
என்ற மந்திரங்களுக்கு ரிஷி விராட்புருஷர் (கடவுள்
நாராயணர்); அதிதேவதை
காயத்ரி; அலகு
காயத்ரி; விதையெனப்படும் பீஜம்
"அ" சக்தி
"உ" மற்றும்
கீலகம் எனப்படும்
சக்திக்கு ஆக்கமாக
உள்ளது "ம்"
(இந்த அ,
உ ம் ஆகிய மூன்று
எழுத்துக்களின் சேர்க்கையே
ஓம் ஆகும்).
இந்த மந்திரம்
பசி, தாகம்
மற்றும் சோர்வை
முறியடிப்பதற்காகப் பயன்படுத்தப்
படுகிறது.
क्लामित्यादि षडङ्ग
न्यासः | क्लाम्
अङ्गुष्टाभ्यान् नमः
| क्लींतर्जनीभ्यान् नमः
|
क्लूं मध्यमाभ्यान्
नमः | क्लैमनामिकाभ्यान् नमः
| क्लौंकनिष्टकाभ्यान् नमः
|
क्लाह् करतलकर
पृष्टाभ्यान् नमः
| क्लां हृदयाय
नमः | क्लीं
शिरसे स्वाहा
|
क्लूं शिखायैवषड्
| क्लैंकवचाय हुम्
| क्लौं नेत्रत्रयाय वौषट्
| क्लाह् अस्त्राय
फट् |
भूर्भुवस्सुवरोमिति दिग्बन्दः
||
க்லாமித்யாதி3
ஷட3ங்க3
ந்யாஸ: | க்லாம்
அங்கு3ஷ்டாப்4யான் நம:
|
க்லீம் தர்ஜநீப்4யான் நம:
| க்லூம் மத்4யமாநாப்4யான் நம: | க்லைமநாமிகாப்4யான் நம:
| க்லௌம்கநிஷ்டகாப்4யான் நம:
|
க்லாஹ் கரதலகர
ப்ருஷ்டாப்4யான் நம:
| க்லாம் ஹ்ருத3யாய நம: |
க்லீம் சிரஸே
ஸ்வாஹா | க்லூம்
சிகாயைவஷட் | க்லைம்கவசாய
ஹும் | க்லௌம்
நேத்ரத்ரயாய வௌஷட்
| க்லாஹ் அஸ்த்ராய
பட் |
பூ4ர்பு4வஸ்ஸுவரோமிதி தி3க்ப3ந்த3: ||
(இவையனைத்தும் மந்திரத்தின்
அதிதேவதைகளை செயல்பாட்டில்
இருத்தி வைப்பதற்கான
உடல் மற்றும்
கர சைகைகள்
ஆகும். இந்தச்
சைகைகள் அங்க
ந்யாஸ என்றும்
கர ந்யாஸ
என்றும் அழைக்கப்
படுகின்றன. {அங்க
என்றால் உடலின்
பாகங்கள், கர
என்றால் கை.
ந்யாஸ என்றால்
சைகை.} ஆறு
வகையான ந்யாஸங்கள்
பீஜ மந்த்ரங்களை
உச்சரித்தவாறே செய்யப்படுகின்றன. அவையாவன முறையே, "க்லாம்,
க்லீம், க்லூம்,
க்லைம், க்லெளம் மற்றும் க்லாஹ்" ஆகும்.
இவற்றை அதன்
அர்த்தத்துடன் முறைப்படி
ஒரு குருவிடமிருந்து கற்க வேண்டும்.)
அதற்குப்
பின் கீழ்க்கண்ட
சிந்தனைகளுடன் த்யானமானது
செய்யப் படுகிறது.
अम्रित करतलार्द्रौ
सर्व सञ्जीवनाध्या
आवाघ हरण
सुध्क्षौवेदसारे मयूखै
प्रणव मया
विकारौ भास्कराकारदेहौ सततमनुभवेहं तौ बलातिबलेशौ
॥
அம்ரித கரதலார்த்3ரை ஸர்வ
ஸஞ்ஜீவநாத்4யா ஆவாக4 ஹரண
ஸுத்4க்ஷௌவேத3ஸாரே மயூகை2: |
ப்ரணவ மயா
விகாரௌ பா4ஸ்கராகாரதே3ஹௌ ஸததமநுப4வேஹம் தௌ
ப3லாதிப3லேசௌ ||
அம்ருத
கலசத்தைக் கரத்திலேந்தி, அனைத்து
உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் அவற்றின் மறுசீரமைப்பு சக்தி நிறைந்த, பாவங்களைப் போக்குவதில்
கைதேர்ந்த அறிவின் பிரகாசமான கதிர்கள் சிந்தும், வேதங்களின் சாரத்தை வெளிப்படுத்தும், வேதங்களின் பல்வேறு
வடிவங்களை வெளிப்படுத்திக் கொண்டு, பிரணவத்துடன் கூடிய; பலம் மற்றும் அதிபலம் என்ற மந்த்ரங்களின் தலையாய அதிதேவதைகளை (த்யானத்தின் மூலமாக) இடையறாது எனது
மனம் நினைக்கட்டும்!
ॐ ह्रीं महादेवी ह्रीं
महाबले ।
क्लीं चतुर्विध
पुरुषार्ते सिद्धिप्रदे
।
तत्सवितुर्वरदात्मिकाय ।
ह्रीं वरेण्यं
भर्गोदेवस्यवरदात्मिकायः ।
ஓம் ஹ்ரீம்
மஹாதே3வீ
ஹ்ரீம் மஹாப3லே|
க்லீம் சதுர்வித4 புருஷார்தே ஸித்3தி4ப்ரதே3
|
தத்ஸவிதுர்வரதா3த்மிகாய |
ஹ்ரீம் வரேண்யம்
ப4ர்கோ3தே3வஸ்யவரதா3த்மிகாய:
|
(ஹ்ரீம் என்பதன் பொருள்:
ஹ்ரீம்
என்பதை ஓம்
என்பதற்கு இணையாக
சிலர் கருதுகின்றனர். இம்மந்திரமானது,
அண்டத்தினுடைய மையத்தின்
மற்றும் பேருணர்வின்
ஒலியதிர்வாக உள்ளதால்
மிகவும் உயர்வான
இடத்தில் வைக்கப்
பட்டுள்ளது.
“ஹ்” என்பது
சிவத்தின் வடிவம்;
“ர்” என்பது
இந்தப் ப்ரபஞ்சம்
மற்றும் நுண்ணறிவு
உள்ளிட்ட இயற்கையின்
அனைத்து வடிவங்களின்
வடிவம்; “ஈ”
என்பது இப்பிரபஞ்சத்தின் அன்னையாகிய மஹாமாயைக்கு இணையாகச்
சொல்லப் படுகிறது.
“ம்” என்பது
என்றும் உள்ள
தன்மைக்கு இணையாகச்
சொல்லப் படுகிறது.
க்லீம்
என்பதன் பொருள்:
க்லீம்
என்னும் சப்தமானது,
ஒரு பீஜ
மந்த்ரம். இம்மந்திரம், காமதேவன் என்னும் இச்சாசக்திக்குடைய கடவுளுடன் தொடர்புடையது. இக்கடவுளின்
அவதாரமே ஸ்ரீக்ருஷ்ணாவதாரம் என்று சில ஹிந்து
பாரம்பர்யங்களில் நம்புகின்றனர். ஈர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்காக இந்த
“க்லீம்” என்னும்
மந்திரமானது உச்சரிக்கப்
படுகிறது.)
அண்டத்தின்
ஒலியதிர்வாக உள்ள
மஹாதேவியே! அண்டத்தின்
ஒலியதிர்வாக உள்ள
பெரும்பலத்தின் வடிவே!
தர்மம்,
செழுமை, மனநிறைவு
மற்றும் மோக்ஷம்
என்னும் நால்வித
மனிதக் குறிக்கோள்கள்
நிறைவேறத் தகுந்த
சக்தியினை அளிக்கும்
வடிவே!
अतिबले सर्व
दयामूर्ते
बले सर्व
क्षुद्ब्रह्म उपनाशिनी
धीमहि धीयो
योनः जातेप्रचुर्या
।
प्रचोदयात्मिके प्रणव
शिरसात्मिके हुं
फट् स्वाहा
॥
அதிப3லே
ஸர்வ த3யாமூர்தே |
ப3லே
ஸர்வ க்ஷுத்3ப்3ரஹ்ம உபநாசிநீ
தீ4மஹி
தீ4யோ
யோந: ஜாதேப்ரசுர்யா|
ப்ரசோத3யாத்மிகே
ப்ரணவ சிரஸாத்மிகே
ஹும் ப2ட் ஸ்வாஹா
||
பெரும்
பலமே! அனைத்து
விதமான கருணையின்
வடிவமே!
பலமே!
பசி மற்றும்
சோர்வு தரும்
மருட்சியை அழிக்கும்
சக்தியே!
எமது
மொழிகளை (பேச்சு)
வழிநடத்துகின்ற; அம்மொழிகளுக்கான தூண்டுதல் சக்தியாக உள்ள;
தலையாயதாக உள்ள
அந்த ப்ரணவத்தின்
வடிவாக உள்ள
உன்னை த்யானிக்கிறோம்! (ஹும் ப்ஹட் ஸ்வாஹா!)
உடலில் சக்தியைக்
கூட்டி, எதிர்மறைகளை
உடைத்து வெளியேற்ற
வருக! என்று
அழைக்கிறோம்!
फलश्रुतिः
एवं विद्वान्
कृत कृत्योभवति
सावित्र्या एव
सालोकतां जायती
इत्युपनिषद्
शान्ति पाठः
ॐ आप्यायन्तु मम अङ्गानि
वाक्प्राणश्चक्षुहु
श्रोत्रमतो बलमिन्द्रियाणि च सर्वाणि
सर्वं ब्रह्मौपनिषदम् माहम् ब्रह्मनिराकुर्याम्
मामा ब्रह्मनिराकरोत् अनिराकरणमस्तु
अनिराकरणमे अस्तु
तदात्मानि निरते
यः उपनिषत्सु
धर्मास्ते मयिसन्तु
ते मयिसन्तु
ॐ शान्ति शान्ति शान्तिः
॥
ப2லச்ருதி:
ஏவம் வித்3வாந் க்ருத
க்ருத்யோப4வதி ஸாவித்ர்யா
ஏவ ஸாலோகதாம்
ஜாயதீ இத்யுபநிஷத்3
(இம்மந்திரங்களை)
கேட்பதன் பலன்:
இம்மந்த்ரங்களை உச்சரிப்பதற்கு முன்பாக செய்ய
வேண்டிய சடங்குகளை
(அங்கந்யாஸ: மற்றும்
கரந்யாஸ:) முறையாக
செய்து முடித்தபின்பு, மந்த்ரங்களை உச்சரிப்பதால் மட்டுமே
முழுமையான பலன்
கிட்டும். இம்மந்த்ரங்களை பயிற்சி செய்பவருக்கு இம்மந்த்ரங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு
சொல்வதால் அவருக்கு
பசி, தாகம்
மற்றும் பலவிதமான்
சோர்வுகளிலிருந்து விடுதலை
கிடைப்பதோடு, அந்த
ப்ரஹ்மத்தின் மீது
வழுவாத பக்தியோடிருக்கிறான்.
சாந்தி பாட2:
ஓம் ஆப்யாயந்து
மம அங்கா3நி வாக்ப்ராணஸ்சக்ஷ்ஹு
ஸ்ரோத்ரமதோ ப3லமிந்த்3ரியாணி ச
ஸர்வாணி
ஸர்வம் ப்3ரஹ்மநிராகரோத் அநிராகரணமஸ்து
அநிராகரணமே அஸ்து
ததா3த்மாநி
நிரதே ய:
உபநிஷத்ஸு
த4ர்மாஸ்தே
மயிஸந்து தே
மயிஸந்து
ஓம் சாந்தி
சாந்தி சாந்தி:
||
ப்ரஹ்மத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால்
வாக்கு, வாழ்க்கை,
காட்சி மற்றும்
கேட்டல் ஆகிய
புலன்கள் உள்ளிட்ட
எனது தேஹமானது
மிகுந்த பலத்துடன்
திகழட்டும்! மேலும்,
மிகவும் நீதிமானாகிய
ப்ரஹ்மன் என்மீது
தன்னுடைய கருணையை
தடையின்றி பொழிவாராக!
ஓம் சாந்தி,
சாந்தி, சாந்தி!
(இந்த பலம்,
அதிபலம் என்ற
மந்த்ரங்கள் விஸ்வாமித்ர
ரிஷியால் ராமாயணத்தில்
ஸ்ரீராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் உபதேசிக்கப் பட்டவை. இம்மந்த்ரங்களின் சக்தியாலேயே இருவரும் அம்முனிவரின்
யாகத்தை எவ்வித
இடையூறுமின்றி முழுமையாக
நிறைவடைய உதவினார்கள்.
அது மட்டுமன்றி, ஸ்ரீராமன், சீதை லக்ஷ்மணன் மூவரும் வனவாசம் செய்த காலத்தில் ஸ்ரீராமன், சீதை இருவரையும் பாதுகாக்கும் பொருட்டு லக்ஷ்மணன் இம்மந்த்ரங்களை ஜபித்து, 14 வருடங்கள் பசி, தாகம், சோர்வு, தூக்கம் இவற்றின் பாதிப்பின்றி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றினான்.)
No comments:
Post a Comment