Monday, April 14, 2025

கனவிலே எழுதி மடித்த கவிதை

24-09-2022


வண்டுறைத் தேனுடை மலருடைத் தண்டிடை

தங்கிடும் வெண்ணிறத் தமுதினைப் பருகிட

தண்டனையக் காலுடை அன்னங்க ளாவிடும்

கெண்டை சூழ்தண்ணரும் பொய்கை சேர்ந்து

தண்டைகள் ஜல்ஜலீ றென்றொ லிக்கும்

காலுடை வஞ்சியர் கொஞ்சிநீ ராடிநீல

கண்டனின் தாளடைந்து நாளுநாளும் வாழ்த்திடும்

அண்டமாளும் எந்தையே! அருமருந்து ஈசனே!

திருவாரூர் திருத்தலத்துறை அருள்மிகு ஶ்ரீ பெரியநாயகி உடனுறை ஶ்ரீபிறவி மருந்தீஸ்வரர் நம் அனைவருக்கும் அருள் புரிவாராக!

ஓம் நம: ஶிவாய!

🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment