Saturday, March 19, 2022


#108_பில்வார்ச்சனை_அர்த்தத்துடன்

 

4th October 2018 அன்று இத்தொடர் ஆரம்பிக்கப் பட்டது.

 

இன்று குருப்பெயர்ச்சி நாள். இன்றைய நன்னாளில் ஸ்ரீகுருபகவானின் திருவடிகளையும், குருவடிவான ஸ்ரீதக்ஷ்ணாமூர்த்தியின் திருவடிகளையும் பணிந்து வணங்கி “108 பில்வார்ச்சனைஅர்த்தத்துடன்என்னும் இத்தொடரை இனிதே ஆரம்பிக்கவுள்ளேன். எச்செயலையும் தொடங்குமுன் ஸ்ரீவிநாயகப் பெருமானையும் குருநாதரையும் நினைந்து வணங்குவது மரபு. அதன்படி முதலில் :-

 

கணபதி வணக்கம்

 

பாட்டுடைத் தலைவனை யெந்தன்

பாட்டிடை யிருத்திட விழைந்தேன்

கோட்டுடை விநாயகா நீயெம்மன

வீட்டிடை யுறைந்தே பொருள்தனை

நீட்டியுரை செய்தவை படித்திடுமின்

நாட்டிடை யுறைமாந்தர் பரமனின்

வீட்டினில் நீங்கா துறைந்திடவே

நாட்டமாய் வந்தருள் செய்குவையே!

 

குரு வணக்கம்

 

ஐம்முகத்தான் ஞானமதை மோனமெனும் நிலையினிலே

தென்முகத்தா னோக்கிக்கல் லாலமர நீழலிலே

நான்முகத்தான் மாந்தருக்கு ஓதிடுமப் போதினிலே

மன்மதன்தான் செய்பிழையால் தேகமதைப் போக்கிடவே

தன்முகத்தா னமைந்தநுதல் விழிதிறந்து பார்த்தவனை

என்னகத்தா னிருத்திமலர்ப் பாதமதைப் பணிந்தேனே!

 

 

 

 

 

 

 

 

 

 

 

अथ बिल्वाष्टोत्तरशतनामस्तोत्रम्

இப்போது 108 பில்வார்ச்சனை தொடக்கம்.

 

त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं त्रियायुधम्

त्रिजन्म पापसंहारं एकबिल्वं शिवार्पणम् १॥

 

த்ரித³லம் த்ரிகு³ணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுத4ம்

த்ரிஜந்ம பாபஸம்ஹாரம் ஏகபி³ல்வம் சிவார்பணம் 1

 

முப்பிறவிகளில் செய்த பாவங்களை எரித்து அழிக்கக் கூடிய, திரிசூலம், முக்கண், மூன்று ஆயுதங்களைக் கையிலேந்தியுள்ள சிவனை மூன்று இலைகள் கூடிய ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பிக்கிறேன்.

 

त्रिशाखैः बिल्वपत्रैश्च अच्छिद्रैः कोमलैः शुभैः

तव पूजां करिष्यामि एकबिल्वं शिवार्पणम् २॥

 

த்ரிசாகை: பி3ல்வபத்ரைஸ்ச அச்சித்3ரை: கோமலை: சுபை4: |

தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பி3ல்வம் சிவார்பணம் || 2 ||

 

மிகவும் மென்மையான, முக்கிளையாக உள்ள ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி உனக்கு சமர்ப்பித்து நான் உன்னுடைய பூஜையை செய்கிறேன்.

 

सर्वत्रैलोक्यकर्तारं सर्वत्रैलोक्यपालनम्

सर्वत्रैलोक्यहर्तारं एकबिल्वं शिवार्पणम्

 

ஸர்வத்ரைலோக்யகர்தாரம் ஸர்வத்ரைலோக்யபாலநம் |

ஸர்வத்ரைலோக்யஹர்தாரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 3 ||

 

மூவுலகையும் படைத்து, காத்து, அழித்து என முத்தொழில் புரிகின்ற சிவபெருமானை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

नागाधिराजवलयं नागहारेण भूषितम्

नागकुण्डलसंयुक्तं एकबिल्वं शिवार्पणम् ४॥

 

நாகா3தி4ராஜவலயம் நாக3ஹாரேண பூ4ஷிதம் |

நாக3குண்ட3லஸம்யுக்தம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 4 ||

 

ஸர்ப்பங்களின் தலைவனை கங்கணமாக அணிந்தவனும், நாகங்களை ஆபரணமாக அணிந்தவனும், சுருண்ட நாகங்களை குண்டலமாக அணிந்தவனுமாகிய சிவபெருமானை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

अक्षमालाधरं रुद्रं पार्वतीप्रियवल्लभम्

चन्द्रशेखरमीशानं एकबिल्वं शिवार्पणम् ५॥

 

அக்ஷமாலாத4ரம் ருத்3ரம் பார்வதீப்ரியவல்லப4ம் |

சந்த்3ரசேக2ரமீசாநம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 5 ||

 

ருத்ராக்ஷமாலையணிந்தவனை, ருத்ரனை, பார்வதிக்கு மிகவும் ப்ரியமான நாயகனை, சிரசில் பிறைசந்திரனைச் சூடியவனை, அனைவருக்கும் தலைவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

त्रिलोचनं दशभुजं दुर्गादेहार्धधारिणम्

विभूत्यभ्यर्चितं देवं एकबिल्वं शिवार्पणम्

 

த்ரிலோசநம் த3சபு4ஜம் து3ர்கா3தே3ஹார்த4தா4ரிணம் |

விபூ4த்யப்4யர்சிதம் தே3வம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 6 ||

 

முக்கண்ணனை, பத்துத் தோள்களையுடையவனை, துர்க்கை என்னும் உமாதேவியாரைத் தன்னில் பாதியாக உடையவனை, அந்த இறைவனை, பெரும் சக்தி படைத்தவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

त्रिशूलधारिणं देवं नागाभरणसुन्दरम्

चन्द्रशेखरमीशानं एकबिल्वं शिवार्पणम् ७॥

 

த்ரிசூலதா4ரிணம் தே3வம் நாகா34ரணஸுந்த3ரம் |

சந்த்3ரசேக2ரமீசாநம் ஏகபி3ல்வம் சிவார்பணம் ||7||

 

திரிசூலத்தைக் கையில் ஏந்தியவனை, நாகாபரணத்தை அணிந்துள்ள அழகனை, சிரசில் பிறைச்சந்திரனை சூடியவனை, அந்த இறைவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

गङ्गाधराम्बिकानाथं फणिकुण्डलमण्डितम्

कालकालं गिरीशं एकबिल्वं शिवार्पणम् ८॥

 

3ங்கா34ராம்பி3காநாத2ம் ப2ணிகுண்ட3லமண்டி3தம் |

காலகாலம் கி3ரீசம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 8 ||

 

சிரசில் கங்கையைத் தாங்கியிருப்பவனை, அம்பிகையின் நாதனை, பாம்புக் குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனை, காலனுக்கே காலனை, மற்றும் மலைகளின் தலைவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

शुद्धस्फटिक सङ्काशं शितिकण्ठं कृपानिधिम्

सर्वेश्वरं सदाशान्तं एकबिल्वं शिवार्पणम्

 

சுத்34ஸ்ப2டிக ஸங்காசம் சிதிகண்ட2ம் க்ருபாநிதி4ம் |

ஸர்வேச்வரம் ஸதா3சாந்தம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 9 ||

 

தூயஸ்படிக நிறத்தவனை, நீலகண்டனை, க்ருபாநிதியை, ஸர்வேஸ்வரனை, எப்போதும் சாந்தமாக உள்ளவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

 

 

सच्चिदानन्दरूपं परानन्दमयं शिवम्

वागीश्वरं चिदाकाशम् एकबिल्वं शिवार्पणम् १०

 

ஸச்சிதா3நந்தரூபம் ச பராநந்தமயம் சிவம் |

வாகீ3ச்வரம் சிதா3காசம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 10 ||

 

என்றும் ஆனந்தமயரூபனை, பேரின்பமயமானவனை, சிவனை, மொழியின் தலைவனை, ஆகாயம் போன்று விரிந்திருப்பவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

शिपिविष्टं सहस्राक्षं कैलासाचलवासिनम्

हिरण्यबाहुं सेनान्यं एकबिल्वं शिवार्पणम् ११

 

சிபிவிஷ்டம் ஸஹஸ்ராக்ஷம் கைலாஸாசலவாஸிநம் |

ஹிரண்யபா3ஹும் ஸேநாந்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 11 ||

 

அளவற்றவனை, ஆயிரம் கண்களுடையவனை, கயிலைமலையில் வசிப்பவனை, தங்கம் போன்று ஜொலிக்கும் தோளுடையவனை, படைத்தலைவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

अरुणं वामनं तारं वास्तव्यं चैव वास्तवम्

ज्येष्टं कनिष्टं गौरीशं एकबिल्वं शिवार्पणम् १२

 

அருணம் வாமநம் தாரம் வாஸ்தவ்யம் சைவ வாஸ்தவம் |

ஜ்யேஷ்டம் கநிஷ்டம் கௌ3ரீசம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 12 ||

 

சிவந்த நிறத்தவனை, போற்றுதலுக்குரியவனை, நம்மையெல்லாம் காப்பவனை, வீடுபேறு நல்குவோனை, என்றும் உள்ளவனை, முன்னைப் பொருளுக்கும் முன்னவனை, பின்னைப் புதுமைக்கும் புதியவனை, கௌரி என்ற பெயருடைய பார்வதியின் நாயகனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

हरिकेशं सनन्दीशं उच्चैर्घोषं सनातनम्

अघोररूपकं कुम्भं एकबिल्वं शिवार्पणम् १३

 

ஹரிகேசம் ஸநந்தீ3சம் உச்சைர்கோ4ஷம் ஸநாதநம் |

அகோ4ரரூபகம் கும்ப4ம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 13 ||

 

நியாயங்களுக்குத் தலையாயவனை, பெருமகிழ்ச்சியின் நாயகனை, பேரொலி வடிவினனை, என்றுமுள்ளவனை, அகோர ரூபனை, கலசவடிவினனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

पूर्वजावरजं याम्यं सूक्ष्मं तस्करनायकम्

नीलकण्ठं जघन्यं एकबिल्वं शिवार्पणम् १४

 

பூர்வஜாவரஜம் யாம்யம் ஸூக்ஷ்மம் தஸ்கரநாயகம் |

நீலகண்ட2ம் ஜக4ந்யம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 14 ||

 

எல்லோருக்கும் முன்பே தோன்றியவனை, பரணி நக்ஷத்ர அதிபதியை, சூக்ஷ்ம வடிவானவனை, மனதை கொள்ளை கொள்ளும் நாயகனை, நீலகண்டனை, அனைத்துலகமானவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सुराश्रयं विषहरं वर्मिणं वरूघिनम्

महासेनं महावीरं एकबिल्वं शिवार्पणम् १५

 

ஸுராச்ரயம் விஷஹரம் வர்மிணம் ச வரூகி4நம் |

மஹாஸேநம் மஹாவீரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 15 ||

 

தேவாதி தேவர்களுக்கு புகலிடமானவனை, விஷத்தை அழித்தவனை, மனிதர்களுக்கும் ஆயுதங்களுக்கும் நாயகனை, பாதுகாவலனை, காவலுக்கு அதிபதியை, மஹா சேனாதிபதியை, பெரும் வீரனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

कुमारं कुशलं कूप्यं वदान्यञ्च महारथम्

तौर्यातौर्यं देव्यं एकबिल्वं शिवार्पणम् १६

 

குமாரம் குசலம் கூப்யம் வதாந்யஞ்ச மஹாரத2ம் |

தௌர்யாதௌர்யம் ச தே3வ்யம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 16 ||

 

அக்நி வடிவானவனை, ஆனந்த வடிவானவனை, செம்பு நிறத்தவனை, பஞ்சமுக மஹாவீரனை, இசை மற்றும் மௌனத்தின் வடிவினனை, தேவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

दशकर्णं ललाटाक्षं पञ्चवक्त्रं सदाशिवम्

अशेषपापसंहारं एकबिल्वं शिवार्पणम् १७

 

3சகர்ணம் லலாடாக்ஷம் பஞ்சவக்த்ரம் ஸதாசிவம் |

அசேஷபாபஸம்ஹாரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 17 ||

 

பத்து செவிகளுடையவனை, நெற்றிக் கண்ணுடையவனை, ஐந்து முகங்களுடையவனை, ஸதாசிவனை, அனைத்து பாவங்களையும் அழிக்கின்றவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

नीलकण्ठं जगद्वन्द्यं दीननाथं महेश्वरम् ।

महापापसंहारं एकबिल्वं शिवार्पणम् ॥ १८ ॥

 

நீலகண்ட2ம் ஜக3த்3வந்த்3யம் தீ3நநாத2ம் மஹேச்வரம் |

மஹாபாபஸம்ஹாரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 18 ||

 

நீலகண்டனை, உலகமே வணங்குகின்றவனை, ஏழைப்பங்காளனை, மஹேஸ்வரனை, பெரும் பாவங்களையெல்லாம் அழிக்கின்றவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

चूडामणीकृतविभुं वलयीकृतवासुकिम्

कैलासवासिनं भीमं एकबिल्वं शिवार्पणम् १९

 

சூடா3மணீக்ருதவிபு4ம் வலயீக்ருதவாஸுகிம் |

கைலாஸவாஸிநம் பீ4மம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 19 ||

 

பிறைச்சந்திரனை சிரசில் அணிந்து கொண்ட சக்தி மிகுந்தவனை, வாசுகி என்ற நாகத்தை கங்கணமாக அணிந்தவனை, கைலாயத்தில் வசிப்பவனை, அற்புதமானவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

कर्पूरकुन्दघवलं नरकार्णवतारकम्

करुणामृतसिन्धुं एकबिल्वं शिवार्पणम् २०

 

கற்பூரகுந்த34வலம் நரகார்ணவதாரகம் |

கருணாம்ருதஸிந்து4ம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 20 ||

 

அழகிய கற்பூர முல்லையை அணிந்தவனும், நரகத்திலிருந்து நம்மையெல்லாம் மீட்பவனும், கருணைக்கடல் வடிவானவனையுமான சிவனை ஒற்றை பில்வத்தை சிவார்ப்பணம் என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

महादेवं महात्मानं भुजङगाधिपकङकणम् |

महापापहरं देवं एकबिल्वं शिवार्पणम् || २१ ||

 

மஹாதே3வம் மஹாத்மாநம் பு4ஜங்கா3தி4பகங்கணம் |

மஹாபாபஹரம் தே3வம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 21 ||

 

மஹாதேவனை, மஹாத்மாவை, நீண்ட ஸர்ப்பத்தை ஆபரணமாக அணிந்தவனை, பெரும்பாவங்களை அழிப்பவனை, அந்த தேவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

भूतेशं खण्डपरशुं वामदेवं पिनाकिनम् |

वामे शक्तिधरं श्रेष्टं एकबिल्वं शिवार्पणम् || २२ ||

 

பூ4தேசம் க2ண்ட3பரசும் வாமதே3வம் பிநாகிநம் |

வாமே சக்தித4ரம் ச்ரேஷ்டம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 22 ||

 

பூதங்களுக்குத் தலைவனை, பகைவரைத் துண்டாக்கும் பரசுவை, வாமதேவன் என்ற வடிவினனை பதினொரு ருத்ர நாமங்களில் ஒன்றான பிநாகினி என்ற பெயருடையவனை, இடப்பாகத்தில் சக்தியை உடையவனை, முதன்மையானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

फालेक्षणं विरूपाक्षं श्रीकण्ठं भक्तवत्सलम् |

नीललोहितखट्वाङगं एकबिल्वं शिवार्पणम् || २३ ||

 

பா2லேக்ஷணம் விரூபாக்ஷம் ச்ரீகண்ட2ம் பக்தவத்ஸலம் |

நீலலோஹிதக2ட்வாங்க3ம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 23 ||

 

வரங்களை அளிப்பவனை, வேறுபட்ட விழியையுடையவனை (நெற்றிக்கண்), அழகிய கழுத்தையுடையவனை, பக்தர்களுக்கு ப்ரியமானவனை, கரும்பாம்பினை ஆயுதமாகக் கொண்டவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

कैलासवासिनं भीमं कठोरं त्रिपुरान्तकम् |

वृषाङ्कं वृषभारूढं एकबिल्वं शिवार्पणम् || २४ ||

 

கைலாஸவாஸிநம் பீ4மம் கடோ2ரம் த்ரிபுராந்தகம் |

வ்ருஷாங்கம் வ்ருஷபா4ரூட4ம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 24 ||

 

கைலாய மலையில் வசிப்பவனை, அற்புதமானவனை, கையில் திருவோடு ஏந்தியவனை, த்ரிபுரங்களை எரித்தவனை, ஏறு போன்றவனை, விடையேறியவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सामप्रियं सर्वमयं भस्मोद्धूलितविग्रहम् |

मृत्युञजयं लोकनाथं एकबिल्वं शिवार्पणम् || २५ ||

 

ஸாமப்ரியம் ஸர்வமயம் ப4ஸ்மோத்3தூ4லிதவிக்3ரஹம் |

ம்ருத்யுஞ்ஜயம் லோகநாத2ம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 25 ||

 

நம்மோடு நெருக்கமானவனை, எங்கும் நிறைந்தவனை, சாம்பல் தூவப்பட்ட மேனியனை, மரணமில்லாதவனை, உலகங்களுக்கெல்லாம் தலைவனை, ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

दारिद्र्यदुःखहरणं रविचन्द्रनलेक्षणम् |

मृगपाणिं चन्द्रमौलिं एकबिल्वं शिवार्पणम् || २६ ||

 

தா3ரித்3ர்யது3:2ஹரணம் ரவிசந்த்3ரநலேக்ஷணம் |

ம்ருக3பாணிம் சந்த்3ரமௌலிம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 26 ||

 

வறுமை மற்றும் துக்கங்களை அழிப்பவனை, ஸூர்யசந்திரர்கள் மற்றும் அக்நியை விழிகளாகக் கொண்டவனை, மானைக் கையில் ஏந்தியவனை, சந்திரனை தலையில் சூடியுள்ளவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सर्वलोकभयाकारं सर्वलोकैकसाक्षिणम् |

निर्मलं निर्गुणाकारं एकबिल्वं शिवार्पणम् || २७ ||

 

ஸர்வலோகப4யாகாரம் ஸர்வலோகைகஸாக்ஷிணம் |

நிர்மலம் நிர்கு3ணாகாரம் ஏகபில்3வம் சிவார்பணம் || 27 ||

 

அனைத்து உலகங்களையும் நடுநடுங்கச் செய்பவனை, அனைத்து உலகங்களையும் கவனித்துக் கொண்டிருப்பவனை, புனிதமானவனை, குணங்களில்லாதவனை, ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सर्वतत्वात्मकं साम्बं सर्वतत्त्वविदूरकम् |

सर्वतत्त्वस्वरूपं एकबिल्वं शिवार्पणम् || २८ ||

 

ஸர்வதத்வாத்மகம் ஸாம்ப3ம் ஸர்வதத்வவிதூ3ரகம் |

ஸர்வதத்வஸ்வரூபம் ச ஏகபில்3வம் சிவார்பணம் || 28 ||

 

தானே அனைத்துமாயுள்ளவனை, பார்வதி அன்னையால் ஆராதிக்கப் படுபவனை, அனைத்து தத்துவங்களுக்கும் அப்பால் உள்ளவனை, அனைத்து தத்துவங்களின் வடிவானவனை, ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सर्वलोकगुरुं स्थाणुं सर्वलोकवरप्रदम् |

सर्वलोकैकनेत्रं एकबिल्वं शिवार्पणम् || २९ ||

 

ஸர்வலோககு3ரும் ஸ்தா2ணும் ஸர்வலோகவரப்ரத3ம் |

ஸர்வலோகைகநேத்ரம் ச ஏகபில்3வம் சிவார்பணம் || 29 ||

 

ஸர்வலோகங்களுக்கும் குருவானவனை, அசைவற்றவனை, ஸர்வலோகங்களுக்கும் வரங்கள் அளிப்பவனை, ஸர்வலோகங்களையும் பார்த்துக் கொண்டிருப்பவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

मन्मथोद्धरणं शैवं भवभर्गं परात्मकम् |

कमलाप्रियपूज्यं एकबिल्वं शिवार्पणम् || ३० ||

 

மந்மதோ2த்34ரணம் சைவம் ப4வப4ர்க3ம் பராத்மகம் |

கமலாப்ரியபூஜ்யம் ச ஏகபில்3வம் சிவார்பணம் || 30 ||

 

மன்மதனை எரித்தவனை, சிவனை, வளமையின் ஒளியை, பரமாத்மாவை, தாமரை மலரால் விரும்பி பூஜிக்கக் கூடியவனை, ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

तेजोमयं महाभीमं उमेशं भस्मलेपनम् |

भवरोगविनाशं एकबिल्वं शिवार्पणम् || ३१ ||

 

தேஜோமயம் மஹாபீ4மம் உமேசம் ப4ஸ்மலேபநம் |

4வரோக3விநாசம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 31 ||

 

மிகுந்த ஒளி பொருந்தியவனை, மிகவும் அற்புதமானவனை, உமையன்னையின் நாயகனை, சாம்பலை உடலெங்கும் பூசியவனை, பிறவிப்பிணி தீர்ப்பவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

स्वर्गपवर्गफलदं रघुनाथवरप्रदम् |

नगराजसुताकान्तं एकबिल्वं शिवार्पणम् || ३२ ||

 

ஸ்வர்க3பவர்க3ஃபலத3ம் ரகு4நாத2வரப்ரத3ம் |

நக3ராஜஸுதாகாந்தம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 32 ||

 

ஸ்வர்க்கம் மற்றும் மோக்ஷத்தையளிப்பவனை, உயர்ந்த பதவியை விரைவாக அளிப்பவனை, மலைகளுக்கெல்லாம் அரசனான ஹிமவான் புத்ரியின் மனங்கவர்ந்தவனை, ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

मञ्जीरपादयुगलं शुभलक्षणलक्षितम् |

फणिराजविराजं एकबिल्वं शिवार्पणम् || ३३ ||

 

மஞ்ஜீரபாத3யுக3லம் சுப4லக்ஷணலக்ஷிதம் |

ஃபணிராஜவிராஜம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 33 ||

 

இரு பாதங்களிலும் தண்டையணிந்தவனை, பெருமகிழ்ச்சியின் இருப்பிடமாக உணரப்படுபவனை, ஸர்ப்பராஜனை மேனியில் அணிந்தவனை, அந்த சிவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

निरामयं निराधारं निस्सङगं निष्प्रपञ्चकम् |

तेजोरूपं महारौद्रम् एकबिल्वं शिवार्पणम् || ३४ ||

 

நிராமயம் நிராதா4ரம் நிஸ்ஸங்க3ம் நிஷ்ப்ரபஞ்சகம் |

தேஜோரூபம் மஹாரௌத்3ரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 34 ||

 

அனைத்துமாக இருப்பவனை, தனக்கென்று எவருமில்லாது தனித்திருப்பவனை, பற்றில்லாதவனை, விவரித்துரைப்பதற்கு அரிதானவனை, மிகுந்த ஒளிவடிவானவனை, ஸூர்யனைப் போன்று பேரொளி படைத்தவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सर्वलोकैकपितरं सर्वलोकैकमातरम् |

सर्वलोकैकनाथं एकबिल्वं शिवार्पणम् || ३५ ||

 

ஸர்வலோகைகபிதரம் ஸர்வலோகைகமாதரம் |

ஸர்வலோகைகநாத2ம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 35 ||

 

அனைத்து உலகங்களுக்கும் தந்தையை, அனைத்து உலகங்களுக்கும் அன்னையை, அனைத்து உலகங்களுக்கும் தலைவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

चित्राम्बरं निराभासं वृषभेश्वरवाहनम् |

नीलग्रीवं चतुर्वक्त्रं एकबिल्वं शिवार्पणम् || ३६ ||

 

சித்ராம்ப3ரம் நிராபா4ஸம் வ்ருஷபே4ச்வரவாஹநம் |

நீலக்3ரீவம் சதுர்வக்த்ரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 36 ||

 

பன்மடங்கு விரிந்த ஆகாயம் போன்றவனை, சொல்லில் அடங்காதவனை, ரிஷபம் என்னும் நந்திகேச்வரனை வாஹனமாக உடையவனை, நீலநிறமான கழுத்தையுடையவனை நான்கு முகங்களையுடையவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

रत्नकञ्चुकरत्नेशं रत्नकुण्डलमण्डितम् |

नवरत्नकिरीटं एकबिल्वं शिवार्पणम् || ३७ ||

 

ரத்நகஞ்சுகரத்நேசம் ரத்நகுண்ட3லமண்டி3தம் |

நவரத்நகிரீடம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 37 ||

 

ரத்னங்களாலான மேலாடையை அணிந்தவனும், ரத்னத்திற்குத் தலைவனும், ரத்னகுண்டலமணிந்தவனும், நவரத்னங்களாலான க்ரீடத்தை யணிந்தவனுமாகிய சிவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

दिव्यरत्नाङगुलीस्वर्णं कण्ठाभरणभूषितम् |

नानारत्नमणिमयं एकबिल्वं शिवार्पणम् || ३८ ||

 

தி3வ்யரத்நாங்கு3லீஸ்வர்ணம் கண்டா24ரணபூ4ஷிதம் |

நாநாரத்நமணிமயம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 38 ||

 

திவ்யமான ரத்னத்தாலான மோதிரத்தையணிந்தவனை, கழுத்தணிக ளணிந்தவனை, பலவிதமான ரத்னங்களையணிந்தவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

रत्नाङगुलीयविलसत्करशाखानखप्रभम् |

भक्तमानसगेहं एकबिल्वं शिवार्पणम् || ३९ ||

 

ரத்நாங்கு3லீயவிலஸத்கரசாகா2நக2ப்ரப4ம் |

4க்தமாநஸகே3ஹம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 39 ||

 

ஒளிபொருந்திய ரத்னத்தாலான மோதிரங்களையணிந்தவனை, பக்தர்களின் மனமென்னும் வீட்டிலுள்ளவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

 

 

वामाङगभागविलसदम्बिकावीक्षणप्रियम् |

पुण्डरीकनिभाक्षं एकबिल्वं शिवार्पणम् || ४॰ ||

 

வாமாங்க3பா43விலஸத3ம்பி3காவீக்ஷணப்ரியம் |

புண்ட3ரீகநிபாக்ஷம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 40 ||

 

இடப்பாகத்தில் எப்போதும் நீங்காது, ஒளிபொருந்திய அம்பிகைக்கு ப்ரியமானவனை, தாமரைக்கு ஒப்பான விழிகளையுடையவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सम्पूर्णकामदं सौरव्यं भक्तेष्टफलकारणम् |

सौभाग्यदं हितकरं एकबिल्वं शिवार्पणम् || ४१ ||

 

ஸம்பூர்ணகாமத3ம் ஸௌரவ்யம் ப4க்தேஷ்டஃபலகாரணம் |

ஸௌபாக்யத3ம் ஹிதகரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 41 ||

 

(பக்தர்கள்) விரும்புமனைத்தையும் முழுமையாகத் தருபவனை, ஆனந்த மயமானவனை, பக்தர்கள் விரும்பும் பலனையளிப்பவனை, நன்மை யளிப்பவனை, உதவிகரமானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

नानाशास्त्रगुणोपेतं स्फुरन्मङगल विग्रहम् |

विद्याविभेदरहितं एकबिल्वं शिवार्पणम् || ४२ ||

 

நாநாசாஸ்த்ரகு3ணோபேதம் ஸ்ஃபுரந்மங்க3ல விக்3ரஹம் |

வித்3யாவிபே43ரஹிதம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 42 ||

 

பல்வேறு ஸாஸ்த்ர வடிவானவனை, மின்னும் மங்களகரமான வடிவானவனை, பற்பல தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

 

 

 

अप्रमेयगुणाधारं वेदकृद्रूपविग्रहम् |

धर्माधर्मप्रवृत्तं एकबिल्वं शिवार्पणम् || ४३ ||

 

அப்ரமேயகு3ணாதா4ரம் வேத3க்ருத்3ரூபவிக்3ரஹம் |

4ர்மாத4ர்மப்ரவ்ருத்தம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 43 ||

 

அளவற்ற நற்குணங்களின் இருப்பிடமானவனை, வேதங்களின் உறைவிடமாக விளங்குபவனை, தர்ம அதர்மங்களை கவனிப்பதில் முனைப்பாக உள்ளவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

गौरीविलाससदनं जीवजीवपितामहम् |

कल्पान्तभैरवं शुभ्रम् एकबिल्वं शिवार्पणम् || ४४ ||

 

கௌ3ரீவிலாஸஸத3நம் ஜீவஜீவபிதாமஹம் |

கல்பாந்தபை4ரவம் சுப்4ரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 44 ||

 

கௌரி என்னும் நாமத்தையுடைய அம்பாளுடன் எப்போதும் மகிழ்வோடு இருப்பவனை, உலகின் அனைத்துயிர்களின் எந்தையை, ஊழிக்காலத்தே அச்சமூட்டும் வடிவானவனை, ப்ரகாசமானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सुखदं सुखनाशं दुःखदं दुःखनाशनम् |

दुःखावतारं भद्रं एकबिल्वं शिवार्पणम् || ४५ ||

 

ஸுக23ம் ஸுக2நாசம் ச து3:23ம் து3:2நாசநம் |

து3:கா2வதாரம் ப4த்3ரம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 45 ||

 

பேரின்பத்தை அளிப்பவனை, காமத்தையும் துன்பத்தையும் அழிப்பவனை, பேரிடர்களை அழிப்பனை, துக்கங்களைப் போக்குபவனை, புனிதமானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

सुखरूपं रूपनाशं सर्वधर्मफलप्रदम् |

अतीन्द्रियं महामायं एकबिल्वं शिवार्पणम् || ४६ ||

 

ஸுக2ரூபம் ரூபநாசம் ஸர்வத4ர்மப2லப்ரத3ம்

அதீந்த்3ரியம் மஹாமாயம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 46 ||

 

மனதிற்கினிய வடிவானவனை, வடிவமற்றவனை, ஸர்வதர்மப் பலன்களை அளிப்பவனை, உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவனை, பெரும் மாயனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सर्वपक्षिमृगाकारं सर्वपक्षिमृगाधिपम् |

सर्वपक्षिमृगाधारम् एकबिल्वं शिवार्पणम् || ४७ ||

 

ஸர்வபக்ஷிம்ருகா3காரம் ஸர்வபக்ஷிம்ருகா3தி4பம் |

ஸர்வபக்ஷிம்ருகா3தா4ரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 47 ||

 

அனைத்து பறவை மற்றும் விலங்குகளின் வடிவானவனை, அனைத்து பறவை மற்றும் விலங்குகளின் தலைவனை, அனைத்து பறவை மற்றும் விலங்குகளின் ஆதாரமானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

जीवाध्यक्षं जीववन्द्यं जीवजीवनरक्षकम् |

जीवकृज्जीवहरणं एकबिल्वं शिवार्पणम् || ४८ ||

 

ஜீவாத்4யக்ஷம் ஜீவவந்த்3யம் ஜீவஜீவநரக்ஷகம் |

ஜீவக்ருஜ்ஜீவஹரணம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 48 ||

 

உயிர்களின் தலைவனை, உயிர்களால் வணங்கப்படுபவனை, உயிர்களை காப்பவனை, உயிர்களை உண்டாக்கி அழிப்பவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

विश्वात्मानं विश्ववन्द्यं वज्रात्मावज्रहस्तकम् |

वज्रेशं वज्रभूषं एकबिल्वं शिवार्पणम् || ४९ ||

 

விச்வாத்மாநம் விச்வவந்த்3யம் வஜ்ராத்மாவஜ்ரஹஸ்தகம் |

வஜ்ரேசம் வஜ்ரபூ4ஷம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 49 ||

 

உலகின் ஆன்மாவை, உலகத்தால் வணங்கப்படுகிறவனை, தன்னைப் பற்றி உறுதியாக அறிந்தவனை, உறுதியான கையையுடையவனை, உறுதிக்கு அதிபதியை, உறுதிக்கு ஓர் அணிகலனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

गणाधिपं गणाध्यक्षं प्रलयानलनाशकम् |

जितेन्द्रियं वीरभद्रम् एकबिल्वम् शिवार्पणम् || ५० ||

 

3ணாதி4பம் க3ணாத்4யக்ஷம் ப்ரலயாநலநாசகம் |

ஜிதேந்த்3ரியம் வீரப4த்3ரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 50 ||

 

குழுக்களுக்கு அதிபதியை, குழுக்களின் கண் போன்றவனை, ஊழிக் காலத்தில் பெருந்தீயைப் போன்று அழிப்பவனை, உணர்வுகளை வென்றவனை, வீரபத்ரனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

त्र्यम्बकं मृडं शूरं अरिषड्वर्गनाशनम् |

दिगम्बरं क्षोभनाशम् एकबिल्वं शिवार्पणम् || ५१ ||

 

த்ர்யம்ப3கம் ம்ருட3ம் சூரம் அரிஷட்3வர்க3நாசநம் |

தி33ம்ப3ரம் க்ஷோப4நாசம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 51 ||

 

மூவுலகங்களிலும் வ்யாபித்திருப்பவனை, பேரின்ப வடிவானவனை, மிகுந்த துணிச்சலானவனை, தளைகளிலிருந்து விடுவிப்பவனை, அறியாமையாகிய காரிருளின் தொல்லையை அழிப்பவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

कुन्देन्दुशङखध्वलं भगनेत्रभिदुज्ज्वलम् |

कालाग्निरुद्रं सर्वझम् एकबिल्वं शिवार्पणम् || ५२ ||

 

குந்தே3ந்து3சங்க2த்4வலம் ப43நேத்ரபி4து3ஜ்ஜ்வலம் |

காலாக்3நிருத்3ரம் ஸர்வக்ஞம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 52 ||

 

அழகிய சங்கினைக் காதணியாகக் கொண்டவனை, கண் த்ருஷ்டிகளின் தீமையை அணுகாது அரணாக இருப்பவனை, ஊழித்தீயின் ருத்ரனை, அனைத்தையுமறிந்தவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

कम्बुग्रीवं कम्बुकण्ठं धैर्यदं धैर्यवर्धकम् |

शार्दूलचर्मवसनम् एकबिल्वं शिवार्पणम् || ५३ ||

 

கம்பு3க்3ரீவம் கம்பு3கண்ட2ம் தை4ர்யத3ம் தை4ர்யவர்த4கம் |

சார்தூ3லசர்மவஸநம் ஏகபி3ல்வம் சிவர்பணம் || 53 ||

 

சங்கை நிகர்த்த கழுத்தையுடையவனை, வரிகளுடைய சங்கு போன்ற கழுத்தையுடையவனை, மிகுந்த உறுதி படைத்தவனை, பொறுமை/மதி நுட்பம் நிரம்பியவனை, இடையில் புலித்தோலினை உடுத்தியவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

जगदुत्पत्तिहेतुं जगत्प्रलयकारणम् |

पूर्णानन्दस्वरूपं एकबिल्वं शिवार्पणम् || ५४ ||

 

ஜக3து3த்பத்திஹேதும் ச ஜக3த்ப்ரலயகாரணம் |

பூர்ணாநந்த3ஸ்வரூபம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 54 ||

 

உலகங்கள் உருவாவதில் மூலகாரணனை மற்றும் அவற்றின் ப்ரளயத்திற்கும் காரணமானவனை, மற்றும் முழுமையான ஆனந்தத்தின் வடிவானவனையும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सर्गकेशं मात्तेजं पुण्यश्रवणकीर्तनम् |

ब्रह्माण्डनायकं तारम् एकबिल्वं शिवार्पणम् || ५५ ||

 

ஸர்க3கேசம் மாத்தேஜம் புண்யச்ரவணகீர்தநம் |

ப்3ரஹ்மாண்ட3நாயகம் தாரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 55 ||

 

உற்பத்தி/விளைவுகளுக்குத் தலைவனை, பெரும் ஒளியானவனை, புண்யம் நிரம்பிய வேதம் என்னும் கீர்த்தனை வடிவானவனை, பேரண்டமாகிய விரிந்த ப்ரபஞ்சத்தின் நாயகனை, பேரொலி வடிவானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

मन्दारमूलनिलयं मन्दारकुसुमप्रियम् |

बृन्दारकप्रियतरम् एकबिल्वं शिवार्पणम् || ५६ ||

 

மந்தா3ரமூலநிலயம் மந்தா3ரகுஸுமப்ரியம் |

ப்3ருந்தா3ரகப்ரியதரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 56 ||

 

ஸ்வர்கத்தின் உண்மையான இருப்பிடமானவனை, மலர்ந்த பவளமல்லிக்குப் ப்ரியமானவனை, பில்வத்தை மிகவும் விரும்பி அணிகின்றவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

महेन्द्रियं महाबाहुं विश्वासपरिपूरकम् |

सुलभासुलभं लभ्यम् एकबिल्वं शिवार्पणम् || ५७ ||

 

மஹேந்த்3ரியம் மஹாபா3ஹும் விச்வாஸபரிபூரகம் |

ஸுலபா4ஸுலப4ம் லப்4யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 57 ||

 

வீர்யமான இந்த்ரியங்களை உடையவனை, நீண்ட கைகளை உடையவனை, எல்லா உலகங்களிலும் பரிபூர்ணமாக உள்ளவனை, செல்வத்தினை எளிதில் வழங்குபவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

बीजाधारं बीजरूपं निर्बीजं बीजवृद्धिदम् |

परेशं बीजनाशं एकबिल्वं शिवार्पणम् || ५८ ||

 

பீ3ஜாதா4ரம் பீ3ஜரூபம் நிர்பீ3ஜம் பீ3ஜவ்ருத்3தி43ம் |

பரேசம் பீ3ஜநாசம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 58 ||

 

ஆதார வித்தாக உள்ளவனை, வித்தின் வடிவானவனை, வித்து வடிவமற்றவனை, வித்தின் வ்ருத்திக்குக் காரணமானவனை, இறைவனுக்கு இறைவனை, வித்திற்குள் மறைந்திருப்பவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

युगाकारं युगाधीशं युगकृद्युगनाशनम् |

परेशं बीजनाशं एकबिल्वं शिवार्पणम् || ५९ ||

 

யுகா3காரம் யுகா3தீ4சம் யுக3க்ருத்3யுக3நாசநம் |

பரேசம் பீ3ஜநாசம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 59 ||

 

யுகங்களை உருவாக்குபவனை, யுகத் தலைவனை, யுகப்பிறப்பு மற்றும் முடிவுக்குக் காரணமானவனை, இறைவனுக்கு இறைவனை, வித்திற்குள் மறைந்திருப்பவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

धूर्जटिं पिङगलजटं जटामण्डलमण्डितम् |

कर्पूरगौरं गौरीशम् एकबिल्वं शिवार्पणम् || ६० ||

 

தூ4ர்ஜடிம் பிங்க3லஜடம் ஜடாமண்ட3லமண்டி3தம் |

கர்பூரகௌ3ரம் கௌ3ரீசம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 60 ||

 

கடினமான ஜடாமுடியை உடையவனை, பொன்னிறமான ஜடாமுடியை உடையவனை, வட்டவடிவமாக அலங்கரிக்கப்பட்ட ஜடாமுடியை உடையவனை, பொன்னிற மேனியனை, கௌரியாகிய சக்தியின் நாயகனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सुरावासं जनावासं योगीशं योगिपुङगवम् |

योगदं योगिनां सिंहम् एकबिल्वं शिवार्पणम् || ६१ ||

 

ஸுராவாஸம் ஜநாவாஸம் யோகீ3சம் யோகி3புங்க3வம் |

யோக33ம் யோகி3நாம் ஸிம்ஹம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 61 ||

 

தேவர்களுக்குள் உறைந்திருப்பவனை, மனிதர்களுக்குள் உறைந்திருப்பவனை, யோகிகளின் தலைவனை, யோகிகளில் மிகவும் சிறந்தவனை, யோகத்தின் வடிவானவனை, ஆராதனைக்குரியவனை, ஸிம்ஹம் போன்றவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

उत्तमानुत्तमं तत्त्वं अन्धकासुरसूदनम् |

भक्तकल्पद्रुमस्तोमं एकबिल्वं शिवार्पणम् || ६२ ||

 

உத்தமாநுத்தமம் தத்த்வம் அந்த4காஸுரஸூத3நம் |

4க்தகல்பத்3ருமஸ்தோமம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 62 ||

 

சீலர்களில் சிறந்தவனை, தத்துவ வடிவானவனை, அறியாமை என்னும் அசுரனை அழிப்பவனை, பக்தர்கள் விரும்புபவற்றை அளிப்பதில் தலையாயவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

विचित्रमाल्यवसनं दिव्यचन्दनचर्चितम् |

विष्णुब्रह्मादि वन्द्यं एकबिल्वम् शिवार्पणम् || ६३ ||

 

விசித்ரமால்யவஸநம் தி3வ்யசந்த3நசர்சிதம் |

விஷ்ணுப்ரஹ்மாதி3 வந்த்3யம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 63 ||

 

பல வண்ண மாலைகளை இடுப்பில் அணிந்தவனை, இனிய சந்தங்களில் அர்ச்சிக்கப் படுபவனை, விஷ்ணு மற்றும் ப்ரஹ்மாவால் வணங்கப் படுபவனை, ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

कुमारं पितरं देवं श्रितचन्द्रकलानिधिम् |

ब्रह्मशत्रुं जगन्मित्रम् एकबिल्वम् शिवार्पणम् || ६४ ||

 

குமாரம் பிதரம் தேவம் ச்ரிதசந்த்3ரகலாநிதி4ம் |

ப்3ரஹ்மசத்ரும் ஜக3ந்மித்ரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 64 ||

 

நமையாளும் தலைவனை, நமது தந்தையை, இறைவனை, ஸிரஸில் சந்த்ர கலையோடு விளங்குபவனை, வேத வடிவானவனை, உலகத்திற்கு ஒளியானவனை ஒற்றை பில்வத்தை சமர்ப்பித்துசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

लावण्यमधुराकारं करुणारसवारधिम् |

भृवोर्मध्ये सहस्रार्चिं एकबिल्वं शिवार्पणम् || ६५ ||

 

லாவண்யமது4ராகாரம் கருணாரஸவாரதி4ம் |

ப்4ருவோர்மத்4யே ஸஹஸ்ரார்சிம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 65 ||

 

அழகிய மற்றும் இனிமையானவனை, கருணை என்ற உணர்வின் கடல் போன்றவனை, புருவங்களுக்கு மத்தியில் ஆயிரம் கதிர்களுக்கு இணையான நெற்றிக்கண்ணை உடையவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

जटाधरं पावकाक्षं वृक्षेशं भूमिनायकम् |

कामदं सर्वदागम्यम् एकबिल्वं शिवार्पणम् || ६६ ||

 

ஜடாத4ரம் பாவகாக்ஷம் வ்ருக்ஷேசம் பூ4மிநாயகம் |

காமத3ம் ஸர்வதா3கம்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 66 ||

 

ஸந்யாசியாக உள்ளவனை (அல்லது) ஜடாமுடியை தரித்தவனை, அக்நி போன்ற விழியுடையவனை, வ்ருக்ஷங்களின் தலைவனை, பூமியின் நாயகனை, விரும்பும் வரங்களை அளிப்பவனை, (அழைத்தால்) எப்போதும் வருகின்றவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

शिवं शान्तं उमानाथं महाध्यानपरायणम् |

झानप्रदं कृत्तिवासम् एकबिल्वं शिवार्पणम् || ६७ ||

 

சிவம் சாந்தம் உமாநாத2ம் மஹாத்4யாநபராயணம் |

ஞாநப்ரத3ம் க்ருத்திவாஸம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 67 ||

 

அனைத்துமறிந்தவனை, அமைதியானவனை, உமையின் நாயகனை, பெரும் த்யானத்தின் வடிவானவனை, ஞானத்தை வழங்குபவனை, செயல் என்னும் இயக்கத்திலுறைபவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

वासुक्युरगहारं लोकानुग्रहकारणम् |

झानप्रदं कृत्तिवासम् एकबिल्वं शिवार्पणम् || ६७ ||

 

வாஸுக்யுரக3ஹாரம் ச லோகாநுக்3ரஹகாரணம் |

ஞாநப்ரத3ம் க்ருத்திவாஸம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 68 ||

 

வாசுகி என்னும் பாம்பை ஆபரணமாகக் கொண்டவனை, உலகங்களைக் காப்பதில் உறுதுணையானவனை, ஞானத்தை வழங்குபவனை, செயல் என்னும் இயக்கத்திலுறைபவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

शशाङकधारिणं भर्गं सर्वलोकैकशङकरम् |

शुद्धं शाश्वतं नित्यम् एकबिल्वं शिवार्पणम् || ६९ ||

 

சசாங்கதா4ரிணம் ப4ர்க3ம் ஸர்வலோகைகசங்கரம் |

சுத்34ம் ச சாச்வதம் நித்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 69 ||

 

நிறைமதியை தரித்தவனை, ஒளிமயமானவனை, அனைத்துலகங்களுக்கும் அனுகூலமானவனை, தூய்மையானவனை, என்றும் நிலையானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

शरणागतदीनार्तपरित्राणपरायणम् |

गम्भीरं वषट्कारम् एकबिल्वं शिवार्पणम् || ७० ||

 

சரணாக3ததீ3நார்தபரித்ராணபராயணம் |

3ம்பீ4ரம் ச வஷட்காரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 70 ||

 

தினமும் தன்னைச் சரணடைபவர்களுக்கு அடைக்கலமானவனை, அளவிடற்கரியவனை, ஆதியானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

भोक्तारं भोजनं भोज्यं जेतारं जितमानसम् |

करणं कारणं जिष्णुम् एकबिल्वं शिवार्पणम् || ७१ ||

 

போ4க்தாரம் போ4ஜநம் போ4ஜ்யம் ஜேதாரம் ஜிதமாநஸம் |

கரணம் காரணம் ஜிஷ்ணும் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 71 ||

 

நமையெல்லாம் ஆள்பவனை, அனைவராலும் பெரிதும் விரும்பப் படுகின்றவனை, உயிர்களனைத்திற்கும் உணவு போன்றவனை, வெற்றி வடிவானவனை, மனங்களை வென்றவனை, செயலானவனை, செயல் ஊக்கியானவனை, வெற்றியின் ரூபமாக உள்ளவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

क्षेत्रझं क्षेत्रपालञ्च परार्धैकप्रयोजनम् |

व्योमकेशं भीमवेषम् एकबिल्वं शिवार्पणम् || ७२ ||

 

க்ஷேத்ரஞம் க்ஷேத்ரபாலஞ்ச பரார்தை4கப்ரயோஜநம் |

வ்யோமகேசம் பீ4மவேஷம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 72 ||

 

அனைத்து இடங்களையும் அறிந்தவனை, இகபர இடங்களில் நமது பாதுகாப்பில் உதவிகரமானவனை, வ்யோமகேசனை (சிவனின் பெயர்களுள் ஒன்று), அச்சமூட்டும் தோற்றமுடையவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

भवझं तरुणोपेतं चोरिष्टं यमनाशनम् |

हिरण्यगर्भं हेमाङ्गम् एकबिल्वं शिवार्पणम् || ७३ ||

 

4வக்ஞம் தருணோபேதம் சோரிஷ்டம் யமநாசநம் |

ஹிரண்யக3ர்ப4ம் ஹேமாங்க3ம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 73 ||

 

எல்லோருடைய மனங்களையும் அறிந்தவனை, பிறைச்சந்திரனை அணிந்தவனை, மனங்கவர்ந்தவனை, எமனை அழித்தவனை, ப்ரஹ்ம வடிவானவனை, தங்கமயமாக உள்ளவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

दक्षं चामुण्डजनकं मोक्षदं मोक्षनायकम् |

हिरण्यदं हेमरूपम् एकबिल्वं शिवार्पणम् || ७४ ||

 

3க்ஷம் சாமுண்ட3ஜநகம் மோக்ஷத3ம் மோக்ஷநாயகம் |

ஹிரண்யத3ம் ஹேமரூபம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 74 ||

 

ஞான வடிவானவனை, துர்க்கையென்னும் சக்தியைப் பெற்றவனை, முக்தியை அளிப்பவனை, முக்திக்குத் தலைவனை, தங்கமயமானவனை, குளிர்ச்சியின் வடிவானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

महाश्मशाननिलयं प्रच्छन्नस्फटिकप्रभम् |

वेदास्यं वेदरूपं एकबिल्वं शिवार्पणम् || ७५ ||

 

மஹாச்மசாநநிலயம் ப்ரச்ச2ந்நஸ்ப2டிகப்ரப4ம் |

வேதா3ஸ்யம் வேத3ரூபம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 75 ||

 

கொடுஞ்சுடுகாட்டில் வசிப்பவனை, தூய ஒளி வடிவானவனை, பூஜிக்கப் படுகின்றவனை, வேத வடிவானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

स्थिरं धर्मं उमानाथं ब्रह्मण्यं चाश्रयं विभुम् |

जगन्निवासं प्रथममेकबिल्वं शिवार्पणम् || ७६ ||

 

ஸ்தி2ரம் த4ர்மம் உமாநாத2ம் ப்ரஹ்மண்யம் சாச்ரயம் விபு4ம் |

ஜக3ந்நிவாஸம் ப்ரத2மமேகபி3ல்வம் சிவார்பணம் || 76 ||

 

தர்மத்தை நிலையாக வைத்திருப்பவனை, உமாதேவியின் நாதனை, ப்ரஹ்ம வடிவானவனை, உலகெங்கும் வஸிப்பவனை, எல்லோருக்கும் முதல்வனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

रुद्राक्षमालाभरणं रुद्राक्षप्रियवत्सलम् |

रुद्राक्षभक्तसंस्तोममेकबिल्वं शिवार्पणम् || ७७ ||

 

ருத்3ராக்ஷமாலாப4ரணம் ருத்3ராக்ஷப்ரியவத்ஸலம் |

ருத்3ராக்ஷப4க்தஸம்ஸ்தோமமேகபி3வம் சிவார்பணம் || 77 ||

 

ருத்ராக்ஷ மாலையை ஆபரணமாக அணிந்தவனை, ருத்ராக்ஷத்திற்கு மிகவும் ப்ரியமானவனை, ருத்ராக்ஷமணிந்த பக்தர்களால் கொண்டாடப் படுகின்றவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

फणीन्द्रविलसत्कण्ठं भुजङ्गाभरणप्रियम् |

दक्षाध्वरविनाशं एकबिल्वं शिवार्पणम् || ७८ ||

 

2ணீந்த்3ரவிலஸத்கண்ட2ம் பு4ஜங்கா34ரணப்ரியம் |

3க்ஷாத்4வரவிநாசம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 78 ||

 

கழுத்தில் பாம்பையணிந்தவனை, பாம்பை ஆபரணமாகத் தரிப்பதில் பெருவிருப்புடையவனை, தக்ஷனை அழித்தவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

नागेन्द्रविलसत्कर्णं महीन्द्रवलयावृतम् |

मुनिवन्द्यं मुनिश्रेष्टमेकबिल्वं शिवार्पणम् || ७९ ||

 

நாகே3ந்த்3ரவிலஸத்கர்ணம் மஹீந்த்3ரவலயாவ்ருதம் |

முநிவந்த்3யம் முநிச்ரேஷ்டமேகபி3ல்வம் சிவார்பணம் || 79 ||

 

ஜொலிக்கின்ற நாகராஜனை காதணியாகக் கொண்டவனை, வானவில்லை கங்கணமாக அணிந்தவனை, முனிவர்களால் வணங்கப் படுகின்றவனை, முனிவர்களில் சிறந்தவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

मृगेन्द्रचर्मवसनं मुनीनामेकजीवनम् |

सर्वदेवादिपूज्यं एकबिल्वं शिवार्पणम् || ८० ||

 

ம்ருகே3ந்த்3ரசர்மவஸநம் முநீநாமேகஜீவநம் |

ஸர்வதே3வாதி3பூஜ்யம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 80 ||

 

மான் தோல் ஆஸனத்தில் அமர்ந்திருப்பவனை, பக்தர்களுக்கு சிவநாமமே ஜீவனென்றிருப்பவனை, அனைத்து தேவர்களாலும் பூஜிக்கப் படுபவனை, ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

जिधनेशं धनाधीशं अपमृत्युविनाशनम् |

लिङ्गमूर्तिमलिङ्गात्मम् एकबिल्वं शिवार्पणम् || ८१ ||

 

ஜித4நேசம் த4நாதீ4சம் அபம்ருத்யுவிநாசநம் |

லிங்கமூர்திமலிங்காத்மம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 81 ||

 

அழித்தலென்னும் செயலுக்கான கடவுளை, செல்வங்களின் தலைவனை, துர்மரணத்தை அழிப்பவனை, லிங்க வடிவானவனை, லிங்க வடிவில் வசிப்பவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

भक्तकल्याणदं व्यस्तं वेदवेदान्तसंस्तुतम् |

कल्पकृत्कल्पनाशं एकबिल्वं शिवार्पणम् || ८२ ||

 

4க்தகல்யாணத3ம் வ்யஸ்தம் வேத3வேதா3ந்தஸம்ஸ்துதம் |

கல்பக்ருத்கல்பநாசம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 82 ||

 

பக்தர்களின் நலனில் ஈடுபாடுள்ளவனை, வேதங்கள் அனைத்தினாலும் புகழப்படுபவனை, பல யுகங்களடங்கிய கல்பத்தை உருவாக்கி, அந்த கல்பங்களை அழிப்பவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

धोरपातकदावाग्निं जन्मकर्मविवर्जितम् |

कपालमालाभरणम् एकबिल्वं शिवार्पणम् || ८३ ||

 

தோ4ரபாதகதா3வாக்3நிம் ஜன்மகர்மவிவர்ஜிதம் |

கபாலமாலாப4ரணம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 83 ||

 

அச்சமூட்டும் அக்நி வடிவானவனை, ஜன்ம வினைகளை நீக்குபவனை, மண்டையோட்டு மாலையை ஆபரணமாகக் கொண்டவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

मातङ्गचर्मवसनं विराड्रूपविदारकम् |

विष्णुक्रान्तमनन्तं एकबिल्वं शिवार्पणम् || ८४ ||

 

மாதங்க3சர்மவஸநம் விராட்3ரூபவிதா3ரகம் |

விஷ்ணுக்ராந்தமநந்தம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 84 ||

 

யானையின் தோலை ஆடையாக அணிந்தவனை, வேதங்களில்த்ருஷ்டுப்என்ற பிரிவாக உள்ளவனை, விஷ்ணுக்ரந்தி என்ற மலரை அணிவதில் ஆனந்தமடைகின்றவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

 

यझकर्मफलाध्यक्षं यझविघ्नविनाशकम् |

यझेशं यझभोक्तारम् एकबिल्वं शिवार्पणम् || ८५ ||

 

யக்ஞகர்மப2லாத்4யக்ஷம் யக்ஞவிக்4நவிநாசகம் |

யக்ஞேசம் யக்ஞபோ4க்தாரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 85 ||

 

யக்ஞம் செய்வதால் கிட்டும் பலனைப் பெற, யக்ஞத்திற்கு வரக்கூடிய தடையை விலக்க, யக்ஞத்தின் தலைவனாக உள்ள சிவனை, யக்ஞப் பலனை அளிக்க ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

कालाधीशं त्रिकालझं दुष्टनिग्रहकारकम् |

योगिमानसपूज्यं एकबिल्वं शिवार्पणम् || ८६ ||

 

காலாதீ4சம் த்ரிகாலக்ஞம் து3ஷ்டநிக்3ரஹகாரகம் |

யோகி3மாநஸபூஜ்யம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 86 ||

 

காலங்களின் தலைவனை, முக்காலமும் உணர்ந்தவனை, தீயவர்களை அழிப்பவனை, யோகிகளால் அவர்தம் மனதார பூஜிக்கப் படுகின்றவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

महोन्नतमहाकायं महोदरमहाभुजम् |

महावक्त्रं महावृद्धम् एकबिल्वं शिवार्पणम् || ८७ ||

 

மஹோந்நதமஹாகாயம் மஹோத3ரமஹாபு4ஜம் |

மஹாவக்த்ரம் மஹாவ்ருத்34ம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 87 ||

 

மிகவும் உயர்வான, பேருருவம் கொண்டவனை, பெருவயிறு, பெருந்தோள்கள், பெரியமுகம் மற்றும் பெரிய தோற்றம் கொண்டவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सुनेत्रं सुललाटं सर्वभीमपराक्रमम् |

महेश्वरं शिवतरम् एकबिल्वं शिवार्पणम् || ८८ ||

 

ஸுநேத்ரம் ஸுலலாடம் ச ஸர்வபீ4மபராக்ரமம் |

மஹேச்வரம் சிவதரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 88 ||

 

அழகிய விழியை, அழகிய நெற்றியை மற்றும் மிகவும் அச்சமூட்டக் கூடிய பராக்ரமமுள்ள மஹேஸ்வரனை, அமைதியானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

समस्तजगदाधारं समस्तगुणसागरम् |

सत्यं सत्यगुणोपेतम् एकबिल्वं शिवार्पणम् || ८९ ||

 

ஸமஸ்தஜக3தா3தா4ரம் ஸமஸ்தகு3ணஸாக3ரம் |

ஸத்யம் ஸத்யகு3ணோபேதம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 89 ||

 

அனைத்துலகங்களுக்கும் ஆதாரமானவனை, அனைத்து நற்குணங்களின் கடலாக உள்ளவனை, ஸத்ய வடிவானவனை, ஸத்யகுணங்களை உடையவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

माघकृष्णचतुर्दश्यां पूजार्थं जगद्गुरोः |

दुर्लभं सर्वदेवानाम् एकबिल्वं शिवार्पणम् || ९० ||

 

மாக4க்ருஷ்ணசதுர்த3ச்யாம் பூஜார்த2ம் ஜகத்3கு3ரோ: |

து3ர்லப4ம் ஸர்வதே3வாநாம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 90 ||

 

ஸகல தெய்வங்களுக்கும், ஸகல உலகங்களுக்கும் தெய்வமான ஸ்ரீசிவனே! கிடைத்தற்கரிய மகரமாத (தை மாதம்) தேய்பிறை சதுர்த்தி திதியன்று உன்னை பூஜை செய்வதற்காக ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

 

तत्रापि दुर्लभं मन्येत् नभोमासेन्दुवासरे |

प्रदोषकाले पूजायाम् एकबिल्वं शिवार्पणम् || ९१ ||

 

தத்ராபி து3ர்லப4ம் மந்யேத் நபோ4மாஸேந்து3வாஸரே |

ப்ரதோ3ஷகாலே பூஜாயாம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 91 ||

 

கிடைத்தற்கரிய ச்ராவண மாதத்தின் (ஆவணி) திங்கட்கிழமையன்று ப்ரதோஷ காலத்தில் எந்த இடத்திலிருந்தாலும் மானசீகமாக ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

तटाकं धननिक्षेपं ब्रह्मस्थाप्यं शिवालयम् |

कोटिकन्यामहादानम् एकबिल्वं शिवार्पणम् || ९२ ||

 

தடாகம் த4நநிக்ஷேபம் ப்3ரஹ்மஸ்தா2ப்யம் சிவாலயம் |

கோடிகன்யாமஹாதா3நம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 92 ||

 

தடாகத்தை (குளத்தை) நிர்மாணித்தல், பிறருக்காக செல்வம் சேர்த்தல், வேதசாலைகள் அமைத்தல், சிவாலயம் கட்டுதல் மற்றும் ஒரு கோடி கன்யாதானம் செய்தல் இவற்றால் கிட்டும் புண்யம், ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

दर्शनं बिल्ववृक्षस्य स्पर्शनं पापनाशनम् |

अघोरपापसंहारम् एकबिल्वं शिवार्पणम् || ९३ ||

 

3ர்சநம் பி3ல்வவ்ருக்ஷஸ்ய ஸ்பர்சநம் பாபநாசநம் |

அகோ4ரபாபஸம்ஹாரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 93 ||

 

பில்வமரத்தை தரிசிப்பதால் கிட்டும் பலன், பில்வத்தை ஸ்பர்சிப்பதால் அழிக்கப்படும் பாபம் மற்றும் மிகப்பெரும் பாபங்களை அழித்தல் இவையாவும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

 

 

तुलसीबिल्वनिर्गुण्डी जम्बीरामलकं तथा |

पञ्चबिल्वमिति रव्यातम् एकबिल्वं शिवार्पणम् || ९४ ||

 

துலஸீபி3ல்வநிர்கு3ண்டீ3 ஜம்பீ3ராமலகம் ததா2 |

பஞ்சபி3ல்வமிதி ரவ்யாதம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 94 ||

 

துளசி, பில்வம், தாமரை, எலுமிச்சை மற்றும் நெல்லி ஆகிய இந்த ஐந்துவித இலைகளால் பூஜிப்பதன் பலன், ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

अखण्डबिल्वपत्रैश्च पूजयेन्नन्दिकेश्वरम् |

मुच्यते सर्वपापेभ्यः एकबिल्वं शिवार्पणम् || ९५ ||

 

அக2ண்ட3பி3ல்வபத்ரைஸ்ச பூஜயேந்நந்தி3கேச்வரம் |

முச்யதே ஸர்வபாபேப்4: ஏகபி3ல்வம் சிவார்பணம் || 95 ||

 

அடியேன் அகண்ட பில்வபத்ரத்தால் நந்திகேஸ்வரனை பூஜிப்பதன் பலன், ஸகல பாபங்களிலிருந்து அடியேனை விடுவித்தல் இவையிரண்டும் ஒற்றை பில்வத்தைசிவார்ப்பணம்என்று சொல்லி சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

सालङ्कृता शतावृत्ता कन्याकोटिसहस्रकम् |

साम्राज्यपृथ्वीदानं एकबिल्वं शिवार्पणम् || ९६ ||

 

ஸாலங்க்ருதா சதாவ்ருத்தா கன்யாகோடிஸஹஸ்ரகம் |

ஸாம்ராஜ்யப்ருத்2வீதா3நம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 96 ||

 

நன்றாக அலங்கரிக்கப் பட்டவனை நூறு பாடல்களால் துதிப்பதன் பலன், ஆயிரம் கோடி கன்யாதானப் பலன் மற்றும் பூதானப் பலன் இவையனைத்தும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

 

 

दन्त्यश्वकोटिदानानि अश्वमेधसहस्रकम् |

सवत्सधेनुदानानि एकबिल्वं शिवार्पणम् || ९७ ||

 

3ந்த்யச்வகோடிதா3நாநி அச்வமேத4ஸஹஸ்ரகம் |

ஸவத்ஸதே4நுதா3நாநி ஏகபி3ல்வம் சிவார்பணம் || 97 ||

 

சிறந்த பற்களையுடைய கோடி அஸ்வங்களை தானம் செய்வதன் பலன், ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதன் பலன் மற்றும் கன்றுடன் கூடிய கோதானம் செய்வதன் பலன் இவையாவும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

चतुर्वेदसहस्राणि भारतादिपुराणकम् |

साम्राज्यपृथ्वीदानं एकबिल्वं शिवार्पणम् || ९८ ||

 

சதுர்வேத3ஸஹஸ்ராணி பா4ரதாதி3புராணகம் |

ஸாம்ராஜ்யப்ருத்2வீதாநம் ச ஏகபி3ல்வம் சிவார்பணம் || 98 ||

 

ஆயிரம் பேருக்கு சதுர்வேத மற்றும் பாரத ஆதி புராணங்கள் பற்றிய வித்யாதானம், பூதானம் ஆகியவற்றை செய்வதால் கிட்டும் பலன், ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

सर्वरत्नमयं मेरुं काञ्चनं दिव्यवस्त्रकम् |

तुलाभागं शतावर्तम् एकबिल्वं शिवार्पणम् || ९९ ||

 

ஸர்வரத்நமயம் மேரும் காஞ்சநம் தி3வ்யவஸ்த்ரகம் |

துலாபா43ம் சதாவர்தம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 99 ||

 

மேனி முழுவதும் ரத்னமயமானவனை, மேருவைப் போன்று உயர்ந்தவனை, தங்கமயமானவனை, தூய ஆடைகளணிந்தவனை, அர்த்தநாரீஸ்வரனை நூறு பாடல்களால் துதிக்கும் பலன், ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

अष्टोत्तरश्शतं बिल्वं योऽर्चयेल्लिङ्गमस्तके |

अधर्वोक्तम् अधेभ्यस्तु एकबिल्वं शिवार्पणम् || १०० ||

 

அஷ்டோத்தரச்சதம் பி3ல்வம் யோர்சயேல்லிங்க3மஸ்தகே |

அத4ர்வோக்தம் அதே4ப்4யஸ்து ஏகபி3ல்வம் சிவார்பணம் || 100 ||

 

நூற்றியெட்டு பில்வத்தால் லிங்கார்ச்சனை செய்து, அதர்வண வேதத்தை உரைத்து, அதை இன்று பயிற்சி செய்வதால் கிட்டும் பலன், ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

काशीक्षेत्रनिवासं कालभैरवदर्शनम् |

अघोरपापसंहारम् एकबिल्वं शिवार्पणम् || १०१ ||

 

காசீக்ஷேத்ரநிவாஸம் ச காலபை4ரவத3ர்சநம் |

அகோ4ரபாபஸம்ஹாரம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 101 ||

 

காசியென்னும் புண்யக்ஷேத்ரத்தில் வசிப்பதால் கிட்டும் புண்யம், காலபைரவரை தரிசிப்பதால் கிட்டும் புண்யம் மற்றும் மிகப்பெரும் பாவங்களை அழிக்கும் திறன் இவையாவும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

अष्टोत्तरशतश्लोकै: स्तोत्राद्यै: पूजयेद्यथा |

त्रिसन्ध्यं मोक्षमाप्नोति एकबिल्वं शिवार्पणम् || १०२ ||

 

அஷ்டோத்தரசதச்லோகை: ஸ்தோத்ராத்3யை: பூஜயேத்3யதா2 |

த்ரிஸந்த்4யம் மோக்ஷமாப்நோதி ஏகபி3ல்வம் சிவார்பணம் || 102 ||

 

நூற்றியெட்டு ஸ்லோகங்களால் துதிப்பதன் பலன் மற்றும் மூன்று வேளையும் பூஜிப்பதால் கிட்டும் மோக்ஷம் இவையிரண்டும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சிவனுக்கு சமர்ப்பித்தலால் கிட்டும்.

 

 

दन्तिकोटिसहस्राणां भूः हिरण्यसहस्रकम् |

सर्वक्रतुमयं पुण्यम् एकबिल्वं शिवार्पणम् || १०३ ||

 

3ந்திகோடிஸஹஸ்ராணாம் பூ4: ஹிரண்யஸஹஸ்ரகம் |

ஸர்வக்ரதுமயம் புண்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 103 ||

 

ஆயிரம் யானைகளுக்கு இணையானவனை, ஆயிரம் ப்ரபஞ்சங்களுக்குப் பொருளாக உள்ளவனை, அனைத்திலும் சூக்ஷ்ம சக்தியாக உள்ளவனை, தூய்மையானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

पुत्रपौत्रादिकं भोगं भुक्त्वा चात्र यथोप्सितम् |

अन्ते शिवसायुज्यम् एकबिल्वं शिवार्पणम् || १०४ ||

 

புத்ரபௌத்ராதி3கம் போ43ம் பு4க்த்வா சாத்ர யதோ2ப்ஸிதம் |

அந்தே ச சிவஸாயுஜ்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 104 ||

 

சிறுவயதுக் கல்வி முதல் புத்ரபௌத்ரர்களோடு சகல செல்வங்களையும் அனுபவித்து, பின்னர் இறுதியில் சிவபதம் அடைவதற்காக ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

विप्रकोटिसहस्राणां वित्तदानाच्च यत्फलम् |

तत्फलं प्राप्नुयात्सत्यम् एकबिल्वं शिवार्पणम् || १०५ ||

 

விப்ரகோடிஸஹஸ்ராணாம் வித்ததா3நாச்ச யத்ப2லம் |

தத்ப2லம் ப்ராப்நுயாத்ஸத்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 105 ||

 

ஆயிரம் பௌர்ணமிகளுக்கு இணையான, உயர்ந்த, தூய்மையான வளங்களின் பலனாக எது உள்ளதோ, அந்தப் பலனை உறுதியாக அளிக்கும் அந்த சிவனை, ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

 

त्वन्नामकीर्तनं तत्त्वं तवपादाम्बु यः पिबेत् |

जीवन्मुक्तोभवेन्नित्यम् एकबिल्वं शिवार्पणम् || १०६ ||

 

த்வந்நாமகீர்தநம் தத்த்வம் தவபாதாம்பு3 : பிபே3த் |

ஜீவந்முக்தோப4வேந்நித்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 106 ||

 

எவனொருவன் நாமகீர்த்தனை வடிவான உன்னை, ப்ரஹ்ம வடிவான உன்னை, உனது பாதகமலங்களை தினமும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி வணங்குகிறானோ, அவனுடைய ஜீவன் முக்தியடைகிறது.

 

अनेकदानफलदं अनन्तसुकृतादिकम् |

तीर्थयात्राखिलं पुण्यं एकबिल्वं शिवार्पणम् || १०७ ||

 

அநேகதா3நப2லத3ம் அநந்தஸுக்ருதாதி3கம் |

தீர்த2யாத்ராகி2லம் புண்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 107 ||

 

அநேக தானப் பலன், அளவற்ற அறச்செயல்களை செய்வதன் பலன், தீர்த்த யாத்ரைகள் செய்வதால் கிடைக்கும் புண்யம் இவையனைத்தும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சிவனுக்கு சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

त्वं मां पालय सर्वत्र पदध्यानकृतं तव |

भवनं शाङ्करं नित्यम् एकबिल्वं शिवार्पणम् || १०८ ||

 

த்வம் மாம் பாலய ஸர்வத்ர பத3த்4யாநக்ருதம் தவ |

4வநம் சாங்கரம் நித்யம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 108 ||

 

திருவாதிரை வடிவான, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் உனது பதத்தை நினைத்து எப்போதும் நீ என்னைக் காப்பதற்காக, உனக்கு ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

 

 

उमयासहितं देवं सवाहनगणं शिवम् |

भस्मानुलिप्तसर्वाङ्गम् एकबिल्वं शिवार्पणम् || १०९ ||

 

உமயாஸஹிதம் தே3வம் ஸவாஹநக3ணம் சிவம் |

4ஸ்மாநுலிப்தஸர்வாங்க3ம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 109 ||

 

உமையன்னையுடன் கூடியவனை, நந்தி வாஹனத்தின் மீதமர்ந்து, தன்னுடைய கணங்களுடன் கூடிய சிவனை, உடலெங்கும் சாம்பலைப் பூசியவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி, சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

सालग्रामसहस्राणि विप्राणां शतकोटिकम् |

यझकोटिसहस्राणि एकबिल्वं शिवार्पणम् || ११० ||

 

ஸாலக்3ராமஸஹஸ்ராணி விப்ராணாம் சதகோடிகம் |

யக்ஞகோடிஸஹஸ்ராணி ஏகபி3ல்வம் சிவார்பணம் || 110 ||

 

ஆயிரம் சாலக்ராமத்தை பூஜிப்பதன் பலன், ஆயிரம் யக்ஞங்களை செய்வதால் கிட்டும் பலன் இவையிரண்டும் முன்னைப் பழமைக்கும் பழமையானவனை ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குவதால் கிட்டும்.

 

अझानेन कृतं पापं झानेनाभिकृतं च यत् |

तत्सर्वं नाशमायातु एकबिल्वं शिवार्पणम् || १११ ||

 

அஞ்ஞாநேந க்ருதம் பாபம் ஞாநேநாபி4க்ருதம் யத் |

தத்ஸர்வம் நாசமாயாது ஏகபி3ல்வம் சிவார்பணம் || 111 ||

 

அறியாது செய்த பாபம், அறிந்தும் செய்த பாபம் ஏதேனும் இருப்பின், அந்த இருவகையான பாபங்களனைத்தும் ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சிவனுக்கு சமர்ப்பித்து வணங்குவதால் அழிகின்றன.

 

अमृतोद्भववृक्षस्य महादेवप्रियस्य च |

मुच्यन्ते कण्टकाधातात् कण्टकेभ्यो हि मानवा: ||११२ ||

 

அம்ருதோத்34வவ்ருக்ஷஸ்ய மஹாதே3வப்ரியஸ்ய |

முச்யந்தே கண்டகாதா4தாத் கண்டகேப்4யோ ஹி மாநவா: || 112 ||

 

மஹாதேவனுடைய கருணையினால் மனிதர்கள் அனைவரும் அவர்களுடைய தடைகளிலிருந்தும், தடையென்னும் தளையிலிருந்தும் மரத்திலிருந்து நெல்லிக்கனிகள் விடுபட்டு உதிர்வது போல விடுபடுகின்றனர்.

 

एकैकबिल्वपत्रेण कोटियझफलं भवेत् |

महादेवस्य पूजार्थम् एकबिल्वं शिवार्पणम् || ११३ ||

 

ஏகைகபி3ல்வபத்ரேண கோடியக்ஞப2லம் 4வேத் |

மஹாதே3வஸ்ய பூஜார்த2ம் ஏகபி3ல்வம் சிவார்பணம் || 113 ||

 

ஒரே ஒரு பில்வபத்ரம் மூலமாக கோடியக்ஞங்கள் செய்வதன் பலன் கிட்டும். (எனவே) மஹாதேவனின் பூஜைக்காக ஒற்றை பில்வத்தைசிவார்பணம்என்று சொல்லி சமர்ப்பித்து வணங்குகிறேன்.

 

एककाले पठेन्नित्यं सर्वशत्रुनिवारणम् |

द्विकाले पठेन्नित्यं मनोरथफलप्रदम् |

त्रिकाले च पठेन्नित्यं आयुर्वर्ध्यो धनप्रदम् |

अचिरात्कार्यसिद्धिं च लभते नात्र संशयः || ११४ ||

 

ஏககாலே படேந்நித்யம் ஸர்வசத்ருநிவாரணம் |

த்3விகாலே படேந்நித்யம் மநோரத22லப்ரத3ம் |

த்ரிகாலே படேந்நித்யம் ஆயுர்வர்த்4யோ 4நப்ரத3ம் |

அசிராத்கார்யஸித்3தி4ம் லப4தே நாத்ர ஸம்சய: || 114 ||

 

இந்த பில்வார்ச்சனையை தினமும்

-       ஒருவேளை படிப்பதால் அனைத்து எதிரிகளிடமிருந்தும் காக்கப் படுகிறாய்

-       இருவேளை படிப்பதால், நீ மனதிற்குள் எண்ணிய விருப்பம் நிறைவேறும்.

-       மூன்று வேளை படிப்பதால், ஆயுள் வளரும்; செல்வம் சேரும்.

(மேலும்) குறுகிய காலத்திற்குள் கார்யஸித்தியாகும் என்பதில் இங்கே ஐயமில்லை.

 

एककालं द्विकालं वा त्रिकालं यः पठेन्नरः |

लक्ष्मिप्राप्तिशिशवावासः शिवेन सह मोदते || ११५ ||

 

ஏககாலம் த்விகாலம் வா த்ரிகாலம் : படே2ந்நர: |

லக்ஷ்மிப்ராப்திசிசவாவாஸ: சிவேந ஸஹ மோததே || 115 ||

 

ஒருமுறை, இருமுறை அல்லது மூன்று முறை எவர் இந்த பில்வார்ச்சனையைப் படிக்கின்றாரோ, அவருக்கு லக்ஷ்மி கடாக்ஷம், பார்வதியாகிய சிவாம்பிகையின் கடாக்ஷம், கூடவே சிவனுடைய கடாக்ஷமும் கிட்டும்.

 

कोटिजन्मकृतं पापं अर्चनेन विनश्यति |

सप्तजन्मकृतं पापं श्रवणेन विनश्यति |

जन्मान्तरकृतं पापं पठनेन विनश्यति |

दिवारात्रकृतं पापं दर्शनेन विनश्यति |

क्षणेक्षणेकृतं पापं स्मरणेन विनश्यति |

पुस्तकं धारयेद्देही आरोग्यं भयनाशनम् || ११६ ||

 

கோடிஜந்மக்ருதம் பாபம் அர்சநேந விநச்யதி |

ஸப்தஜந்மக்ருதம் பாபம் ச்ரவணேந விநச்யதி |

ஜன்மாந்தரக்ருதம் பாபம் பட2நேந விநச்யதி |

தி3வாராத்ரக்ருதம் பாபம் 3ர்சநேந விநச்யதி |

க்ஷணேக்ஷணேக்ருதம் பாபம் ஸ்மரணேந விநச்யதி |

புஸ்தகம் தா4ரயேத்3தே3ஹி ஆரோக்3யம் 4யநாசநம் || 116 ||

 

கோடி ஜன்மங்களில் செய்த பாபம் ஒற்றை பில்வத்தால் அர்ச்சனை செய்வதால் அழிகிறது.

ஏழு ஜன்மங்களில் செய்த பாபம் பில்வார்ச்சனையை (பிறர்) படிக்கக் கேட்பதால் அழிகிறது.

ஒரு ஜன்மம் முழுவதும் செய்த பாபம், பில்வார்ச்சனையை படிப்பதால் அழிகிறது.

பகலிலும் இரவிலும் செய்த பாபம், பில்வத்தை தரிசிப்பதால் அழிகிறது.

ஒவ்வொரு க்ஷணமும் செய்த பாபம், பில்வத்தை மனதால் நினைப்பதால் அழிகிறது.

பில்வார்ச்சனை புத்தகத்தை வைத்திருப்பதால், ஆரோக்யமாக இருக்க முடியும்; பயநாசம் ஏற்படும்.

 

இத்துடன் பில்வாஷ்டோத்ர சதநாமஸ்தோத்ரம் நிறைவடைகிறது.


 

No comments:

Post a Comment