#கனவிலே_எழுதி_மடித்த_கவிதை
பாடல் வகை:
1) அம்மே நாராயணா தேவீ நாராயணா
2) சோட்டானிக்கரயம்மே ஜகதம்பிகே
3) ஹரஹர ஶிவனே அருணாசலனே
பாடல்: துணையென நான் உணர்ந்தேன்
ராகம்: ஶுபபந்துவராளி
ஓம் நம: ஶிவாய ஓம்
ஓம் நம: ஶிவாய ஓம்
ஓம் நம: ஶிவாய ஓம்
ஓம் நம: ஶிவாய ஓம்
1)
தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்தவன்
அன்றும் இன்றும் என்றுமி ருப்பவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
2)
நின்றே அறியா நடனம் புரிபவன்
நின்றுமோர் பதியில் அகிலம் ஆள்பவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
3)
திங்கள் கங்கை சடையி லணிந்தவன்
அங்கம் எங்கும் சாம்பல ணிந்தவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
4)
சங்கரிக்கு இடபாகம ளித்தவன்
சங்கில் விஷத்தை அடக்கி யழித்தவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
5)
நுதல்விழியாலே தீமைய ழிப்பவன்
அருள்விழியாலே வரங்கள ளிப்பவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
6)
அரவங்க ளணியாய் உடலில ணிந்தவன்
நறவினும் இனிய மொழிக ளுரைப்பவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
7)
திருவிளையாடல்கள் புரிந்த ருள்பவன்
விதிவிளை யாடலை திருத்தி யருள்பவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
8)
அடவியிலாடி உறவுகள் தருபவன்
சுடலையிலாடி பிறவிய றுப்பவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
9)
பிறவிக் கடலை நீந்தவ ருள்பவன்
உறவுக் கடலின் பந்தம றுப்பவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)
10)
சென்று பணிந்திடும் பக்தரை யெல்லாம்
கன்றைப் பசுவென காத்து அருள்பவன்
துணையென நான் உணர்ந்தேன்
அவனே எந்தன்
துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)