உளதென்றா லுளதாய்
இலதென்றா லிலதாய்
முதலென்றால் முதலாய்
முடிவென்றால் முடிவாய்
உருவென்றா லுருவாய்
அருவென்றா லருவாய்
குருவென்றால் குருவாய்
வருகென்றால் வருவாய்
எண்ணிய எண்ணியாங்குறு உருவே
என்றுமிங்கெமக்கு உறவே
என்றுமெம் கவிக்கு கருவே
நின்னடியே எமக்குத் திருவே
பொன்னம்பலத் தாடும் வடிவே
நின்கருணைக் கிலையொரு முடிவே
🙏திருச்சிற்றம்பலம்🙏