ஆதித்ய
ஹ்ருதயம் என்னும் பெயர் கொண்ட இந்த ஸ்லோகம் மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கு சக்தி தரும் அபூர்வ ஸ்லோகமாகக் கூறப்பட்டுள்ளது.
இராவணனோடு
யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு ஆக்கமும்
ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம்
இது.
இந்த
ஸ்லோகம் ஸூர்யனை துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்லோகத்தைப் பாராயணம்
செய்ததாலேயே இராமபிரான் இராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. எதிரிகளின் தொல்லையால்
அவதிப்படுபவர்கள்
இத்துதியைப் பாராயாணம் செய்தால் அத்தொல்லைகள் ஸூர்யனைக் கண்ட பனிபோல அகலும். பயம்
விலகும். க்ரஹபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். ஆபத்து காலங்களிலும் எந்த
கஷ்டகாலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம்
பெறும். துன்பங்கள் தூளாகும்.
आदित्यहृदयम्
ஆதி3த்யஹ்ருத3யம்
(வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டத்தின் 107-வது ஸர்கம்)
ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम् ।
रावणं चाग्रतोदृष्टवा युद्धाय समुपस्थितम् ।। १ ।।
दैवतैश्च समागम्य दृष्टुमभ्यागतो रणम् ।
उपागम्याब्रवीद्राममगस्तयो भगवान् ऋषिः ।। २ ।।
ததோ யுத்3த4பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்தி2தம் |
ராவணம்
சாக்3ரதோ
த்3ருஷ்ட்வா
யுத்3தா4ய
ஸமுபஸ்தி2தம்
||
1 ||
தை3வதைஸ்ச
ஸமாக3ம்ய
த்3ருஷ்டுமப்4யாக3தோ
ரணம் |
உபாக3ம்யாப்3ரவீத்3ராமமக3ஸ்த்யோ
ப4க3வாந்
ர்ஷி: ||
2 ||
ராம-ராவண
யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட
இராமபிரானை அணுகி, பின்வருமாறு கூறினார்.
राम राम महाबाहो शृणुगुह्यं सनातनम् ।
येन सर्वानरीन् वत्स समरे विजयिष्यसि ।। ३ ।।
ராம ராம
மஹாபா3ஹோ
ச்ருணுகு3ஹ்யம்
ஸநாதநம் |
யேந
ஸர்வாநரீந் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி || 3 ||
மனிதர்களிலே
சிறந்தவனான ஹே! ராமா,
ராமா! போரில் எந்த மந்திரத்தை பாராயணம் செய்தால் எல்லாப்
பகைவர்களையும் வெல்ல முடியுமோ, அந்த ரஹஸ்ய மந்திரத்தை,
வேதத்தில் கூறப்பட்டுள்ளதை உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்!
आदित्यहृदयं पुण्यं सर्वशत्रुविनाशनम् ।
जयावहं जपेन्नित्यमक्षय्यं परमं शिवम् ।। ४ ।।
ஆதி3த்யஹ்ருத3யம்
புண்யம் ஸர்வசத்ரு விநாசநம் |
ஜயாவஹம்
ஜபேந்நித்யமக்ஷய்யம் பரமம் சிவம் || 4 ||
எல்லாப்
பகைவர்களையும் அழிக்கக் கூடியதும் மிகுந்த புண்ணியத்தை அளிக்கக் கூடியதும்
வெற்றியை தரக்கூடியதும் அளவற்ற உடல் வலிமையை தரக்கூடியதும், உத்தமமான, மங்களகரமான ஆதித்யஹ்ருதயம் என்ற
ஸ்தோத்ரத்தை நீ அனுதினமும் ஜபிக்க வேண்டும். இந்த ஸ்தோத்ரம், ஸூர்யனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரஹத்தை அளிப்பதாகும்.
सर्वमङ्गल माङ्गल्यं सर्वपापप्रणाशनम् ।
चिन्ताशोक प्रशमनमायुर्वर्धनमुत्तमम् ।। ५ ।।
ஸர்வமங்க3ல
மாங்க3ல்யம்
ஸர்வபாபப்ரணாசநம் |
சிந்தாசோக
ப்ரசமநமாயுர்வர்த4நமுத்தமம்
||
5 ||
எல்லா
வகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்த்ரங்களுக்கு மேலான மந்த்ரம் இது. எல்லா
பாவங்களையும் போக்கவல்லது. மனக்கவலை, உடற்பிணிகளைத்
தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா மந்த்ரங்களை விடவும் சிறந்ததான
இந்த ஸ்தோத்ரத்தை நீ ஜபிக்க வேண்டும்.
रश्मिमन्तं समुद्यन्तं देवासुर नमस्कृतम् |
पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् || ६ ||
ரச்மிமந்தம்
ஸமுத்3யந்தம்
தே3வாஸுர
நமஸ்க்ருதம் |
பூஜயஸ்வ
விவஸ்வந்தம் பா4ஸ்கரம்
பு4வநேச்வரம்
||
6 ||
ஒளிமிகுந்த
கிரணங்களை உடையவனும்,
தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும், எல்லா ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும், ஒளிமிகச்
செய்பவனும், ஈஸ்வரனுமாகிய ஸூர்யனை நீ பூஜை செய்ய வேண்டும்.
सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः |
एष देवासुरगणान् लोकान् पाति गभस्तिभिः || ७ ||
ஸர்வதே3வாத்மகோ
ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபா4வந: |
ஏஷ தே3வாஸுரக3ணாந்
லோகாந் பாதி க3ப4ஸ்திபி4: || 7 ||
எல்லா
தேவதைகளும் இந்த ஸூர்யனுக்குள் அடக்கம். ப்ரகாசமான உடற்பொலிவு கொண்டவர். தன்
கிரணங்களாலேயே உலகை இரட்சிப்பவர். தேவர்கள், அசுரர்கள் மற்றும்
இந்த உலகமனைத்தையும் தன் கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்த ஸூர்யனே!
एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः |
महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपांपतिः || ८ ||
ஏஷ ப்3ரஹ்மா
ச விஷ்ணுஸ்ச சிவ: ஸ்கந்த3: ப்ரஜாபதி: |
மஹேந்த்3ரோ
த4நத3: காலோ யம: ஸோமோ ஹ்யாபாம்பதி: || 8 ||
இவரே ப்ரஹ்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும் ப்ரஜாபதியாகவும் மஹேந்த்ரனாகவும் குபேரனாகவும் காலமாகவும் யமனாகவும் சந்த்ரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.
पितरो वसवः साध्या ह्यश्विनौ मरुतो मनुः ।
वायुर्वह्नि प्रजाप्राण ऋतु कर्ता प्रभाकरः ।।
९ ।।
பிதரோ வஸவ:
ஸாத்4யா
ஹ்யச்விநௌ மருதோ மநு: |
வாயுர்வஹ்நி
ப்ரஜாப்ராண ர்து கர்தா ப்ரபா4கர: || 9 ||
இந்த
ஸூர்யனே பித்ருக்களாகவும்,
அஷ்டவஸுக்களாகவும், ஸாத்யர்கள் என்னும்
தேவர்களாகவும், அச்விநி தேவர்களாகவும், ஸப்தமருந்துகளாகவும், மனுவாகவும், வாயுவாகவும், அக்நியாகவும், ப்ரஜைகளாகவும்,
ப்ராணனாகவும், பருவகாலங்களை
உருவாக்குபவராகவும், ஒளிபரப்புபவராகவும் திகழ்கிறார்.
आदित्यः सविता सूर्यः खगः पूषा गभस्तिमान् ।
सुवर्णसदृशो भानुर्हिरण्यरेता दिवाकरः ।। १० ।।
ஆதி3த்ய:
ஸவிதா ஸூர்ய: க2க3: பூஷா க3ப4ஸ்திமாந் |
ஸுவர்ணஸத்3ருசோ
பா4நுர்ஹிரண்யரேதா
தி3வாகர:
||
10 ||
இந்த
ஸூர்யனே அதிதியின் புத்ரன். உலகை உண்டுபண்ணுகிறவர். கர்மாக்களை செய்ய வைப்பவர்.
ஆகாயத்தில் ஸஞ்சரிப்பவர். மழையால் உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக்
கொண்டவர். பொன்னிறமானவர். தங்கமயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர். பகலை
ஸ்ருஷ்டித்தவர்.
हरिदश्वः सहस्रार्चिः सप्तसप्तिमरीचिमान् ।
तिमिरोन्मथनः शम्भुस्त्वष्टा मार्ताण्ड अंशुमान्
।। ११ ।।
ஹரித3ச்வ
ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திமரீசிமாந் |
திமிரோந்மத2ந:
சம்பு4ஸ்த்வஷ்டா
மார்தாண்ட3 அம்சுமாந் || 11 ||
அம்சுமான்
பச்சைக் குதிரையை வாஹநமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான கிரணங்களையுடையவர். தன்னுடைய
தேரில் ஏழு குதிரைகளைக் கொண்டவர். மிகுந்த ப்ரகாசத்துடன் விளங்குபவர். இருளை
அழிப்பவர். துன்பங்களை அழித்து, சுகத்தையும் வளத்தையும்
அளிப்பவர். உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே உருவானவர்.
हिरण्यगर्भः शिशिरस्तपनो भास्करो रविः ।
अग्निगर्भोऽदितेः पुत्रः शंखः शिशिरनाशानः ।। १२ ।।
ஹிரண்யக3ர்ப4: சிசிரஸ்தபநோ பா4ஸ்கரோ ரவி: |
அக்3நிக3ர்போ4ऽதி3தே: புத்ர:
சங்க2: சிசிரநாசாந: || 12 ||
தங்கமயமான
ப்ரஹ்மாண்டத்துக்குரியவர் இந்த ஸூர்யன். காம, க்ரோத, லோப குணங்களை போக்குபவர். ஒளி மிகுந்தவர். அக்நியையும் சங்கினையும்
ஏந்தியவர். அறியாமையை நீக்கி, புகழைத் தருபவர். அதிதியின்
புத்திரர். ஆகாயம் முழுவதிலும் வ்யாபித்தவர்.
व्योमनाथस्तमोभेदी ऋग्यजुस्सामपारगः ।
घनवृष्टिरपां मित्रो विन्ध्यवीथीप्लवङ्गमः ।।
१३ ।।
வ்யோமநாத2ஸ்தமோபே4தீ3 ர்க்யஜுஸ்ஸாமபாரக3: |
க4நவ்ருஷ்டிரபாம்
மித்ரோ விந்த்4யவீதீ2ப்லவங்க3ம:
||
13 ||
இவரே ஆகாயத்தை
உருவாக்கியாள்பவர்,
இருளைப் போக்குகிறவர். ரிக், யஜுர், ஸாம வேதங்களுடைய பொழிவான உபநிஷத்துகளால் கொண்டாடப் படுகிறவர். வருணனுக்கு
நட்பானவர்; அதிகமான மழையை கொடுப்பவர். நல்ல நீர்நிலைகளை
உருவாக்குபவர். தக்ஷிணாயனத்தில் விந்த்யமலை வழியாக ஸஞ்சரிப்பவர்.
आतपि मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः।
कलिर्विश्वो महातेजाः रक्तः सर्वभवोद्भवः ।। १४ ।।
ஆதாபி மண்ட3லீ
ம்ருத்யு: பிங்க3ல:
ஸர்வதாபந: |
கலிர்விச்வோ
மஹாதேஜா: ரக்த: ஸர்வப4வோத்3ப4வ:
||
14 ||
இவர்
வெயிலை கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர். நட்புருவானவர். பொன்னிறமுள்ளவர்.
நடுப்பகலில் அனைவருக்கும் தாகத்தை உண்டுபண்ணுகிறவர். அனைத்து ஸாஸ்த்ரங்களையும்
உபதேசிப்பவர். உலகத்தை நடத்திச் செல்பவர். தேஜஸ் மிகுந்தவர். எல்லோரிடத்திலும்
அன்பு கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும் காரணமானவர்.
नक्षत्रग्रहताराणणा मधिपो विश्वभावनः ।
तेजसामपि तेजस्वी द्वादशात्मन्नमोऽस्तु ते ।।
१५ ।।
நக்ஷத்ரக்3ரஹதாராணா
மதி4போ
விச்வபா4வந:
|
தேஜஸாமபி
தேஜஸ்வீ த்3வாத3சாத்மந்நமோऽஸ்து தே || 15 ||
அஸ்வினி
முதலான நட்சத்திரங்கள்,
நவக்ரஹங்கள், பிற ஒளிகள் எல்லாவற்றுக்கும்
அதிபர் இந்த ஸூர்யன். அக்நி முதலான ஒளிகளுக்கு மேலாக ஒளிர்பவர். பனிரெண்டு
வடிவங்களாக (மாதத்திற்கு ஒன்று வீதம்) இருப்பவர். இத்தகைய மஹிமை பொருந்திய
ஸூர்யபகவானே! உனக்கு நமஸ்காரம்!
नमः पूर्वाय गिरये पश्चिमायाद्रये नमः ।
ज्योतिर्गणानां पतये दिनाधिपतये नमः ।। १६ ।।
நம:
பூர்வாய கி3ரயே
பஸ்சிமாயாத்3ரயே
நம: |
ஜ்யோதிர்க3ணாநாம்
பதயே தி3நாதி4பதயே
நம: ||
16 ||
கிழக்குத்
திசையிலுள்ள மலை மீதிருப்பவரே! நமஸ்காரம்! மேற்கு திசையிலுள்ள மலை மீதிருப்பவரே!
நமஸ்காரம்! நட்சத்திரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் அதிபதியே! பகலுக்குத் தலைவனே!
நமஸ்காரம்!
जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः ।
नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः ।। १७ ।।
ஜயாய ஜயப4த்3ராய
ஹர்யச்வாய நமோ நம: |
நமோ நம:
ஸஹஸ்ராம்சோ ஆதி3த்யாய
நமோ நம: ||
17 ||
என்றும்
ஜெயிப்பவரே! வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே! பச்சைக் குதிரை வாஹனரே! உமக்கு
நமஸ்காரம். ஆயிரக்கணக்கான கிரணங்களைக் கொண்டவரே! ஸூர்யபகவானே! உமக்கு நமஸ்காரம்!
नम उग्राय वीराय सारङ्गाय नमो नमः ।
नमः पद्मप्रबोधाय मार्तण्डाय नमो नमः ।। १८ ||
நம உக்3ராய
வீராய ஸாரங்கா3ய
நமோ நம: |
நம: பத்3மப்ரபோ3தா4ய
மார்தண்டா3ய
நமோ நம: ||
18 ||
பாவிகளுக்கு
பயங்கரமானவரே! சிறந்த வீரரே! விரைந்து செல்பவரே! உமக்கு நமஸ்காரம்! தாமரைப்பூவை
மலரச் செய்பவரே! உலகிலேயே முதலில் உண்டானவரே! ஸூர்யபகவானே! உமக்கு நமஸ்காரம்!
ब्रह्मोशानाच्युतेशाय सूर्यायादित्यवर्चसे ।
भास्वते सर्वभक्षाय रौद्राय वपुषे नम: ॥ १९ ॥
ப்3ரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயாதி3த்யவர்சஸே |
பா4ஸ்வதே ஸர்வப4க்ஷாய ரௌத்3ராய வபுஷே நம: || 19 ||
ப்ரஹ்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே, ஸூர்யனே! ஒளிவடிவானவரே! எல்லா யாகங்களிலும் கொடுக்கப்படும் ஹவிஸை ஏற்றுக் கொள்பவரே! உக்ரமான சரீரம் கொண்டவரே! உமக்கு நமஸ்காரம்!
तमोघ्नाय
हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने
|
कृतघ्नाय
देवाय ज्योतिशां
पतये नम:
|| २०
||
தமோக்4நாய
ஹிமக்4நாய
சத்ருக்4நாயாமிதாத்மநே |
க்ருதக்4நாய
தே3வாய
ஜ்யோதிசாம் பதயே நம:
|| 20 ||
இருளை விலக்குபவரே! பனியை உருக்குபவரே! எதிரிகளை அழிப்பவரே! அளவற்ற ஆற்றல் கொண்டவரே! செய்நன்றியை மறப்பவரை வீழ்த்துபவரே!
நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே! உமக்கு
நமஸ்காரம்!
तप्तचामीकराभाय वह्नये विश्वकर्मणे ।
नमस्तमोऽभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे ।। २१
।।
தப்தசாமீகராபா4ய
வஹ்நயே விச்வகர்மணே |
நமஸ்தமோऽபி4நிக்4நாய
ருசயே லோகஸாக்ஷிணே ||
21 ||
உருக்கிய
தங்கம் போல ஒளிர்பவரே! இருளை அழிப்பவரே! உலகத்தை உருவாக்குபவரே! அஞ்ஞானமென்னும்
இருளை போக்குபவரே! ப்ரகாசம் மிகுந்தவரே! உலகத்திற்கு சாட்சியானவரே! உமக்கு
நமஸ்காரம்!
नाशयत्येष चै भूतं तदेव सृजति प्रभुः ।
पायत्येष तपत्येष वर्षत्येष गभस्तिभिः ।। २२ ।।
நாசயத்யேஷ
சை பூ4தம் ததே3வ ஸ்ருஜதி ப்ரபு: |
பாயத்யேஷ
தபத்யேஷ வர்ஷத்யேஷ க3ப4ஸ்திபி4: || 22 ||
மஹாப்ரபுவான
இந்த ஸூர்யனே ப்ரளயத்தை உருவாக்குகிறார். மீண்டும் உலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார்.
இவரே பாதுகாக்கிறார். இவரே தவிக்கவும் வைக்கிறார். இவரே தன் கிரணங்களால் மழை பொழிய
வைக்கிறார்.
एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्टतः ।
एष एवाग्निहोत्रं च फलं चैवाग्निहोत्रिणाम् ।।
२३ ।।
ஏஷ
ஸுப்தேஷு ஜாக3ர்தி பூ4தேஷு பரிநிஷ்டத: |
ஏஷ ஏவாக்3நிஹோத்ரம் ச ஃபலம் சைவாக்3நிஹோத்ரிணாம் || 23
||
பிற
அனைத்து பூதங்களும் உறங்கும்போது அந்தர்யாமியாக இந்த ஸூர்யன் விழித்துக்
கொண்டிருக்கிறார். இவரே யாகம் வளர்க்கும் அக்நியாகவும், அந்த அக்நி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.
वेदाश्च क्रतवश्चैव क्रतूनां फलमेव च ।
यानि कृत्यानि लोकेषु सर्व एष रविः प्रभुः ।। २४ ।।
வேதா3ஸ்ச க்ரதவஸ்சைவ க்ரதூநாம் ஃபலமேவ ச |
யாநி
க்ருத்யாநி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு4: || 24 ||
வேதங்களாகவும்
யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும் உலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூலகாரணனாக
இந்த ஸூர்யனே விளங்குகிறார்.
फलश्रुति (ஸ்தோத்ர பாராயண பலன்)
एनमापत्सु कृच्छ्रेषु कान्तारेषु भयेषु च ।
कीर्तयन् पुरुषः कश्चिन्नावसीदति राघव ।। २५ ।।
ஏநமாபத்ஸு
க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு ப4யேஷு ச |
கீர்தயந்
புருஷ: கஸ்சிந்நாவஸீத3தி ராக4வ || 25 ||
ராகவா!
எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்த
வகையான கஷ்டம் நேர்ந்தாலும் சரி, காய்ச்சல்
முதலான உடல் நோய்கள் எப்போது ஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே
பயணம் செய்யும்போது எந்த ஆபத்து எதிர்பட்டாலும் சரி, எப்போது
பயம் தோன்றினாலும் சரி, அப்போது
மேற்கண்ட ஸ்லோகங்களால் ஸூர்யனை துதித்தால் போதும்! எந்தத் துன்பமும் நெருங்க
முடியாது ராகவா!
पूजयस्वैनमेकाग्रे देवदेवं जगत्पतिम् ।
एतत् त्रिगुणितं जप्त्वा युद्धेषु विजयिष्यसि ।। २६ ।।
பூஜயஸ்வைநமேகாக்3ரே தே3வதே3வம் ஜக3த்பதிம் |
ஏதத்
த்ரிகு3ணிம் ஜப்த்வா யுத்3தே4ஷு
விஜயிஷ்யஸி || 26 ||
ஒருநிலைப்பட்ட
மனதுடன் தேவர்களுக்கெல்லாம் தேவனான, உலகத்திற்கே
அதிபதியுமான இந்த ஸூர்யனை வழிபடுவாயாக!
இந்த
ஸ்தோத்ரத்தை மூன்று முறை ஜபித்தாயானால், இந்த யுத்தத்தில்
நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்!
अस्मिन् क्षणे महाबाहो रावणं त्वं वधिष्यसि ।
एवमुक्त्वा तदाऽगस्त्यो जगाम च यथागतम् ।। २७ ।।
அஸ்மின்
க்ஷணே மஹாபா3ஹோ ராவணம் த்வம் வதி4ஷ்யஸி |
ஏவமுக்த்வா
ததா3ऽக3ஸ்த்யோ ஜகா3ம ச யதா2க3தம் || 27 ||
"மனிதருள்
மாணிக்கமே! இந்த கணத்திலேயே நீ ராவணனை வதம் செய்து வெற்றிவாகை
சூடியவனாகிறாய்" என்று சொல்லி, அகத்தியர் ஸ்ரீராமனை ஆசீர்வதித்து
விட்டுச் சென்றார்.
एतच्छ्रुत्वा महातेजा नष्टशोकोऽभवत्तदा ।
धारयामास सुप्रीतो राघवः प्रयतात्मवान् ।। २८ ।।
ஏதச்ச்ருத்வா
மஹாதேஜா நஷ்டசோகோऽப4வத்ததா3 |
தா4ரயாமாஸ ஸுப்ரீதோ ராக4வ: ப்ரயதாத்மவாந் || 28
||
அகத்தியர்
கூறியதைக் கேட்ட இராமன் அப்போதே தன் சோர்வு முற்றிலும் நீங்கியவனானான். மிகுந்த ஸந்தோஷத்துடன்
புது உற்சாகத்துடன் மேற்கண்ட ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினான்.
आदित्यं प्रेक्ष्य जप्त्वा तु परं हर्षमवाप्तवान् ।
त्रिराचम्य शुचिर्भूत्वा धनुरादाय वीर्यवान् ।। २९ ।।
ஆதித்யம்
ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவாந் |
த்ரிராசம்ய
சுசிர்பூ4த்வா த4நுராதா3ய வீர்யவாந் ||
29 ||
மூன்று
முறை நீரெடுத்து ஆசமனம் செய்து பரிசுத்தனாகி, ஸூர்யனைப் பார்த்து
இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்து, புது பலமும், புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடனும் ஸ்ரீராமன் தன் வில்லை எடுத்துக்
கொண்டார்.
रावणं प्रेक्ष्य हृष्टात्मा युद्धाय समुपागमत् ।
सर्वयत्नेन महता वधे तस्य धृतोऽभवत् ।। ३० ।।
ராவணம்
ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்3தா4ய
ஸமுபாக3மத் |
ஸர்வயத்நேந
மஹதா வதே4
தஸ்ய த்4ருதோऽப4வத் || 30 ||
மஹாவீரனான
ஸ்ரீராமன்,
வில்லேந்தியவராய் ஸூர்யனை நோக்கி ஜபம் செய்து பரமானந்தத்தை
அடைந்தார். திடமான மனோபலத்துடன் ராவணனுக்கு எதிரான போருக்குத் தயாரானார். அவனை
வதைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனத்திண்மையாகக் கொண்டார்.
अथ रविरवदन्निरीक्ष्य रामं मुदितनाः परमं प्रहृष्यमाणः ।
निशिचरपतिसंक्ष्यं विदित्वा सुरगणमध्यगतो वचस्त्वरेति ।। ३१ ।।
அத2 ரவிரவத3ந்நிரீக்ஷ்ய ராமம் முதி3தநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண: |
நிசிசரபதிஸம்க்ஷ்யம்
விதி3த்வா ஸுரக3ணமத்4யக3தோ வசஸ்த்வரேதி || 31 ||
அப்பொழுது
தேவகணங்களின் நடுவிலிருந்த ஸூர்யபகவான், உவகை பூத்து உள்ளக்
களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, "ராவண வதத்தை துரிதமாக
முடி" என்று உபதேசித்து ஆசீர்வதித்தார்.
।। इति आदित्यहृदयं मन्त्रस्य ।।
|| இதி ஆதி3த்யஹ்ருதயம் மந்த்ரஸ்ய ||
வால்மீகி
ராமாயணம் யுத்தகாண்டத்தில் ஸூர்யபகவானைப் புகழ்ந்து துதிக்கும்
"ஆதித்யஹ்ருதயம்" என்னும் மந்த்ரம் இவ்வாறு நிறைவடைகிறது.
No comments:
Post a Comment