இந்த கருட மந்திரத்தை 108 முறை தொடர்ந்து சொன்னால் உங்கள் நெற்றியில் லேசாக வியர்க்கும். AC போட்டு சொன்னாலும் வியர்க்கும். அதே சமயம் நீங்கள் நல்ல வெய்யிலில் இந்த மந்திரத்தை 108 முறை சொன்னாலும் வியர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் நெற்றியின் இடது பக்கம் ஒருவித லேசான குளிர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள்.
ஓம் ஸ்ரீ காருண்யாய க3ருடா3ய, வேத3ரூபாய
வினதாபுத்ராய விஷ்ணுப4க்திப்ரியாய அம்ருதகலசஹஸ்தாய
ப3ஹு பராக்ரமாய பக்ஷிராஜாய சர்வவக்ர நாசநாய
சர்வதோ3ஷ சர்பதோ3ஷ விஷசர்ப விநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரம் கொஞ்சம் பெரிசு இதை 108 முறை தொடர்ந்து சொல்ல 40 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். அதனால் காலையில் 36, மாலையில் 36, இரவு 36, என மூன்று வேளை இந்த மந்திரத்தை சொல்லலாம் இல்லை என்றால் குறைந்த பக்ஷம் காலை 11, மாலை 11, இரவு 11 என ஒரு நாளைக்கு 33 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். இதை சொல்ல, சொல்ல கற்பனையே பண்ணி பார்க்க முடியாத ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை நீங்கள் உணர்வீர்கள் .
எம்பெருமான் திருவடிகளே சரணம், கருடாழ்வார் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment