கனவிலே
எழுதி மடித்த கவிதை
by கனவுப் புலவன்
1)
பாடல்: வந்தருள்வாய் விநாயகா
ராகம்: ரஞ்சனி
தாளம்:
பல்லவி
வந்தருள்வாய்
விநாயகா வந்தருள்வாய் விநாயகா
இனிய
செயல்புரிய எனது ஹ்ருதயந்தன்னில் (வந்தருள்வாய்)
அனுபல்லவி
சந்தமுடன்
பல பண்களில் உனைப் புனைய
எந்தப்
பொழுதும் என் மனம் உனை நினைய (வந்தருள்வாய்)
சரணம்
கந்தன்
மணம் புரிய துணைநின்ற நாயகா
தந்த
நுனியில் ஒரு பாரதம் தந்தவா
சிந்தையில்
நின்றாடும் ரஞ்சனியின் மைந்தா
எந்தனுக்கு வரமருள தருணமிதே நீ…. (வந்தருள்வாய்)
2)
பாடல் : உந்தன் திருமலரடி
ராகம் : பந்துவராளி
தாளம் : ஆதி
பல்லவி
உந்தன்
திருமலரடி அடைவதென்னாளோ
இந்த ஒரு பிறவியுடன் முடிவதென்னாளோ (உந்தன்)
அனுபல்லவி
வந்தடைந்தேன்
உன்னையே எந்த வேறு வழியுமின்றி
தந்தருள்வாய் உன்னையே எந்த வேறு மொழியுமின்றி (உந்தன்)
சரணம்
சொந்தங்கள்
பந்தங்கள் உண்டு ஒரு நூறு
உந்தனையே
நினைத்தவுடன் ஆனதவை வேறு
சிந்தனையில்
உனையன்றி ஏது இங்கு கூறு
வந்தடைந்த என்னை நீ
காத்திடப் பாரு (உந்தன் திருமலரடி)
3)
பாடல்: சங்கரா ஸதாசிவ சங்கரா
ராகம்: ரேவதி
தாளம் : ஆதி
பல்லவி
சங்கரா
ஸதா3சிவ
சங்கரா
கருணாஸாக3ர பரமேச்வரா (சங்கரா
அநுபல்லவி
க3ங்கா3த4ர ஸ்ரீசந்த்3ரசேக2ர
நீலக2ண்ட
த3யாபரா (சங்கரா
சரணம்-1
ஆனந்த3தாண்டவ
தஸ்கரநாயக
அர்த3நாரீச்வர
அருணாசலேச்வர
வேதா3ரண்யேச்வர
வேத3புரீச்வர
தவசரணமஹம்
மம ஜந்மதாரக (சங்கரா
சரணம்-2
கும்பே3ச்வர
ஸ்ரீஏகாம்ப3ரேச்வர
ஜம்பு3கேச்வர
பட்டீச்வரா
ப்3ரஹ்மபுரீச்வர
த4ர்ப்பாரண்யேச்வர
தவசரணமஹம் மம ஜந்மதாரக (சங்கரா
4)
பாடல்: நினைத்த வாழ்வு தரும்
ராகம்: தோடி
தாளம்:
பல்லவி
நினைத்த
வாழ்வு தரும் நித்யகல்யாணி - உனை
நினைக்க வருவாய்
இங்கு விரைந்தோடி (நினைத்த)
அனுபல்லவி
அனிச்ச
வாழ்வெனது அம்ருதவர்ஷிணி
இனி
தழைத்திடவே வந்தெனைப் பாரினி
அனிச்ச
வாழ்வெனது அம்ருதவர்ஷிணி
- அது
இனி தழைத்திடவே வந்தெனைப் பாரினி (நினைத்த)
சரணம்
குனித்த
புருவமும் செவ்வாயிதழ் கண்டு
பனித்த
விழிகளொடு உனைப் பணிந்தேனே
இனித்ததென்
வாயுமே நின்திருநாமத்தில்
அனைத்தும் நீயெனப்
பணிந்தேனுன் திருப்பாதத்தில் (நினைத்த)
5)
பாடல் : எந்த வேளையும்
ராகம் : கல்யாணி
பல்லவி
எந்த
வேளையும் நினை கந்தவேளை
கந்தன் கைவேலை வணங்குதலே வேலை (எந்த வேளையும்)
அனுபல்லவி
சிந்தையில்
நின்றாடும் ஏறுமயிலோனை
செந்திலாண்டவனை சிந்தை குளிர்ந்திட (எந்த வேளையும்)
சரணம்
அறுபடை
ஆள்வோனை உறுபகை தீர்ப்போனை
வெருநமை
ஆள்கையில் திருவடி தருவோனை
குறுநகை
தெய்வானை குறவள்ளி நாதனை
விரும்பும் வரம் தந்து
இனிதருள் செய்வோனை (எந்த வேளையும்)
6)
பாடல்: எங்கிருந்து வந்தாயடா
ராகம்: மோஹனம்
தாளம்:
பல்லவி
எங்கிருந்து
வந்தாயடா
– நீ
எங்கிருந்து
வந்தாயடா
அனுபல்லவி
இங்கிருக்கும்
உயிர்களெலாம்
இன்பமுற்று
வாழ்ந்திடவே (எங்கிருந்து)
சரணம்-1
பனிமலையின்
குளிர் விரட்ட இங்கு வந்தாயோ
பாற்கடல்
கரையொதுக்க இங்கு வந்தாயோ
நெடுதவம்
புரியும் உமை அனுப்ப வந்தாயோ
அலைமகள்
கடிந்து கொள்ள இங்கு வந்தாயோ (எங்கிருந்து)
சரணம்-2
ஹரனென
வந்து தீமை ஸம்ஹரிப்பாயோ
ஹரியென
வந்து தீமை வதம் செய்வாயோ
ஹரிஹரன்
என வந்து அருள் செய்வாயோ
தருணமிதே வருக ஐயப்ப ஸ்வாமி (எங்கிருந்து)
7)
பாடல்: ஏதுக்கிந்த சோதனை ஐயா
ராகம்: சந்த்ரஜ்யோதி
தாளம் : மிஸ்ரசாபு
பல்லவி
ஏதுக்கிந்த
சோதனை ஐயா - முருகையா
ஏதுக்கிந்த சோதனை ஐயா!
அனுபல்லவி
ஏழையிவன்
மீது உந்தன்மனமிரங்க வில்லையா
பாவியிவன் பிழை பொறுக்கும் மனமும் உனக்கில்லையா (ஏதுக்கிந்த)
சரணம்
தாய்
தனது மடியை விட்டு உன்னை விடவில்லையா
தந்தையுனை அனுப்பி விட அனுமதி தரவில்லையா
ஏங்குமிவன் கூக்குரலுன் செவியில் விழவில்லையா
ஏன் இனியும் தாமதமோ ஏறுமயில்
வேலைய்யா!
ஏன் இனியும் தாமதமோ ஏறுமயில் வேலைய்யா! (ஏதுக்கிந்த)
8)
பாடல்: காற்றில் மிதந்து வரும்
ராகம்: யமுனா
கல்யாணி
பல்லவி
காற்றில்
மிதந்து வரும் கீதம் -எனை
அழைக்குது யமுனை நதிக்கரையோரம் (காற்றில்)
அனுபல்லவி
முரளிவழி
வழியும் இன்னிசை கீதம்
அடடா யமுனா கல்யாணி ராகம் (காற்றில்)
சரணம்
ஆவினங்கள்
மயங்கி தலையசைத்தாடும்
கன்றுகள்
பாலருந்த மறந்தே போகும்
வேய்ங்குழல்
கீதம் அருமருந்தாகும்
வேண்டுமோ எனக்கு ஐந்தாம் வேதம் (காற்றில்)
9)
பாடல் : திருவீதி வருகின்றான்
ராகம் : ரீதிகௌள
தாளம் : ஆதி
பல்லவி
திருவீதி
வருகின்றான் - எந்தன்
மனவீதி வருகின்றான் ராமன் (திருவீதி
அனுபல்லவி
மிதிலையின்
வீதியில் ஜனகன் மகளைக் கண்டு
முறுவலுடன் அவள் திருமுகம் நினைந்து கொண்டு (திருவீதி
சரணம்
- 1
வில்வலிமை
அறிந்து அவள் விழிவலிமையைக் கொண்டு
சுயம்வரம் வென்றவன் என் மனதையும் வென்றவன் (திருவீதி
சரணம்
- 2
ஒரு
மாது ஒரு சொல் ஒரு செயல் என்று
பெருமையுடன் இந்த நிலமிசை வாழ்ந்தவன் (திருவீதி
சரணம்
- 3
சரணம்
சரணம் என்று திருவடி பணிந்தவரை
அருகழைத்து இருத்தி கருணை புரிந்தவன் (திருவீதி
சரணம்
- 4
ஒருமுறையே
அவன் திருநாமம் உரைக்க
பிறவிப்பிணி அகற்றி திருவருள் செய்பவன் (திருவீதி
10)
பாடல்: ஸ்ரீக்ருஷ்ணன் கண் வளரும்
ராகம்: குறிஞ்சி
தாளம்:
பல்லவி
ஸ்ரீக்ருஷ்ணன்
கண் வளரும் நேரம் இது
மீண்டுமவன்
கண் மலரும் நேரம் எது (ஸ்ரீக்ருஷ்ணன்)
அனுபல்லவி
அவன்
குறும்பும் உடனுறங்கும் நேரம் இது
அதிலவனி
அயரும் சற்றே தூங்க விடு! (ஸ்ரீக்ருஷ்ணன்)
சரணம்-1
சகடமுதைத்
தாடியதில் வந்த களைப்போ
பலவீட்டில்
நவநீதம் உண்ட களைப்போ
மடுஅரவின்
சிரஸில் நடம்புரிந்த களைப்போ
சடுதியிலே
எமக்கருள வந்த களைப்போ (ஸ்ரீக்ருஷ்ணன்)
சரணம்-2
நங்கையரின்
துகிலெடுத்த குறும்பின் களைப்போ
ஒருநங்கைக்
கதையீந்து நின்ற களைப்போ
பஞ்சவர்க்கு
தூது என சென்ற களைப்போ
இங்கெமக்கு அருளவென வந்த களைப்போ (ஸ்ரீக்ருஷ்ணன்)
11)
பாடல் : வில்லேந்தி நடந்திடும்
ராகம் : மாயாமாளவ கௌள
பல்லவி
வில்லேந்தி
நடந்திடும் ராமா! - உனைச்
சொல்லேந்தி அடைந்திடுவேன் ராமா
அனுபல்லவி
நில்லாதோடும்
நதி நீ ராமா! - இந்தப்
பொல்லாதவனுக்கும் கதி நீ ராமா (வில்லேந்தி)
சரணம்
கல்லாயிருந்தவள்
உன்பதம் படவே
பொல்லாத
விதி தீர்ந்து தலைநிமிர்ந்தனளே
கல்லான
என்மனதில் உன்பதம் படவே
எல்லாப் பிறவிகளின் வினையகன்றிடுமே (வில்லேந்தி)
12)
பாடல்: எண்ணுதற்கெளியவனே
ராகம்: ஹம்ஸத்வனி
தாளம்:
பல்லவி
எண்ணுதற்
கெளியவனே எங்கள் முதல்வனே
கண்ணுதற்
கடவுளின் கரிமுக மைந்தனே (எண்ணுதற்)
அனுபல்லவி
விண்ணவரும்
மண்ணவரும் எண்ணிய செயல் முடிக்க
உன்னுவருன்னையே
உச்சி கணபதியே (எண்ணுதற்)
சரணம்
பங்கயற்கண்ணி
வள்ளி பாங்குடன் மணமுடிக்க
பன்னிருகையனுக்கு
பக்கத்திலிருந்தவனே
சங்கத்
தமிழ் அளித்த சங்கரன் மைந்தனே
இங்கு வந்தெமக்கருளும் வரசித்தி
கணபதியே (எண்ணுதற்)
13)
பாடல்: உந்தனுக்குப் பசி
ராகம்: ஆனந்தபைரவி
உந்தனுக்குப்
பசியென்றால் எந்தனன்பு கணேசா!
உண்டி
பெருத்தோன் வீட்டில் மோதகம் இரத்தலாகுமோ!
எந்தனிடம்
இயம்பியேல் நான் கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி
மோதகம்
படைத்துன்னைப் பணிந்திடுவேனே!
உந்தனுக்குப்
பசியென்றால் எம்பெருமான் சிவனே!
திருவோடேந்தி
ஊரில் இரத்தலாகுமோ!
எந்தனிடம்
இயம்பியேல் நான் அன்ன அபிஷேகம் செய்தே
உந்தன்
மலர்ப்பாதம் பணிந்திடுவேனே!
உந்தனுக்குப்
பசியென்றால் கந்தனே,
கடம்பனே நீ
குன்றின்
மேல் சினத்துடனே நின்றிடலாகுமோ!
எந்தனிடம்
இயம்பியேல் நான் தேனுடன் தினைமாவும்
தேடிப்பிடித்தே
உனக்கு படைத்துனைப் பணிவேனே!
உந்தனுக்குப்
பசியென்றால் எந்தன் செல்லக் கண்ணா!
வீடொறும்
சென்று வெண்ணை திருடியுண்ணலாகுமோ!
எந்தனிடம்
இயம்பியேல் நான் பால் தயிர் வெண்ணையொடு
பலகாரம்
படைத்தே பணிவேனே!
உந்தனுக்குப்
பசியென்றால் எந்தன் அன்னை அம்பிகையே!
உந்தனுண்டி
வாடிடவே பட்டினி கிடக்கலாகுமோ!
எந்தனிடம்
இயம்பியேல் நான் கஞ்சியொடு கூழ் இளநீர்
பொங்கலையும் படைத்துன்னைப் பணிவேனே!
14)
பாடல்: நவநீதமே நீ செய்த தவம்
ராகம்: ராகமாலிகை
நவநீதமே
நீ செய்த தவமென் தவமோ
கண்ணன் வந்து களவாட உன்னுடனே உறவாட
நவநீதமே நீ செய்த தவமென் தவமோ
உன்னையனைய உருகி கண்ணனை அழைத்தும்
இன்னும் அவன் வரக்காணேனே!
நவநீதமே நீ செய்த தவமென் தவமோ
முரளி
நீ செய்த தவமென்ன தவமோ
அவனதரம் பதிய அதில் மகிழ்ந்து நீ பாட
முரளி நீ செய்த தவமென்ன தவமோ
அவன் திருவடியாகிலும் கிடைத்திட நான் பாட
இன்னும் அவன் வரக்காணேனே!
முரளி நீ செய்த தவமென்ன தவமோ
காளிந்தி
நீ செய்த தவமென்ன தவமோ
அவன் கழல்களுந்தன் தலைமேல் களிநடம் புரிந்திட
காளிந்தி நீ செய்த தவமென்ன தவமோ
அவன் விரல் நுனியாகிலும் எனைத்தீண்ட
இன்னும் அவன் வரக்காணேனே!
காளிந்தி நீ செய்த தவமென்ன தவமோ
கோவர்தனமே
நீ செய்த தவமென் தவமோ
அவன் விரல் நுனியில் நீ அமர்ந்திடவே
கோவர்தனமே நீ செய்த தவமென் தவமோ
அவன் விழிக்கடையாகிலும் எனைத் தீண்டிடவே
இன்னும் அவன் வரக்காணேனே!
கோவர்தனமே நீ செய்த தவமென் தவமோ
ஆவினமே
நீவிர் செய்த தவமென் தவமோ
ஆருயிர் கண்ணனை அனுதினம் சூழ்ந்திருக்க
ஆவினமே நீவிர் செய்த தவமென் தவமோ
என் ஆவியடங்கும் இந்த இறுதி நொடியிலும்
இன்னும் அவன் வரக்காணேனே!
ஆவினமே நீவிர் செய்த தவமென் தவமோ
நவநீதமே
முரளி காளிந்தி கோவர்தனமே ஆவினமே
நீவிரெல்லாம்
செய்த தவம் என்ன தவமோ
இந்தக்
கண்ணனவன் உறவாட இதழ்கழல்
விரல்களுடன்
திருவடி எனைத் தீண்ட
இன்னும் அவன் வரக்காணேனே!
15)
பாடல்: காலைப் பொழுது மெல்ல
ராகம்: பௌளி / பூபாளம்
பல்லவி
காலைப்
பொழுது மெல்ல எழுந்து வருகிறது
விழிமலரே நீ மலர்ந்திடுவாய்
காலைப் பொழுது மெல்ல எழுந்து வருகிறது
விழிமலரே நீ மலர்ந்திடுவாய்
விழிமலரே நீ மலர்ந்திடுவாய்
அனுபல்லவி
வானிற்
புள்ளினங்களும் நிலமிசை உயிர்களும்
வரப்பிடை நீரும் விரைந்தன காண்
வரப்பிடை நீரும் விரைந்தன காண் (காலைப் பொழுது)
சரணம்
காளைகளொடு
நல்ல ஏருடை உழவர்கள்
கழனிகள் நோக்கி விரைவது காண்
மாதர்கள் அவர்தம் இல்லம் புதுக்கி
தீஞ்சுவை புதுவன்னம் படைப்பதும் காண்
ஏனிந்த அனந்தலோ வீணிலுன்
பொன்பொழுதை அதுவருந்துவதும் கண்டிலையோ
அனந்தலருந்துவதும் கண்டிலையோ
முடுகு
குருகொடு
சங்கம் இயம்பின கேட்டு
ஹரஹர
சிவசிவ என்றவன் கோயில்
திருவடி
சேர்ந்து அவனது புகழை
உருகியே
பாடி அருள்பெற்றிடவே
இருவிழி
மலர்ந்து விரைவினி லெழுவாய்
விழிமலரே நீ மலர்ந்திடுவாய் (காலைப் பொழுது)
16)
பாடல்: பிறவிகளென்னும்
ராகம்: ராகமாலிகை
பிறவிக
ளென்னும் வாரிதியில் நான்
மறைகளன்ன அழுந்தினேனை
கரைதனில் சேர்க்க மீனவனாக
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிக
ளென்னும் ஆழ்கடலில்
சரிகின்றே னொரு மத்தெனவே
சரியுமெனை நிலைநிறுத்திட கூர்மமாய்
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிக
ளென்னும் பெரும்பள்ளந் தனில்
ப்ருதிவியைப் போல வீழ்ந்துளேனை
கரம்தனி லேந்தும் வராஹமாக
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிக
ளென்னும் இரணியன்வசம்
சிறுபிள்ளை போல தவிக்குமென்னை
பெருநகத்தாலென் பிறவிகளறுக்கும் நரஸிம்ஹமென
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிகளென்னும்
முடிவில்லாத அடிகள்
நடந்திளைத் தேனெனை உன்னிரு
அடிகளில் முக்தியளிக்கும் வாமனனாக
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிகளென்னும்
அரசர்கள் ஆட்சியில்
பெரிதும் பெரிதும் துன்புறு மென்னையுன்
பரசுவைக் கொண்டு காத்திடும் ராமனாய்
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிக
ளென்னும் ஆரண்யத்தில்
வருந்தியலையும் என்னை மீட்கவுன்
பெருவில் தரித்த ராமனாக
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிகளின்
பெரும்பிடியில் உழலுமிச்
சிறியவனுக்கு வலுவினை யூட்டும்
பெருங் கலப்பையுடை பலராமனாக
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிகடோறும்
கடமை புரிந்தும்
கடனழியாக் கடனாளியெனை உன்
கருணைவிழியால் காத்திடும் கண்ணனாய்
மறுமுறை வருவாய் மாதவா!
பிறவிகள்
போதும் போதும் இனிநான்
பிறவாநிலை
பெற இறவாப் புகழ்பெற
புரவியிலேறி
கல்கி வடிவிலே
விரைவாய் வருவாய் மாதவா!
17)
பாடல்: உன்னையே சரண்
ராகம்: ஹம்ஸாநந்தி
தாளம்:
பல்லவி
உன்னையே
சரண்புகுந்தேன் ஸ்ரீக்ருஷ்ணா
உன்னையே
சரண்புகுந்தேன்
உன்னையே
சரண்புகுந்தேன் ஸ்ரீக்ருஷ்ணா
உன்னையே
சரண்புகுந்தேன்
அனுபல்லவி
என்னையேன்
படைத்தனை என்றெண்ணியிருந்தேனே
உன்னாலும்
பயனுண்டு என்றெனக்குணர்த்தினை! (உன்னையே
சரணம் – 1
எண்ணங்கள்
ஆயிரம் எனை அழுத்திடினும்
கண்டுகொள்ளாமலே
பிறர் எனை விடினும்
என்
கடன் பணிசெய்து புண்ணியம் தேடவே
என்னைப்
பணித்தனை ஏற்றுக் கொள்வேனே (உன்னையே
சரணம் – 2
புண்ணியம்
ஏதேனும் என்வசமிருந்தால்
உன்னதென்றே
அளித்தேன் கர்ணனைப் போலே
இன்னமும்
பிறவாது என்னை உன் திருவடியில்
உன்னைப் போல் என்னையும் செய்தருள்வாயே (உன்னையே
18)
பாடல்: நதிபாடும் ஜதி
ராகம்:
தாளம்:
பல்லவி
நதிபாடும் ஜதி கேட்டேன்
கண்ணன் குழலோசையுடன் கேட்டேன்
நதிபாடும் ஜதி கேட்டேன்
கண்ணன் குழலோசையுடன் கேட்டேன்
அனுபல்லவி
ஜதி கேட்டு நதி தேடி ஆவினம் ஓடும்
குழல் கேட்டு சிலையாகும் - கண்ணன்
குழல் கேட்டு சிலையாகும் (நதிபாடும்
சரணம்-1
தமிழ்
தந்த திருப்பாவை மொழிகளைக் கேட்டேன்
கோதைதன் அகம் பார்த்தேன் - உடன்
ராதையும் வரப் பார்த்தேன் - பக்தி
தீதற உறப் பார்த்தேன் (நதிபாடும்
சரணம்-2
ஸ்ருதி சொன்ன வழியேக
கீதையைக் கேட்டென்
விதி சொன்ன வழி மாற்றினேன் - கண்ணன்
மொழி சொன்ன வழியேகினேன் - எந்தன்
எழுபிறவி கடன் தீர்கிறேன் (நதிபாடும்
19)
பாடல்: கோகுலம் ஆள்பவனே
ராகம்: கானடா
தாளம்:
பல்லவி
கோகுலம்
ஆள்பவனே கோபியர் நாயகனே கோவர்த்தன கிரிதாரி
ஆநிரை
யாதவனே அருமருந்தானவனே ஹரி நாராயண வாழி! (கோகுலம்
சரணம்-1
வெண்ணையும்
மண்ணும் ஒண்ணோ உனக்கு
உன்மனத்
திண்ணம்தான் உண்டோ எனக்கு
விண்ணையும்
மண்ணையும் அன்றளந்தவனே
என்னிலும்
அனுதினம் அலர் மாதவனே (கோகுலம்
சரணம்-2
புல்லாங்குழலிசை
தந்தவன் நீ
எல்லா
உயிர்களிலும் உறைந்திருப்பவன் நீ
நண்பனும்
நீ நல்லாசிரியனும் நீ
நல்லோரைக் காக்க ஒல்லை வா நீ (கோகுலம்
20)
பாடல்: வந்தெம்மை ஆட்கொள்வாய்
ராகம்:
தாளம்:
பல்லவி
வந்தெம்மை
ஆட்கொள்வாய்
எந்தன்
பரம்பொருளே (வந்தெம்மை)
அனுபல்லவி
நிந்தனை
செய்வோர்க்கும் நின்பதம் தந்தவனே
வந்தனை
செய்கின்றோம் தந்தருள் உன்னையே (வந்தெம்மை)
சரணம்
சிந்தையில்
உனையன்றி
எந்த
வேறு நினைவுண்டோ
வந்தருள்
புரிவாயே
எந்தன் பரம்பொருளே (வந்தெம்மை)
21)
பாடல்: யமுனாதீரம் பௌர்ணமி
ராகம்: குமுதக்ரியா
தாளம்:
பல்லவி
யமுனாதீரம்
பௌர்ணமி நேரம்
அவன்
வந்து நின்றான் ராதை விழியோரம் (யமுனாதீரம்)
அனுபல்லவி
இரவின்
நீளம் குறையும் நேரம்
இவளின்
மனதில் நிறையுது பாரம் (யமுனாதீரம்)
சரணம்
குமுதமிதழ்
விரிந்து நகைக்கின்றதே
நிலவொளி
அவளுடன் பகைக்கின்றதே
விழிகளில்
நீர்வந்து மறைக்கின்றதே
அதில் ராதை மனம் சற்றே திகைக்கின்றதே (யமுனாதீரம்)
22)
பாடல்: என்ன அவரசமோ
ராகம்: தேஷ்
தாளம்:
பல்லவி
என்ன
அவசரமோ விரைந்து செல்கிறாய்
நின்று
பார் என் நிலவே
– உனக்கு (என்ன அவசரமோ)
அனுபல்லவி
கண்ணன்
வரும் நேரம் சென்று விட்டால் நீ
என்று
காண்பாய் நிலவே
– அவனை
பிறகென்று
காண்பாய் நிலவே
– உனக்கு (என்ன அவசரமோ)
சரணம் – 1
நின்றுலாவிடும்
மழைமுகில் போல் வண்ணன்
குன்றெடுத்து
குலம் காத்திட்ட மன்னன்
அன்று
ஆலிலையில் துயின்ற கண்ணன்
நின்று
நெடிதுயர்ந்தவனை காணாது உனக்கு (என்ன அவசரமோ)
சரணம் – 2
புல்லுமவன்
கையில் குழலென மாறும்
– அவன்
சொல்லும்
நமக்கோர் அருமருந்தாகும்
தொல்லைகள்
ஆயிரம் வந்தினும் தீரும்
எல்லையில்லா இன்பம் வந்து சேரும் (என்ன
அவசரமோ)
23)
பாடல்: வஸீகர ஸுந்தர ரூபம்
ராகம்: ஹிந்தோளம்
தாளம்:
பல்லவி
வஸீகர
ஸுந்த3ரரூபம் பதா3ம்பு4ஜமேவ ப்ரதா4நம்
ஸதா3 தவ நாமஸ்மரணம் நமாமி ஸுந்த3ரவிநாயகம்
ஸுந்த3ரவிநாயகம் நமாமி ஸுந்த3ரவிநாயகம்
ஸுந்த3ரவிநாயகம் நமாமி ஸுந்த3ரவிநாயகம் (வஸீகர ஸுந்த3ரரூபம்
சரணம்-1
க்ஷீராபி3ஷேகமஹம் கரோமி பஞ்சாம்ருதா3பி3ஷேகம்
கரோமி
ஸாரகாபி3ஷேகம் கரோமி ச தவபாத3மஹம் சரணம் கரோமி
ஸுந்த3ரவிநாயகம் நமாமி ஸுந்த3ரவிநாயகம்
ஸுந்த3ரவிநாயகம் நமாமி ஸுந்த3ரவிநாயகம் (வஸீகர ஸுந்த3ரரூபம்
சரணம்-2
வஸ்த்ராப3ரணம் ஸமர்பயாமி புஷ்பாணீமஹம் பூஜயாமி
தவ
த்3வாத3சநாமம் வதா3மி ச தவபாத3மஹம் சரணம் கரோமி
ஸுந்த3ரவிநாயகம் நமாமி ஸுந்த3ரவிநாயகம்
ஸுந்த3ரவிநாயகம் நமாமி ஸுந்த3ரவிநாயகம் (வஸீகர ஸுந்த3ரரூபம்
சரணம்-3
தூ4பதீ3பம் சந்த3ர்சயாமி நைவேத்3யமஹம் நிவேத3யாமி
த்வாம்
ப்ரத3க்ஷிணமஹம் கரோமி த்வம் மம இஷ்டவரம் து தே3ஹி
ஸுந்த3ரவிநாயகம் நமாமி ஸுந்த3ரவிநாயகம்
ஸுந்த3ரவிநாயகம் நமாமி ஸுந்த3ரவிநாயகம் (வஸீகர ஸுந்த3ரரூபம்
No comments:
Post a Comment