Thursday, August 24, 2017
Sanskrit lessons
ஸம்ஸ்க்ருத பாடம்
Sanskritபாடம் 1 ஆரம்பம்.
பாடத்தை ஆரம்பிக்குமுன் சரஸ்வதி ஸ்துதி:
Sanskritபாடம்2
सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி|
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதா||
இன்றைய பதிவில் அக்ஷராப்யாசம். முதலில் உயிரெழுத்துக்கள். கீழே இணைத்துள்ள படத்திலுள்ளவாறு எழுத்துக்களை எழுதி பழகவும். அவற்றை எவ்வாறு உச்சரிப்பதென்பதற்கு வசதியாக பக்கத்திலேயே தமிழில் கொடுத்துள்ளேன். எழுதி, பழகி எழுத்துக்கள் மனதில் பதிவதற்காக மூன்று தினங்கள் கழித்து மெய்யெழுத்துகள் பற்றிய பதிவு இடம் பெறும்.
Sanskritபாடம்2
स्वकीयाम् नमस्कार:!
இன்றைய பாடத்தில் வ்யஞ்ஜன அக்ஷராணி (व्यन्जन अक्षराणि) எனப்படும் மெய்யெழுத்துகளைப் பற்றி படிக்கப் போகிறோம். இந்த வ்யஞ்ஜன அக்ஷராணியானது மொத்தம் 33 மெய்யெழுத்துகளைக் கொண்டது.
சரியான உச்சரிப்பை உணர்வதற்காக, மெய்யெழுத்துகளோடு "அ" என்பதைச் சேர்த்து உச்சரிப்போம்.
क = (க) ख = (க2) ग = (க3) घ = (க4) ङ = (ங)
च = (ச) छ = (ச2) ज = (ஜ) झ = (ஜ2) ञ = (ஞ)
ट = (ட) ठ = (ட2) ड = (ட3) ढ = (ட4) ण = (ண)
त = (த) थ = (த2) द = (த3) ध = (த4) न = (ந)
प = (ப) फ = (ப2) ब = (ப3) भ = (ப4) म = (ம)
य = (ய) र = (ர) ल = (ல) व = (வ)
श = (ஸ - இதற்கான சரியான தமிழ் வடிவத்தைப் படத்தில் காண்க)
ष = (ஷ) स = (ஸ) ह = (ஹ)
படத்திலுள்ளபடி எழுத்துக்களை எழுதிப் பழகவும். உயிரெழுத்துகள் 13 என்பதால் மூன்று நாட்கள் பயிற்சிக்கு அவகாசம் தரப்பட்டது. மெய்யெழுத்துகள் 33 உள்ளதால் ஒரு வாரம் தரலாமென்றிருக்கிறேன். நண்பர்கள் தங்களுடைய கருத்தைத் தெரிவிக்கவும். இதற்கிடையே, மேற்குறிப்பிட்டுள்ள எழுத்துக்கள் முதலாவதைத் தவிர மீதியுள்ளவற்றின் பின் 2, 3 மற்றும் 4 என எண்கள் தரப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு, க2 என்பதை "பக்கம்" என்பதிலுள்ள "க்க" என்பதைப் போன்று உச்சரிக்க வேண்டும். க3 என்பதை ஆங்கில எழுத்து "ga" போன்று உச்சரிக்க வேண்டும். க4 என்பதை ஆங்கில எழுத்து "ga" + "ஹ" சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
ச2 = இச்சகம் என்பதிலுள்ள "ச்ச" என்பதைப் போன்றும், ஜ2 = "ஜ" வுடன் "ஹ" சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
ட2 = "பட்டம்" என்பதிலுள்ள "ட்ட" போன்றும், ட3 = ஆங்கில எழுத்தான "da" போன்றும், ட4 = ஆங்கில எழுத்தான "da" + "ஹ" சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
த2 = "புத்தகம்" என்பதிலுள்ள "த்த" போன்றும், த3 = ஆங்கில எழுத்தான "dha" போன்றும், த4 = ஆங்கில எழுத்தான "dha"+ "ஹ" சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
ப2 = தமிழ் எழுத்து "ப" உடன் "ஹ" சேர்த்து உச்சரிக்க வேண்டும். ப3 = ஆங்கில எழுத்து "ba" போன்றும், ப4 = ஆங்கில எழுத்து "ba" + "ஹ" சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
धन्यवाद:|
पि.जयरामन्
இரண்டாவது பாடத்தில் வ்யஞ்ஜந அக்ஷராணி பற்றிப் பார்த்தோம். உச்சரிப்பு வசதிக்காக எழுத்துகளோடு "அ"கரம் சேர்த்து வாசித்தோம். இன்று அவற்றை உள்ளபடியே மெய்யெழுத்தாகப் பயிலவுள்ளோம். கீழ்க்காணும் படத்திலுள்ளபடி எழுத்துகளை எழுதிப் பழகவும். உச்சரிப்பு, இரண்டாம் பாடத்தின்போது இணைத்த வீடியோ பதிவுபடி, ஆனால் அகரம் சேர்க்காமல் இருக்க வேண்டும். இவை, ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் பயன்படுத்தப்படும். அவையே சொல்லின் நடுவில் வந்தால் கூட்டெழுத்தாக எழுதவேண்டும். அவ்வாறு கூட்டெழுத்தாக எழுதுவது பற்றி இனிவரும் நாட்களில் பயிலவுள்ளோம். இன்றைய பாடத்தை கசடறக் கற்க அனைவருக்கும் வாழ்த்துகள்!
Subscribe to:
Posts (Atom)